ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - ߘߟߊߡߌߘߊ ߟߎ߫ ߦߌ߬ߘߊ߬ߥߟߊ


ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌ߬ߘߊ߬ߟߌ ߟߝߊߙߌ ߘߏ߫: (108) ߝߐߘߊ ߘߏ߫: ߖߘߍ߬ߟߊ߬ߛߊߦߌ ߝߐߘߊ
لَا تَقُمْ فِیْهِ اَبَدًا ؕ— لَمَسْجِدٌ اُسِّسَ عَلَی التَّقْوٰی مِنْ اَوَّلِ یَوْمٍ اَحَقُّ اَنْ تَقُوْمَ فِیْهِ ؕ— فِیْهِ رِجَالٌ یُّحِبُّوْنَ اَنْ یَّتَطَهَّرُوْا ؕ— وَاللّٰهُ یُحِبُّ الْمُطَّهِّرِیْنَ ۟
9.108. -நபியே!- இப்படிப்பட்ட பள்ளிவாயிலில் தொழுகைக்காக நயவஞ்சகர்கள் உங்களுக்கு விடுத்துள்ள அழைப்பை ஏற்காதீர். முதன் முதலில் இறையச்சத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட ‘குபா’ பள்ளிவாயிலே நிராகரிப்பின் அடிப்படையில் நிறுவப்பட்ட இந்த பள்ளிவாயிலை விட நீர் நின்று தொழுவதற்குத் தகுதியான பள்ளிவாயிலாகும். அங்கு அழுக்குகளிலிருந்து தண்ணீரின் மூலமும் பாவங்களிலிருந்து பாவமன்னிப்புக் கோரிக்கையின் மூலமும் தூய்மையாவதை விரும்பக்கூடிய மனிதர்கள் இருக்கிறார்கள். அழுக்குகளிலிருந்தும் பாவங்களிலிருந்தும் தூய்மையாக இருக்கக்கூடியவர்களை அல்லாஹ் நேசிக்கின்றான்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
ߟߝߊߙߌ ߟߎ߫ ߢߊ߬ߕߣߐ ߘߏ߫ ߞߐߜߍ ߣߌ߲߬ ߞߊ߲߬:
• محبة الله ثابتة للمتطهرين من الأنجاس البدنية والروحية.
1. உடல் மற்றும் ஆன்மீக அழுக்குகளிலிருந்து தூய்மையாக இருப்பவர்களை அல்லாஹ் நேசிக்கிறான்.

• لا يستوي من عمل عملًا قصد به وجه الله؛ فهذا العمل هو الذي سيبقى ويسعد به صاحبه، مع من قصد بعمله نصرة الكفر ومحاربة المسلمين؛ وهذا العمل هو الذي سيفنى ويشقى به صاحبه.
2. அல்லாஹ்வின் திருப்தியை நாடி ஒரு செயலைச் செய்தவர்களும் தனது செயல் மூலம் நிராகரிப்புக்கு உதவுவதையும் முஸ்லிம்களை எதிர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டவர்களும் சமமாக மாட்டார்கள். அல்லாஹ்வின் திருப்திக்காக செய்யப்பட்ட செயல் நிலைத்திருக்கும். அதனைச் செய்தவர் ஈடேற்றம் பெறுவார். நிராகரிப்பாளர்களுக்கு உதவி செய்வதற்காக செய்யப்பட்ட செயல் அழிந்து விடும். அவ்வாறு செய்பவர்கள் துர்பாக்கியத்திற்கு ஆளாவார்கள்.

• مشروعية الجهاد والحض عليه كانت في الأديان التي قبل الإسلام أيضًا.
3. இஸ்லாத்துக்கு முன்னிருந்த மார்க்கங்களிலும் ஜிஹாத் விதியாக்கப்பட்டிருந்ததுடன் அது ஊக்குவிக்கப்பட்டும் இருந்தது.

• كل حالة يحصل بها التفريق بين المؤمنين فإنها من المعاصي التي يتعين تركها وإزالتها، كما أن كل حالة يحصل بها جمع المؤمنين وائتلافهم يتعين اتباعها والأمر بها والحث عليها.
4. இறைவிசுவாசிகளுக்கு மத்தியில் பிரிவினையைத் தோற்றுவிக்கும் அனைத்து செயல்களும் விடவேண்டிய ஒழிக்கப்பட வேண்டிய பாவங்களாகும். அது போன்றே இறை விசுவாசிகளுக்கு மத்தியில் இணக்கத்தை ஏற்படுத்தும் ஒவ்வொரு செயலும் பின்பற்றப்பட வேண்டியதும் ஏவப்பட்டு ஊக்குவிக்கப்பட வேண்டியதுமாகும்.

 
ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌ߬ߘߊ߬ߟߌ ߟߝߊߙߌ ߘߏ߫: (108) ߝߐߘߊ ߘߏ߫: ߖߘߍ߬ߟߊ߬ߛߊߦߌ ߝߐߘߊ
ߝߐߘߊ ߟߎ߫ ߦߌ߬ߘߊ߬ߥߟߊ ߞߐߜߍ ߝߙߍߕߍ
 
ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - ߘߟߊߡߌߘߊ ߟߎ߫ ߦߌ߬ߘߊ߬ߥߟߊ

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

ߘߊߕߎ߲߯ߠߌ߲