ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - ߘߟߊߡߌߘߊ ߟߎ߫ ߦߌ߬ߘߊ߬ߥߟߊ


ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌ߬ߘߊ߬ߟߌ ߟߝߊߙߌ ߘߏ߫: (198) ߝߐߘߊ ߘߏ߫: ߣߛߌ߬ߡߛߏ ߝߐߘߊ
لَیْسَ عَلَیْكُمْ جُنَاحٌ اَنْ تَبْتَغُوْا فَضْلًا مِّنْ رَّبِّكُمْ ؕ— فَاِذَاۤ اَفَضْتُمْ مِّنْ عَرَفٰتٍ فَاذْكُرُوا اللّٰهَ عِنْدَ الْمَشْعَرِ الْحَرَامِ ۪— وَاذْكُرُوْهُ كَمَا هَدٰىكُمْ ۚ— وَاِنْ كُنْتُمْ مِّنْ قَبْلِهٖ لَمِنَ الضَّآلِّیْنَ ۟
2.198. ஹஜ் செய்யும்போது வியாபாரத்தின் மூலமோ இன்னபிற விஷயங்களின் மூலமோ நீங்கள் ஹலாலான வாழ்வாதாரத்தை தேடிக்கொள்வதில் எவ்விதக் குற்றமுமில்லை. துல்ஹஜ் ஒன்பதாவது நாள் அரஃபாவில் ஒன்றுகூடிய பிறகு பத்தாவது நாள் இரவு முஸ்தலிஃபாவை நோக்கி நீங்கள் சென்றால் அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவுகூருங்கள். முஸ்தலிஃபாவிலுள்ள மஷ்அருல் ஹராமிற்கு பிரதான அடையாளங்கள், ஹஜ் வணக்கவழிபாடுகள் என்பவற்றுக்கு அல்லாஹ் உங்களுக்கு வழிகாட்டியதற்காக அவனை நினைவுகூருங்கள். இதற்கு முன்னர் நீங்கள் அவனுடைய மார்க்கத்தை அறியாது இருந்தீர்கள்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
ߟߝߊߙߌ ߟߎ߫ ߢߊ߬ߕߣߐ ߘߏ߫ ߞߐߜߍ ߣߌ߲߬ ߞߊ߲߬:
• يجب على المؤمن التزود في سفر الدنيا وسفر الآخرة، ولذلك ذكر الله أن خير الزاد هو التقوى.
1.ஒரு முஃமின் உலகப்பயணத்திலும் மறுமைக்கான பயணத்திலும் தயாரிப்புடன் செல்வது கட்டாயமாகும். எனவே தான் தயாரிப்பில் சிறந்தது இறையச்சமே எனக் குறிப்பிடுகிறான்.

• مشروعية الإكثار من ذكر الله تعالى عند إتمام نسك الحج.
2. ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவுபடுத்தும் தருணத்தில் அல்லாஹ்வை மேலதிகமாக நினைவுகூர வேண்டும்.

• اختلاف مقاصد الناس؛ فمنهم من جعل همّه الدنيا، فلا يسأل ربه غيرها، ومنهم من يسأله خير الدنيا والآخرة، وهذا هو الموفَّق.
3. மனிதர்களது நோக்கங்கள் வித்தியாசமானவை. அவர்களில் சிலர் உலகைத் தனது இலக்காகக் கொண்டு தனது இறைவனிடம் அதனை மாத்திரம் கேட்கின்றனர். அவர்களில் இம்மை மறுமையின் நலவுகளைக் கேட்போரும் உள்ளனர். அவர்தான் பாக்கியம் பெற்றவன்.

 
ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌ߬ߘߊ߬ߟߌ ߟߝߊߙߌ ߘߏ߫: (198) ߝߐߘߊ ߘߏ߫: ߣߛߌ߬ߡߛߏ ߝߐߘߊ
ߝߐߘߊ ߟߎ߫ ߦߌ߬ߘߊ߬ߥߟߊ ߞߐߜߍ ߝߙߍߕߍ
 
ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - ߘߟߊߡߌߘߊ ߟߎ߫ ߦߌ߬ߘߊ߬ߥߟߊ

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

ߘߊߕߎ߲߯ߠߌ߲