ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

ߞߐߜߍ ߝߙߍߕߍ:close

external-link copy
164 : 2

اِنَّ فِیْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافِ الَّیْلِ وَالنَّهَارِ وَالْفُلْكِ الَّتِیْ تَجْرِیْ فِی الْبَحْرِ بِمَا یَنْفَعُ النَّاسَ وَمَاۤ اَنْزَلَ اللّٰهُ مِنَ السَّمَآءِ مِنْ مَّآءٍ فَاَحْیَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِیْهَا مِنْ كُلِّ دَآبَّةٍ ۪— وَّتَصْرِیْفِ الرِّیٰحِ وَالسَّحَابِ الْمُسَخَّرِ بَیْنَ السَّمَآءِ وَالْاَرْضِ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّعْقِلُوْنَ ۟

நிச்சயமாக வானங்கள் இன்னும் பூமியைப் படைத்திருப்பதிலும், இரவு, பகல் மாறுவதிலும் மனிதர்களுக்கு பலன் தருபவற்றை (ஏற்றி)க் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும், வானத்திலிருந்து அல்லாஹ் (மழை) நீரை இறக்கி, அதன் மூலம் பூமியை அது இறந்த பின்னர் உயிர்ப்பிப்பதிலும், எல்லாக் கால்நடைகளைப் பூமியில் பரப்பியதிலும், காற்றை(ப் பலகோணங்களில்) திருப்பி விடுவதிலும் வானத்திற்கும் பூமிக்கும் இடையில் கட்டுப்படுத்தப்பட்ட மேகத்திலும் சிந்தித்துப் புரிகிற மக்களுக்கு திட்டமாக (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. info
التفاسير:

external-link copy
165 : 2

وَمِنَ النَّاسِ مَنْ یَّتَّخِذُ مِنْ دُوْنِ اللّٰهِ اَنْدَادًا یُّحِبُّوْنَهُمْ كَحُبِّ اللّٰهِ ؕ— وَالَّذِیْنَ اٰمَنُوْۤا اَشَدُّ حُبًّا لِّلّٰهِ ؕ— وَلَوْ یَرَی الَّذِیْنَ ظَلَمُوْۤا اِذْ یَرَوْنَ الْعَذَابَ ۙ— اَنَّ الْقُوَّةَ لِلّٰهِ جَمِیْعًا ۙ— وَّاَنَّ اللّٰهَ شَدِیْدُ الْعَذَابِ ۟

அல்லாஹ்வை அன்றி (பல) இணைகளை எடுத்துக் கொண்டு, அல்லாஹ்வை நேசிப்பதுபோல, அவற்றை நேசிப்பவர்களும் மக்களில் இருக்கிறார்கள். நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் மிகக் கடுமையானவர்கள். அநியாயக்காரர்கள் பார்த்தால் அவர்கள் வேதனையைக் காணும்போது அனைத்து பலமும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியது, வேதனை செய்வதில் அல்லாஹ் கடினமானவன் (என அறிவார்கள்). info
التفاسير:

external-link copy
166 : 2

اِذْ تَبَرَّاَ الَّذِیْنَ اتُّبِعُوْا مِنَ الَّذِیْنَ اتَّبَعُوْا وَرَاَوُا الْعَذَابَ وَتَقَطَّعَتْ بِهِمُ الْاَسْبَابُ ۟

பின்பற்றப்பட்ட (தலை)வர்கள் பின்பற்றியவர்களை விட்டு (மறுமையில்) விலகி, அவர்கள் (அனைவரும்) வேதனையைக் கண்டு, அவர்களுக்கிடையில் (இருந்த) தொடர்புகள் அறுந்துவிடும்போது (பின்பற்றியவர்கள் தங்கள் செயலை நினைத்து துக்கப்படுவார்கள்). info
التفاسير:

external-link copy
167 : 2

وَقَالَ الَّذِیْنَ اتَّبَعُوْا لَوْ اَنَّ لَنَا كَرَّةً فَنَتَبَرَّاَ مِنْهُمْ كَمَا تَبَرَّءُوْا مِنَّا ؕ— كَذٰلِكَ یُرِیْهِمُ اللّٰهُ اَعْمَالَهُمْ حَسَرٰتٍ عَلَیْهِمْ ؕ— وَمَا هُمْ بِخٰرِجِیْنَ مِنَ النَّارِ ۟۠

பின்பற்றியவர்கள் கூறுவார்கள்: (உலகிற்கு ஒருமுறை) திரும்பச் செல்வது நமக்கு முடிந்தால் அவர்கள் எங்களைவிட்டு விலகிக் கொண்டதுபோல் நாங்களும் அவர்களைவிட்டு விலகிக் கொள்வோம். இவ்வாறே, அவர்களின் செயல்களை அவர்களுக்கு மனவேதனைகளாக அல்லாஹ் அவர்களுக்கு காண்பிப்பான். அவர்கள் (நரக) நெருப்பிலிருந்து வெளியேறுபவர்களாக இல்லை. info
التفاسير:

external-link copy
168 : 2

یٰۤاَیُّهَا النَّاسُ كُلُوْا مِمَّا فِی الْاَرْضِ حَلٰلًا طَیِّبًا ؗ— وَّلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّیْطٰنِ ؕ— اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِیْنٌ ۟

மக்களே! பூமியிலுள்ளவற்றில் நல்ல அனுமதிக்கப்பட்டதையே உண்ணுங்கள். ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரி ஆவான். info
التفاسير:

external-link copy
169 : 2

اِنَّمَا یَاْمُرُكُمْ بِالسُّوْٓءِ وَالْفَحْشَآءِ وَاَنْ تَقُوْلُوْا عَلَی اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ۟

அவன் உங்களுக்கு ஏவுவதெல்லாம் தீமையையும், மானக்கேடானதையும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்) கூறுவதையும்தான். info
التفاسير: