ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

ߞߐߜߍ ߝߙߍߕߍ:close

external-link copy
70 : 2

قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ یُبَیِّنْ لَّنَا مَا هِیَ ۙ— اِنَّ الْبَقَرَ تَشٰبَهَ عَلَیْنَا ؕ— وَاِنَّاۤ اِنْ شَآءَ اللّٰهُ لَمُهْتَدُوْنَ ۟

"எங்களுக்காக உம் இறைவனிடம் பிரார்த்திப்பீராக! அது எது (வேலைக்கு பயன்படுத்தப்பட்டதா இல்லையா)? என எங்களுக்கு அவன் விவரிப்பான். மாடுகள் எங்களுக்கு குழப்பமாகிவிட்டன. நிச்சயமாக நாங்கள் அல்லாஹ் நாடினால் திட்டமாக நேர்வழி பெறுவோம்" எனக் கூறினார்கள். info
التفاسير:

external-link copy
71 : 2

قَالَ اِنَّهٗ یَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ لَّا ذَلُوْلٌ تُثِیْرُ الْاَرْضَ وَلَا تَسْقِی الْحَرْثَ ۚ— مُسَلَّمَةٌ لَّا شِیَةَ فِیْهَا ؕ— قَالُوا الْـٰٔنَ جِئْتَ بِالْحَقِّ ؕ— فَذَبَحُوْهَا وَمَا كَادُوْا یَفْعَلُوْنَ ۟۠

"நிச்சயமாக அது நிலத்தை உழுவதற்கு பயன்படுத்தப்படாத, (விளை) நிலத்திற்கு நீர் இறைக்காத பசு; குறையற்றது; அதில் வடு அறவே இல்லை" என்று அவன் கூறுகிறான் என (மூஸா) கூறினார். "இப்போதுதான் உண்மையைக் கொண்டு வந்தீர்" எனக் கூறி அதை அறுத்தார்கள். அவர்கள் (அதை விரைவாக) செய்ய நெருங்கவில்லை. info
التفاسير:

external-link copy
72 : 2

وَاِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادّٰرَءْتُمْ فِیْهَا ؕ— وَاللّٰهُ مُخْرِجٌ مَّا كُنْتُمْ تَكْتُمُوْنَ ۟ۚ

நீங்கள் ஓர் உயிரைக் கொன்று அதில் நீங்கள் தர்க்கித்த சமயத்தை நினைவு கூருங்கள். நீங்கள் மறைத்திருந்ததை அல்லாஹ் வெளியாக்கக் கூடியவன். info
التفاسير:

external-link copy
73 : 2

فَقُلْنَا اضْرِبُوْهُ بِبَعْضِهَا ؕ— كَذٰلِكَ یُحْیِ اللّٰهُ الْمَوْتٰی وَیُرِیْكُمْ اٰیٰتِهٖ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ ۟

எனவே, "அதில் சில (பாகத்)தைக்கொண்டு அவரை அடியுங்கள்." எனக் கூறினோம். அப்படியே, இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான். நீங்கள் சிந்தித்து புரிவதற்காக தன் அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிக்கிறான். info
التفاسير:

external-link copy
74 : 2

ثُمَّ قَسَتْ قُلُوْبُكُمْ مِّنْ بَعْدِ ذٰلِكَ فَهِیَ كَالْحِجَارَةِ اَوْ اَشَدُّ قَسْوَةً ؕ— وَاِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا یَتَفَجَّرُ مِنْهُ الْاَنْهٰرُ ؕ— وَاِنَّ مِنْهَا لَمَا یَشَّقَّقُ فَیَخْرُجُ مِنْهُ الْمَآءُ ؕ— وَاِنَّ مِنْهَا لَمَا یَهْبِطُ مِنْ خَشْیَةِ اللّٰهِ ؕ— وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ۟

பிறகு, உங்கள் உள்ளங்கள் அதற்குப் பின்னர் இறுகிவிட்டன. அவை கற்களைப் போல் அல்லது இறுக்கத்தால் (அவற்றைவிட) மிகக் கடினமானவையாக உள்ளன. நிச்சயமாக கற்களில் நதிகள் பீறிடக்கூடியவையும் திட்டமாக உண்டு. நிச்சயமாக பிளந்து அதிலிருந்து நீர் வெளியேறக் கூடியதும் திட்டமாக அவற்றில் உண்டு. நிச்சயமாக அல்லாஹ்வுடைய பயத்தால் (உருண்டு) விழக்கூடியதும் திட்டமாக அவற்றில் உண்டு. அல்லாஹ் நீங்கள் செய்வதைப் பற்றி கவனமற்றவனாக இல்லை. info
التفاسير:

external-link copy
75 : 2

اَفَتَطْمَعُوْنَ اَنْ یُّؤْمِنُوْا لَكُمْ وَقَدْ كَانَ فَرِیْقٌ مِّنْهُمْ یَسْمَعُوْنَ كَلٰمَ اللّٰهِ ثُمَّ یُحَرِّفُوْنَهٗ مِنْ بَعْدِ مَا عَقَلُوْهُ وَهُمْ یَعْلَمُوْنَ ۟

உங்களுக்காக அவர்கள் நம்பிக்கை கொள்வதை ஆசைப்படுகிறீர்களா? திட்டமாக அவர்களில் ஒரு பிரிவினர் இருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய பேச்சை செவியுறுகின்றனர். பிறகு, அதை அவர்கள் சிந்தித்து புரிந்த பின்னர் அவர்கள் அறிந்தே அதை மாற்றுகின்றனர். info
التفاسير:

external-link copy
76 : 2

وَاِذَا لَقُوا الَّذِیْنَ اٰمَنُوْا قَالُوْۤا اٰمَنَّا ۖۚ— وَاِذَا خَلَا بَعْضُهُمْ اِلٰی بَعْضٍ قَالُوْۤا اَتُحَدِّثُوْنَهُمْ بِمَا فَتَحَ اللّٰهُ عَلَیْكُمْ لِیُحَآجُّوْكُمْ بِهٖ عِنْدَ رَبِّكُمْ ؕ— اَفَلَا تَعْقِلُوْنَ ۟

அவர்கள் நம்பிக்கையாளர்களைச் சந்தித்தால் "(நாங்களும்) நம்பிக்கை கொள்கிறோம்" எனக் கூறுகிறார்கள். அவர்களில் சிலர் சிலருடன் தனித்து விட்டால், "உங்கள் இறைவன் முன் அதைக் கொண்டு அவர்கள் உங்களிடம் தர்க்கிப்பதற்காக அல்லாஹ் உங்களுக்கு தெரிவித்ததை அவர்களுக்கு அறிவிக்கிறீர்களா?" எனக் கூறுகிறார்கள். நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா? info
التفاسير: