Check out the new design

ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - ߕߊߡߟߌߞߊ߲ ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐߦߌߘߊ ߘߐ߫ * - ߘߟߊߡߌߘߊ ߟߎ߫ ߦߌ߬ߘߊ߬ߥߟߊ


ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌ߬ߘߊ߬ߟߌ ߝߐߘߊ ߘߏ߫: ߣߛߌ߬ߡߛߏ   ߟߝߊߙߌ ߘߏ߫:
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَالَّذِیْنَ هَادُوْا وَالنَّصٰرٰی وَالصّٰبِـِٕیْنَ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ ۪ۚ— وَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟
2.62. இந்த சமூகத்தில் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள், அது போன்று முஹம்மது தூதராக அனுப்பப்படுவதற்கு முன்னுள்ள சமூகத்தில் நம்பிக்கை கொண்ட யூதர்கள், கிருஸ்தவர்கள், சாபீயீன்கள் (அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசம் கொண்ட ஒரு நபியின் சமூகம்) ஆகியோருக்கு அவர்களின் இறைவனிடம் கூலி இருக்கின்றது. மறுமையில் அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. உலகில் இழந்துவிட்ட விஷயங்களுக்காகவும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
وَاِذْ اَخَذْنَا مِیْثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّوْرَ ؕ— خُذُوْا مَاۤ اٰتَیْنٰكُمْ بِقُوَّةٍ وَّاذْكُرُوْا مَا فِیْهِ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ۟
2.63. அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதரின்மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று உறுதியான வாக்குறுதியை நாம் உங்களிடம் வாங்கியதை நினைவுகூருங்கள். இந்த வாக்குறுதியை நீங்கள் மீறாமல் இருப்பதற்காக, உங்களை எச்சரிக்கும் பொருட்டு உங்களுக்கு மேலே மலையை உயர்த்தினோம். நாம் உங்களுக்கு இறக்கிய தவ்ராத்தை அலட்சியமின்றி, முழு ஈடுபாட்டோடு பற்றிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் வேதனையை விட்டு தப்பித்துக்கொள்ளும் பொருட்டு அதனைப் பேணிக்கொள்ளுங்கள், அதிலுள்ளவற்றை சிந்தித்துப் பாருங்கள், அவற்றை செய்வதன் மூலமாக அல்லாஹ்வின் வேதனையை விட்டும் உங்களைக் காத்துக்கொள்ளலாம் என்று உங்களுக்கு கட்டளையிட்டோம்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
ثُمَّ تَوَلَّیْتُمْ مِّنْ بَعْدِ ذٰلِكَ ۚ— فَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَیْكُمْ وَرَحْمَتُهٗ لَكُنْتُمْ مِّنَ الْخٰسِرِیْنَ ۟
2.64. உறுதியான வாக்குறுதி அளித்த பின்னரும் நீங்கள் புறக்கணித்து, அதற்கு மாறாகச் செயல்பட்டீர்கள். அல்லாஹ், உங்கள்மீது கருணைகாட்டி உங்களின் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு உங்களை மன்னித்து அருள்புரியவில்லையெனில் நீங்கள் புறக்கணித்து மாறுசெய்ததனால் நஷ்டமடைந்தவர்களாகி இருப்பீர்கள்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِیْنَ اعْتَدَوْا مِنْكُمْ فِی السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُوْنُوْا قِرَدَةً خٰسِـِٕیْنَ ۟ۚ
2.65. உங்களின் முன்னோர்களைப்பற்றி நீங்கள் நன்கறிந்துள்ளீர்கள். அவர்கள் சனிக்கிழமை மீன்பிடிக்கக்கூடாது என்று தடுக்கப்பட்டிருந்தும் வரம்புமீறினார்கள். தந்திரமாக சனிக்கிழமைக்கு முன்னரே வலையை விரித்து ஞாயிற்றுக்கிழமை வலையில் அகப்பட்ட மீன்களை எடுத்தார்கள். அல்லாஹ் அவர்களின் இந்தத் தந்திரத்திற்குத் தண்டனையாக அவர்களை இழிவுற்ற குரங்குகளாக உருமாற்றினான்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
فَجَعَلْنٰهَا نَكَالًا لِّمَا بَیْنَ یَدَیْهَا وَمَا خَلْفَهَا وَمَوْعِظَةً لِّلْمُتَّقِیْنَ ۟
2.66. இவர்களைப் போன்று செயற்பட்டு அது போன்ற தண்டனையைப் பெறாமலிருப்பதற்காக இந்த ஊரை அருகிலுள்ள ஊர்வாசிகளுக்கும் பின்னால் வரக்கூடியவர்களுக்கும் படிப்பினையாக ஆக்கினோம். அல்லாஹ்வின் தண்டனையையும் தனது வரம்புகளை மீறுவோரைப் பழி தீர்ப்பதையும் அஞ்சக்கூடியவர்களுக்கு நினைவூட்டலாகவும் நாம் இதனை ஆக்கினோம்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
وَاِذْ قَالَ مُوْسٰی لِقَوْمِهٖۤ اِنَّ اللّٰهَ یَاْمُرُكُمْ اَنْ تَذْبَحُوْا بَقَرَةً ؕ— قَالُوْۤا اَتَتَّخِذُنَا هُزُوًا ؕ— قَالَ اَعُوْذُ بِاللّٰهِ اَنْ اَكُوْنَ مِنَ الْجٰهِلِیْنَ ۟
2.67. மூசாவுக்கும் உங்கள் முன்னோர்களுக்கும் நடைபெற்ற உரையாடலை நினைத்துப் பாருங்கள், அல்லாஹ் ஒரு பசுவை அறுக்குமாறு உங்களுக்குக் கட்டளையிடுகிறான் என்று மூசா அவர்களிடம் கூறியபோது, அல்லாஹ்வின் கட்டளையை விரைந்து செயல்படுத்தாமல், எங்களை நீர் கேலி செய்கிறீரா என்று வீம்பாகக் கேட்டார்கள். அதற்கு மூசா, அல்லாஹ்வின் மீது பொய் கூறி மக்களைப் பரிகாசம் செய்பவனாக நான் ஆவதை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன் என்றார்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ یُبَیِّنْ لَّنَا مَا هِیَ ؕ— قَالَ اِنَّهٗ یَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ لَّا فَارِضٌ وَّلَا بِكْرٌ ؕ— عَوَانٌ بَیْنَ ذٰلِكَ ؕ— فَافْعَلُوْا مَا تُؤْمَرُوْنَ ۟
2.68. அல்லாஹ் அறுக்குமாறு கட்டளையிட்ட அந்தப் பசு எப்படிப்பட்டது? என்று கேட்டு உம் இறைவனிடம் பிரார்த்தனை செய்வீராக என்று அவர்கள் கூறினார்கள். அதற்கு மூசா,அது கிழடாகவோ, கன்றாகவோ அல்லாமல் நடுத்தரமானதாக இருக்க வேண்டும். உங்கள் இறைவனின் கட்டளையை விரைந்து செயல்படுத்துங்கள் என்று கூறினார்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ یُبَیِّنْ لَّنَا مَا لَوْنُهَا ؕ— قَالَ اِنَّهٗ یَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ صَفْرَآءُ ۙ— فَاقِعٌ لَّوْنُهَا تَسُرُّ النّٰظِرِیْنَ ۟
2.69. அவர்கள் தங்களின் தர்க்கத்தைத் தொடர்ந்தார்கள். மூசாவிடம், அதன் உண்மையான நிறத்தை எங்களுக்குத் தெளிவுபடுத்துமாறு உம் இறைவனிடம் பிரார்த்திப்பீராக என்று கூறினார்கள். அதற்கு மூசா, அது பார்ப்பவர்கள் பரவசத்தில் ஆழ்த்தக்கூடிய கெட்டியான மஞ்சள்நிற பசுவாகும் என்று அல்லாஹ் கூறுகிறான் என்று கூறினார்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
ߟߝߊߙߌ ߟߎ߫ ߢߊ߬ߕߣߐ ߘߏ߫ ߞߐߜߍ ߣߌ߲߬ ߞߊ߲߬:
• الحُكم المذكور في الآية الأولى لِمَا قبل بعثة النبي صلى الله عليه وسلم، وأما بعد بعثته فإن الدين المَرْضِيَّ عند الله هو الإسلام، لا يقبل غيره، كما قال الله تعالى: ﴿ وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْه ﴾ (آل عمران: 85).
1. இங்கு முதலாவது வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டம் நபி (ஸல்) அவர்களது நபித்துவத்துக்கு முன்னுள்ளதாகும். அவர்களது நபித்துவத்துக்குப் பின் அல்லாஹ் இஸ்லாத்தைத் தவிர வேறு எந்த மாா்க்கத்தையும் ஏற்றுக்கொள்ளமாட்டான். அல்லாஹ் கூறுகிறான்: இஸ்லாமல்லாத மார்க்கத்தை யாராவது எடுத்துக்கொண்டால் அவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படாது. (ஆலுஇம்ரான்: 85)

• قد يُعَجِّلُ الله العقوبة على بعض المعاصي في الدنيا قبل الآخرة؛ لتكون تذكرة يتعظ بها الناس فيحذروا مخالفة أمر الله تعالى.
2. மக்கள் அறிவுரை பெற்று, அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செயல்படுவதை விட்டும் எச்சரிக்கையுடன் இருப்பதற்காக, சில பாவங்களுக்கு மறுமைக்கு முன்னால் இவ்வுலகிலேயே அல்லாஹ் தண்டனை அளித்துவிடுகிறான்.

• أنّ من ضيَّق على نفسه وشدّد عليها فيما ورد موسَّعًا في الشريعة، قد يُعاقَبُ بالتشديد عليه.
3. மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள சலுகைகளை விட்டுவிட்டு தன்னை சிரமத்தில் ஆழ்த்துபவர் சில வேளை சிரமத்தால் தண்டிக்கப்படுவார்.

 
ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌ߬ߘߊ߬ߟߌ ߝߐߘߊ ߘߏ߫: ߣߛߌ߬ߡߛߏ
ߝߐߘߊ ߟߎ߫ ߦߌ߬ߘߊ߬ߥߟߊ ߞߐߜߍ ߝߙߍߕߍ
 
ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - ߕߊߡߟߌߞߊ߲ ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐߦߌߘߊ ߘߐ߫ - ߘߟߊߡߌߘߊ ߟߎ߫ ߦߌ߬ߘߊ߬ߥߟߊ

ߡߍ߲ ߝߘߊߣߍ߲߫ ߞߎ߬ߙߊ߬ߣߊ ߞߘߐߦߌߘߊ ߕߌߙߌ߲ߠߌ߲ ߝߊ߲ߓߊ ߟߊ߫

ߘߊߕߎ߲߯ߠߌ߲