Check out the new design

د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژباړه - عبد الحمید باقوي * - د ژباړو فهرست (لړلیک)

XML CSV Excel API
Please review the Terms and Policies

د معناګانو ژباړه سورت: بقره   آیت:
وَلَنْ تَرْضٰی عَنْكَ الْیَهُوْدُ وَلَا النَّصٰرٰی حَتّٰی تَتَّبِعَ مِلَّتَهُمْ ؕ— قُلْ اِنَّ هُدَی اللّٰهِ هُوَ الْهُدٰی ؕ— وَلَىِٕنِ اتَّبَعْتَ اَهْوَآءَهُمْ بَعْدَ الَّذِیْ جَآءَكَ مِنَ الْعِلْمِ ۙ— مَا لَكَ مِنَ اللّٰهِ مِنْ وَّلِیٍّ وَّلَا نَصِیْرٍ ۟ؔ
120. (நபியே!) யூத மற்றும் கிறிஸ்தவர்களுடைய மார்க்கத்தை நீர் பின்பற்றும் வரை உம்மைக் குறித்து அவர்கள் திருப்தியடையவே மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்வின் நேர்வழி(யாகிய இஸ்லாம்)தான் நேரான வழி. (அதையே பின்பற்றுவேன்)'' எனக் கூறிவிடுவீராக. மேலும், உமக்கு (மெய்யான) ஞானம் வந்த பின்னும் அவர்களுடைய விருப்பங்களை பின்பற்றினால் அல்லாஹ்விடத்தில் (அதற்காக விசாரணை செய்யப்படும் நாளில்) உம்மை காப்பவனும் இல்லை; உமக்கு உதவி செய்பவனும் இல்லை.
عربي تفسیرونه:
اَلَّذِیْنَ اٰتَیْنٰهُمُ الْكِتٰبَ یَتْلُوْنَهٗ حَقَّ تِلَاوَتِهٖ ؕ— اُولٰٓىِٕكَ یُؤْمِنُوْنَ بِهٖ ؕ— وَمَنْ یَّكْفُرْ بِهٖ فَاُولٰٓىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ۟۠
121. (நபியே!) எவர்கள் நாம் கொடுத்த (‘தவ்றாத்') வேதத்தை அதன் முறைப்படி (அறிந்து) ஓதுகிறார்களோ அவர்கள், (குர்ஆனாகிய) இதையும் (அவசியம்) நம்பிக்கை கொள்வார்கள். (ஆகவே, அவர்களில்) எவரேனும் இதை நிராகரித்தால் அவர்கள் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்களே!
عربي تفسیرونه:
یٰبَنِیْۤ اِسْرَآءِیْلَ اذْكُرُوْا نِعْمَتِیَ الَّتِیْۤ اَنْعَمْتُ عَلَیْكُمْ وَاَنِّیْ فَضَّلْتُكُمْ عَلَی الْعٰلَمِیْنَ ۟
122. இஸ்ராயீலின் சந்ததிகளே! உங்களுக்கு வழங்கியிருந்த என் அருட்கொடையையும், நிச்சயமாக உங்களை உலக மக்கள் அனைவரையும்விட மேன்மையாக்கி வைத்திருந்த தையும் நினைத்துப் பாருங்கள்.
عربي تفسیرونه:
وَاتَّقُوْا یَوْمًا لَّا تَجْزِیْ نَفْسٌ عَنْ نَّفْسٍ شَیْـًٔا وَّلَا یُقْبَلُ مِنْهَا عَدْلٌ وَّلَا تَنْفَعُهَا شَفَاعَةٌ وَّلَا هُمْ یُنْصَرُوْنَ ۟
123. இன்னும், ஒரு நாளைப் பற்றியும் பயந்து கொள்ளுங்கள். அந்நாளில் ஓர் ஆத்மா மற்றோர் ஆத்மாவுக்கு எவ்வித பயனுமளிக்காது. அதனிடமிருந்து ஒரு பரிகாரமும் ஏற்கப்பட மாட்டாது; எவ்வித பரிந்துரையும் அதற்குப் பயன்தராது. மேலும், அவர்கள் (யாராலும் எவ்வித) உதவியும் செய்யப்பட மாட்டார்கள்.
عربي تفسیرونه:
وَاِذِ ابْتَلٰۤی اِبْرٰهٖمَ رَبُّهٗ بِكَلِمٰتٍ فَاَتَمَّهُنَّ ؕ— قَالَ اِنِّیْ جَاعِلُكَ لِلنَّاسِ اِمَامًا ؕ— قَالَ وَمِنْ ذُرِّیَّتِیْ ؕ— قَالَ لَا یَنَالُ عَهْدِی الظّٰلِمِیْنَ ۟
124. இப்றாஹீமை அவருடைய இறைவன் (பெரும் சோதனையான) பல கட்டளைகளையிட்டு சோதித்த சமயத்தில் அவர் அவற்றை நிறைவு செய்தார். (ஆதலால், இறைவன்) ‘‘நிச்சயமாக நான் உம்மை மனிதர்களுக்கு (நேர்வழி காட்டக்கூடிய) தலைவராக ஆக்கினான்'' எனக் கூறினான். அதற்கு (இப்றாஹீம்) ‘‘என் சந்ததிகளையுமா (தலைவர்களாக ஆக்குவாய்?)'' எனக் கேட்டார். (அதற்கு ‘‘உமது சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களை என் (இந்த) உறுதிமொழி சாராது'' எனக் கூறினான்.
عربي تفسیرونه:
وَاِذْ جَعَلْنَا الْبَیْتَ مَثَابَةً لِّلنَّاسِ وَاَمْنًا ؕ— وَاتَّخِذُوْا مِنْ مَّقَامِ اِبْرٰهٖمَ مُصَلًّی ؕ— وَعَهِدْنَاۤ اِلٰۤی اِبْرٰهٖمَ وَاِسْمٰعِیْلَ اَنْ طَهِّرَا بَیْتِیَ لِلطَّآىِٕفِیْنَ وَالْعٰكِفِیْنَ وَالرُّكَّعِ السُّجُوْدِ ۟
125. (மக்காவில் இப்றாஹீம் கட்டிய ‘கஅபா' என்னும்) வீட்டை மனிதர்கள் ஒதுங்கும் இடமாகவும், (அவர்களுக்கு) பாதுகாப்பு அளிக்கக்கூடியதாகவும் நாம் ஆக்கியிருக்கிறோம். (அதில்) இப்றாஹீம் நின்ற இடத்தை (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தொழும் இடமாக வைத்துக் கொள்ளுங்கள். ‘‘(ஹஜ்ஜூ செய்ய அங்கு வந்து) அதை சுற்றுபவர்களுக்கும், தியானம் புரிய (அதில்) தங்குபவர்களுக்கும், குனிந்து சிரம் பணி(ந்து அதில் தொழு)பவர்களுக்கும் எனது அந்த வீட்டை சுத்தமானதாக ஆக்கி வையுங்கள்'' என்று இப்றாஹீமிடத்திலும் இஸ்மாயீலிடத்திலும் நாம் வாக்குறுதி வாங்கியிருக்கிறோம்.
عربي تفسیرونه:
وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اجْعَلْ هٰذَا بَلَدًا اٰمِنًا وَّارْزُقْ اَهْلَهٗ مِنَ الثَّمَرٰتِ مَنْ اٰمَنَ مِنْهُمْ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاَخِرِ ؕ— قَالَ وَمَنْ كَفَرَ فَاُمَتِّعُهٗ قَلِیْلًا ثُمَّ اَضْطَرُّهٗۤ اِلٰی عَذَابِ النَّارِ ؕ— وَبِئْسَ الْمَصِیْرُ ۟
126. இப்றாஹீம் (இறைவனிடம்) ‘‘என் இறைவனே! (மக்காவாகிய) இதை பாதுகாப்பு அளிக்கும் ஒரு பட்டணமாக ஆக்கி, இதில் வசிப்பவர்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கைக் கொள்கிறாரோ அவருக்கு உணவாகப் பலவகைக் கனிவர்க்கங்களையும் அளித்துவா!'' எனக் கூறியதற்கு (இறைவன் ‘‘என்னை நம்பிக்கை கொள்பவருக்கு நான் உணவளிப்பதுபோல என்னை) நிராகரிப்ப(வனுக்கும் உணவளித்து அ)வனையும் சிறிது காலம் (அங்கு) சுகமனுபவிக்க விட்டுவைப்பேன். பின்னர் நரக வேதனையின் பக்கம் (செல்லும்படி) அவனை நிர்ப்பந்திப்பேன். அவன் செல்லும் (அந்த) இடம் (மிகக்) கெட்டது'' என்று கூறினான்.
عربي تفسیرونه:
 
د معناګانو ژباړه سورت: بقره
د سورتونو فهرست (لړلیک) د مخ نمبر
 
د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژباړه - عبد الحمید باقوي - د ژباړو فهرست (لړلیک)

ژباړه: شیخ عبدالحمید البقاوي.

بندول