Check out the new design

د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژبې ته د المختصر في تفسیر القرآن الکریم ژباړه * - د ژباړو فهرست (لړلیک)


د معناګانو ژباړه سورت: اسراء   آیت:
وَبِالْحَقِّ اَنْزَلْنٰهُ وَبِالْحَقِّ نَزَلَ ؕ— وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا مُبَشِّرًا وَّنَذِیْرًا ۟ۘ
17.105. சத்தியத்தைக்கொண்டே நாம் இந்தக் குர்ஆனை முஹம்மதின் மீது இறக்கியுள்ளோம். அது எவ்வித திரிபு, மாற்றமுமின்றி சத்தியத்தைக்கொண்டே இறங்கியது. -தூதரே!- நாம் உம்மை இறையச்சமுடையோருக்கு சுவனத்தைக்கொண்டு நற்செய்தி கூறக்கூடியவராகவும் நிராகரிப்பாளர்களையும் பாவிகளையும் நரகத்தை விட்டும் எச்சரிப்பவராகவும் அனுப்பியுள்ளோம்.
عربي تفسیرونه:
وَقُرْاٰنًا فَرَقْنٰهُ لِتَقْرَاَهٗ عَلَی النَّاسِ عَلٰی مُكْثٍ وَّنَزَّلْنٰهُ تَنْزِیْلًا ۟
17.106. நீர் மக்களுக்கு குர்ஆனை சிறிது சிறிதாக ஓதி எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காக நாம் அதனை பகுதி பகுதியாக இறக்கி தெளிவாக்கியுள்ளோம். ஏனெனில் அதுதான் புரிந்துகொள்வதற்கு ஏற்றது. நாம் அதனை சந்தர்ப்பங்கள், சூழ்நிலைக்கேற்ப பகுதிபகுதியாக இறக்கியுள்ளோம்.
عربي تفسیرونه:
قُلْ اٰمِنُوْا بِهٖۤ اَوْ لَا تُؤْمِنُوْا ؕ— اِنَّ الَّذِیْنَ اُوْتُوا الْعِلْمَ مِنْ قَبْلِهٖۤ اِذَا یُتْلٰی عَلَیْهِمْ یَخِرُّوْنَ لِلْاَذْقَانِ سُجَّدًا ۟ۙ
17.107. -தூதரே!- நீர் கூறுவீராக: “நீங்கள் அவனை நம்பிக்கைகொள்ளுங்கள். உங்களின் நம்பிக்கையினால் அவனுக்கு எதுவும் அதிகமாகிவிடப்போவதில்லை. அல்லது நம்பிக்கைகொள்ளாமல் இருங்கள். உங்கள் நிராகரிப்பினால் அவனுக்கு எந்த இழப்பும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. முந்தைய இறைவேதங்களைப் படித்தவர்களும் வஹியையும் தூதுத்துவத்தையும் அறிந்தவர்களும் அவர்களிடம் குர்ஆன் எடுத்துரைக்கப்பட்டால் நன்றிசெலுத்தும் விதமாக அல்லாஹ்வுக்கு சிரம்பணிகிறார்கள்.
عربي تفسیرونه:
وَّیَقُوْلُوْنَ سُبْحٰنَ رَبِّنَاۤ اِنْ كَانَ وَعْدُ رَبِّنَا لَمَفْعُوْلًا ۟
17.108. தங்களின் சிரம்பணிதலில், “எங்கள் இறைவன் வாக்குறுதிக்கு மாறுசெய்வதைவிட்டும் தூய்மையானவன். முஹம்மதை தூதராக அனுப்புவேன் என்று அவன் வாக்களித்தது நிறைவேறி விட்டது. நிச்சயமாக எங்கள் இறைவனின் இந்த வாக்குறுதியும் ஏனைய வாக்குறுதிகளும் சந்தேகமின்றி நிறைவேறியே தீரும்” என்று கூறுகிறார்கள்.
عربي تفسیرونه:
وَیَخِرُّوْنَ لِلْاَذْقَانِ یَبْكُوْنَ وَیَزِیْدُهُمْ خُشُوْعًا ۟
17.109. அவர்கள் அல்லாஹ்வின் அச்சத்தால் அழுதவாறு முகங்குப்புற அவனுக்கு சிரம்பணிகிறார்கள். குர்ஆனை அவர்கள் செவியேற்பதால், அதிலுள்ளவற்றை அவர்கள் சிந்திப்பதால் அல்லாஹ்வின் மீதுள்ள அவர்களின் அச்சமும், பணிவும் அதிகரிக்கின்றன.
عربي تفسیرونه:
قُلِ ادْعُوا اللّٰهَ اَوِ ادْعُوا الرَّحْمٰنَ ؕ— اَیًّا مَّا تَدْعُوْا فَلَهُ الْاَسْمَآءُ الْحُسْنٰی ۚ— وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا وَابْتَغِ بَیْنَ ذٰلِكَ سَبِیْلًا ۟
17.110. -தூதரே!- “அல்லாஹ்வே, ரஹ்மானே” என்று நீர் பிரார்த்தனை செய்வதை எதிர்ப்பவர்களிடம் நீர் கூறுவீராக: “அல்லாஹ், ரஹ்மான் இரண்டும் அவனுடைய பெயர்கள்தாம். அவையிரண்டில் எதைக்கொண்டும் அல்லது அவனுடைய மற்ற பெயர்களைக் கொண்டும் அவனை அழையுங்கள். அவனுக்கு அழகிய பெயர்கள் இருக்கின்றன. இந்த இரண்டும் அவனுடைய பெயர்களில் உள்ளவைதாம். நீங்கள் அவற்றைக் கொண்டோ மற்ற அவனுடைய அழகிய பெயர்களைக்கொண்டோ அவனை அழையுங்கள். நீர் இணைவைப்பாளர்கள் கேட்குமளவுக்கு தொழுகையில் சப்தமிட்டு ஓதாதீர். நம்பிக்கையாளர்கள் செவியுறாதவாறு மெதுவாகவும் ஓதாதீர். இரண்டிற்கும் இடைப்பட்ட நடுநிலையான ஒரு வழியைக் கடைப்பிடிப்பீராக.
عربي تفسیرونه:
وَقُلِ الْحَمْدُ لِلّٰهِ الَّذِیْ لَمْ یَتَّخِذْ وَلَدًا وَّلَمْ یَكُنْ لَّهٗ شَرِیْكٌ فِی الْمُلْكِ وَلَمْ یَكُنْ لَّهٗ وَلِیٌّ مِّنَ الذُّلِّ وَكَبِّرْهُ تَكْبِیْرًا ۟۠
17.111. -தூதரே!- நீர் கூறுவீராக: “அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். புகழின் அனைத்து வகைகளுக்கும் அவன் தகுதியானவன். அவன் மகனையோ, இணையையோ விட்டும் தூய்மையானவன். அவனது ஆட்சியதிகாரத்தில் அவனுக்கு எந்த இணையும் இல்லை. அவனுக்கு இழிவு ஏற்படாது. யாருடைய உதவியும் அவனுக்குத் தேவைப்படாது. அவனை அதிகமாக மகத்துவப்படுத்துங்கள். அவனுக்கு மகனையோ ஆட்சியில் பங்காளியையோ உதவியாளனையோ ஏற்படுத்தி விடாதீர்கள்.
عربي تفسیرونه:
په دې مخ کې د ایتونو د فایدو څخه:
• أنزل الله القرآن متضمنًا الحق والعدل والشريعة والحكم الأمثل .
1. சத்தியம், நீதி, ஷரீஅத், சிறந்த தீர்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாக குர்ஆனை அல்லாஹ் இறக்கியுள்ளான்.

• جواز البكاء في الصلاة من خوف الله تعالى.
2. அல்லாஹ்வின் பயத்தால் தொழுகையில் அழலாம்.

• الدعاء أو القراءة في الصلاة يكون بطريقة متوسطة بين الجهر والإسرار.
3. தொழுகையில் குர்ஆன் ஓதுவதும், பிரார்த்தனை செய்வதும் சப்தமாகவோ, மெதுவாகவோ அல்லாமல் நடுநிலையான முறையில் அமைய வேண்டும்.

• القرآن الكريم قد اشتمل على كل عمل صالح موصل لما تستبشر به النفوس وتفرح به الأرواح.
4. உள்ளங்களில் மகிழ்ச்சியை உண்டாக்கும், ஆன்மாக்கள் மகிழ்வுறும் எல்லா நற்செயல்களையும் சங்கையான அல்குர்ஆன் உள்ளடக்கியுள்ளது.

 
د معناګانو ژباړه سورت: اسراء
د سورتونو فهرست (لړلیک) د مخ نمبر
 
د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژبې ته د المختصر في تفسیر القرآن الکریم ژباړه - د ژباړو فهرست (لړلیک)

د مرکز تفسیر للدراسات القرآنیة لخوا خپور شوی.

بندول