Check out the new design

د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژبې ته د المختصر في تفسیر القرآن الکریم ژباړه * - د ژباړو فهرست (لړلیک)


د معناګانو ژباړه سورت: نمل   آیت:
اِنِّیْ وَجَدْتُّ امْرَاَةً تَمْلِكُهُمْ وَاُوْتِیَتْ مِنْ كُلِّ شَیْءٍ وَّلَهَا عَرْشٌ عَظِیْمٌ ۟
27.23. நிச்சயமாக நான் அவர்களை ஒரு பெண் ஆட்சி செய்வதை கண்டேன். அந்தப் பெண்ணுக்கு பலம், ஆட்சியதிகாரத்திற்கான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. அவளிடம் ஒரு மகத்தான அரியணையும் உள்ளது. அதன் மீதிருந்து தன் மக்களின் விவகாரங்களை நிர்வகிக்கிறாள்.
عربي تفسیرونه:
وَجَدْتُّهَا وَقَوْمَهَا یَسْجُدُوْنَ لِلشَّمْسِ مِنْ دُوْنِ اللّٰهِ وَزَیَّنَ لَهُمُ الشَّیْطٰنُ اَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِیْلِ فَهُمْ لَا یَهْتَدُوْنَ ۟ۙ
27.24. அந்தப் பெண்ணும் அவளது சமூகமும் அல்லாஹ்வைவிடுத்து சூரியனுக்குச் சிரம்பணிவதைக் கண்டேன். அவர்கள் செய்யும் இணைவைப்பான காரியங்களையும் பாவங்களையும் ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டியுள்ளான். அவன் அவர்களை சத்தியப் பாதையைவிட்டும் திருப்பிவிட்டான். எனவே அவர்கள் நேரான வழியை அடைமுடியவில்லை.
عربي تفسیرونه:
اَلَّا یَسْجُدُوْا لِلّٰهِ الَّذِیْ یُخْرِجُ الْخَبْءَ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَیَعْلَمُ مَا تُخْفُوْنَ وَمَا تُعْلِنُوْنَ ۟
27.25. வானத்தில் மறைத்திருக்கும் மழையையும் பூமியில் மறைத்திருக்கும் தாவரங்களையும் வெளிப்படுத்துகின்ற, நீங்கள் மறைவாகவும் வெளிப்படையாகவும் செய்பவற்றை அவற்றில் எதுவும் மறையாமல் அறிகின்ற அல்லாஹ் ஒருவனுக்கு மாத்திரமே அவர்கள் சிரம்பணியாமல் இருப்பதற்காக அவர்களின் இணைவைப்பான காரியங்களையும் பாவங்களையும் ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டியுள்ளான்.
عربي تفسیرونه:
اَللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِیْمِ ۟
27.26. அல்லாஹ்வைத் தவிர உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை. அவன் மகத்தான அர்ஷின் அதிபதி.
عربي تفسیرونه:
قَالَ سَنَنْظُرُ اَصَدَقْتَ اَمْ كُنْتَ مِنَ الْكٰذِبِیْنَ ۟
27.27. சுலைமான் ஹூத்ஹூத் பறவையிடம் கூறினார்: “நீ உண்மை கூறினாயா அல்லது நீர் பொய்யர்களில் உள்ளவரா? என்பதை நாங்கள் விரைவில் கண்டுகொள்வோம்.”
عربي تفسیرونه:
اِذْهَبْ بِّكِتٰبِیْ هٰذَا فَاَلْقِهْ اِلَیْهِمْ ثُمَّ تَوَلَّ عَنْهُمْ فَانْظُرْ مَاذَا یَرْجِعُوْنَ ۟
27.28. சுலைமான் ஒரு கடிதம் எழுதி அதை ஹூத்ஹூத் பறவையிடம் ஒப்படைத்து அதனிடம் கூறினார்: “என்னுடைய இந்த கடிதத்தை எடுத்துச் சென்று ஸபஊவாசிகளிடம் ஒப்படைத்துவிடு. பின்னர் ஒதுங்கி நின்று அவர்கள் அது சம்மந்தமாக என்ன பதிலளிக்கிறார்கள் என்பதைக் கேள்.”
عربي تفسیرونه:
قَالَتْ یٰۤاَیُّهَا الْمَلَؤُا اِنِّیْۤ اُلْقِیَ اِلَیَّ كِتٰبٌ كَرِیْمٌ ۟
27.29. அரசி கடிதத்தைப் பெற்றாள். அவள் கூறினாள்: “மதிப்பிற்குரியவர்களே! நிச்சயமாக எனக்கு கண்ணியமான, சங்கையான கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
عربي تفسیرونه:
اِنَّهٗ مِنْ سُلَیْمٰنَ وَاِنَّهٗ بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ ۟ۙ
27.30. சுலைமானிடமிருந்து வந்துள்ள இந்தக் கடிதத்தின் உள்ளடக்கம் அளவிலாக் கருணையாளனும் இணையிலாக் கிருபையாளனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
عربي تفسیرونه:
اَلَّا تَعْلُوْا عَلَیَّ وَاْتُوْنِیْ مُسْلِمِیْنَ ۟۠
27.31. ஆணவம் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வுடன் சூரியனையும் வணங்கும் உங்களின் இணைவைப்பான காரியங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு நான் அழைக்கும் ஓரிறைக்கொள்கையின் பக்கம் அடிபணிந்தவர்களாக என்னிடம் வந்துவிடுங்கள்.”
عربي تفسیرونه:
قَالَتْ یٰۤاَیُّهَا الْمَلَؤُا اَفْتُوْنِیْ فِیْۤ اَمْرِیْ ۚ— مَا كُنْتُ قَاطِعَةً اَمْرًا حَتّٰی تَشْهَدُوْنِ ۟
27.32. அரசி கூறினாள்: “பிரதானிகளே! என் விஷயத்தில் எனக்கு சரியானதைத் தெளிவுபடுத்துங்கள். நீங்கள் என்னிடம் வந்து உங்களின் கருத்துகளை சொல்லாமல் நான் எந்த விடயத்திற்கும் முடிவையும் எடுப்பதில்லை.”
عربي تفسیرونه:
قَالُوْا نَحْنُ اُولُوْا قُوَّةٍ وَّاُولُوْا بَاْسٍ شَدِیْدٍ ۙ۬— وَّالْاَمْرُ اِلَیْكِ فَانْظُرِیْ مَاذَا تَاْمُرِیْنَ ۟
27.33. அவளது சமூகத்தின் தலைவர்கள் கூறினார்கள்: “நாம் பெரும் பலம்மிக்கவர்கள்; போர்க்குணம் மிக்கவர்கள். உமது கருத்தே முடிவானது. எங்களுக்கு என்ன கட்டளையிட வேண்டும் என்பதை நீங்களே முடிவுசெய்துகொள்ளுங்கள். அதனை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் ஆற்றலுள்ளவர்கள்.”
عربي تفسیرونه:
قَالَتْ اِنَّ الْمُلُوْكَ اِذَا دَخَلُوْا قَرْیَةً اَفْسَدُوْهَا وَجَعَلُوْۤا اَعِزَّةَ اَهْلِهَاۤ اَذِلَّةً ۚ— وَكَذٰلِكَ یَفْعَلُوْنَ ۟
27.34. அரசி கூறினாள்: “நிச்சயமாக அரசர்கள் ஓர் ஊரில் நுழைந்தால் கொலை மற்றும் கொள்ளையின் மூலம் அதனை நாசமாக்கிவிடுவார்கள். அந்த ஊரின் கண்ணியவான்களையும் தலைவர்களையும் இழிவானவர்களாக ஆக்கிவிடுகிறார்கள். அரசர்கள் ஓர் ஊரை வெற்றி கொண்டால் அவர்களின் உள்ளங்களில் மரியாதையையும் பயத்தையும் விதைப்பதற்காக எப்போதும் இவ்வாறுதான் செய்வார்கள்.
عربي تفسیرونه:
وَاِنِّیْ مُرْسِلَةٌ اِلَیْهِمْ بِهَدِیَّةٍ فَنٰظِرَةٌ بِمَ یَرْجِعُ الْمُرْسَلُوْنَ ۟
27.35. நிச்சயமாக நான் இக்கடிதத்தை எழுதியவருக்கும் அவருடைய சமூகத்திற்கும் ஒரு அன்பளிப்பை அனுப்பப் போகின்றேன். அதனை அனுப்பிய பிறகு தூதர்கள் என்ன பதிலைக் கொண்டுவரப் போகிறார்கள் என்பதைப் பார்க்கப் போகிறேன்.
عربي تفسیرونه:
په دې مخ کې د ایتونو د فایدو څخه:
• إنكار الهدهد على قوم سبأ ما هم عليه من الشرك والكفر دليل على أن الإيمان فطري عند الخلائق.
1. ஹூத்ஹூத் பறவை சபஊவாசிகளின் நிராகரிப்பையும் இணைவைப்பையும் மறுத்துப் பேசியது நிச்சயமாக படைப்புகளிடத்தில் இறைவன் மீதான நம்பிக்கை இயல்பான ஒன்று என்பதற்கான ஆதாரமாகும்.

• التحقيق مع المتهم والتثبت من حججه.
2. சந்தேக நபரை விசாரணை செய்து, அவரது சான்றுகளை ஊர்ஜிதம் செய்தல்.

• مشروعية الكشف عن أخبار الأعداء.
3. எதிரிகளைப் பற்றிய செய்திகளை அறிவதற்கான அனுமதி.

• من آداب الرسائل افتتاحها بالبسملة.
4. கடிதத்தை அல்லாஹ்வின் பெயரால் தொடங்குவது அதன் ஒழுக்கங்களில் ஒன்றாகும்.

• إظهار عزة المؤمن أمام أهل الباطل أمر مطلوب.
5. அசத்தியவாதிகளுக்கு முன்னால் நம்பிக்கையாளன் தன் கண்ணியத்தை வெளிப்படுத்துவது வேண்டப்பட்ட ஒன்றாகும்.

 
د معناګانو ژباړه سورت: نمل
د سورتونو فهرست (لړلیک) د مخ نمبر
 
د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژبې ته د المختصر في تفسیر القرآن الکریم ژباړه - د ژباړو فهرست (لړلیک)

د مرکز تفسیر للدراسات القرآنیة لخوا خپور شوی.

بندول