Check out the new design

د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژبې ته د المختصر في تفسیر القرآن الکریم ژباړه * - د ژباړو فهرست (لړلیک)


د معناګانو ژباړه سورت: احزاب   آیت:
یَسْـَٔلُكَ النَّاسُ عَنِ السَّاعَةِ ؕ— قُلْ اِنَّمَا عِلْمُهَا عِنْدَ اللّٰهِ ؕ— وَمَا یُدْرِیْكَ لَعَلَّ السَّاعَةَ تَكُوْنُ قَرِیْبًا ۟
33.63. -தூதரே!- இணைவைப்பாளர்களும் யூதர்களும் மறுமையைக் குறித்து, அது எப்போது நிகழும் என்பதைக் குறித்து உம்மிடம் மறுத்து பொய்ப்பிக்கும் விதமாக கேட்கிறார்கள். நீர் அவர்களிடம் கூறுவீராக: “மறுமையைக் குறித்த அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. என்னிடம் அதைப் பற்றிய எந்த அறிவும் இல்லை.” -தூதரே!- நிச்சயமாக மறுமை நெருக்கமாக இருக்கலாம் என்பதை எது உமக்கு உணர்த்தியது?
عربي تفسیرونه:
اِنَّ اللّٰهَ لَعَنَ الْكٰفِرِیْنَ وَاَعَدَّ لَهُمْ سَعِیْرًا ۟ۙ
33.64. நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களை தன் அருளைவிட்டும் தூரமாக்கிவிட்டான். மறுமை நாளில் அவர்களுக்கு கொழுந்து விட்டெரியும் நெருப்பைத் தயார்படுத்தி வைத்துள்ளான். அது அவர்களை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறது.
عربي تفسیرونه:
خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ۚ— لَا یَجِدُوْنَ وَلِیًّا وَّلَا نَصِیْرًا ۟ۚ
33.65. அவர்களுக்காக தயார்படுத்தப்பட்ட அந்த நெருப்பில் அவர்கள் நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்கள். தங்களுக்குப் பயனளிக்கக்கூடிய பொறுப்பாளனையோ, அவர்களை விட்டும் தண்டனையை அகற்றும் உதவியாளனையோ அங்கு அவர்கள் பெறமாட்டார்கள்.
عربي تفسیرونه:
یَوْمَ تُقَلَّبُ وُجُوْهُهُمْ فِی النَّارِ یَقُوْلُوْنَ یٰلَیْتَنَاۤ اَطَعْنَا اللّٰهَ وَاَطَعْنَا الرَّسُوْلَا ۟
33.66. நரக நெருப்பில் அவர்களின் முகங்கள் புரட்டி எடுக்கப்படும் அந்நாளில் கடும் கைசேதத்துடன் அவர்கள் கூறுவார்கள்: “எங்களுக்கு ஏற்பட்ட கேடே! எங்களுக்கு வழங்கப்பட்ட உலக வாழ்க்கையில் நாங்கள் அல்லாஹ்வை வழிப்பட்டு அவனது கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி, தூதருக்கு வழிப்பட்டு, தூதர் தன் இறைவனிடம் இருந்து கொண்டு வந்ததைப் பின்பற்றியிருக்க வேண்டுமே!”
عربي تفسیرونه:
وَقَالُوْا رَبَّنَاۤ اِنَّاۤ اَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَآءَنَا فَاَضَلُّوْنَا السَّبِیْلَا ۟
33.67. இவர்கள் பொய்யான ஆதாரத்தோடு வந்து கூறுவார்கள்: “எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்களின் தலைவர்களுக்கும் எமது சமூகத்தின் பெரியவர்களுக்கும் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை நேரான வழியைவிட்டும் நெறிபிறழச் செய்துவிட்டார்கள்.
عربي تفسیرونه:
رَبَّنَاۤ اٰتِهِمْ ضِعْفَیْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِیْرًا ۟۠
33.68. எங்கள் இறைவா! எங்களை நேரான வழியைவிட்டும் நெறிபிறழச் செய்த எங்களின் இந்த தலைவர்களுக்கும் பெரியவர்களுக்கும் நம்மை வழிகெடுத்ததற்காக எங்களுக்கு வழங்கிய வேதனையில் இருமடங்கு வேதனையை அளிப்பாயாக. உன் அருளை விட்டும் அவர்களை நன்கு தூரமாக்கி விடுவாயாக.
عربي تفسیرونه:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَكُوْنُوْا كَالَّذِیْنَ اٰذَوْا مُوْسٰی فَبَرَّاَهُ اللّٰهُ مِمَّا قَالُوْا ؕ— وَكَانَ عِنْدَ اللّٰهِ وَجِیْهًا ۟
33.69. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! உங்களின் தூதரைத் துன்புறுத்தி மூஸாவைத் துன்புறுத்தியவர்களைப் போல் ஆகிவிடவேண்டாம். அவர்கள் அவரது உடம்பில் குறை கூறினார்கள். அவர்கள் கூறியதிலிருந்து அல்லாஹ் அவரைத் தூய்மையாக்கிவிட்டான். அவர்கள் கூறியவற்றில் அவர் குறையற்றவர் என்பது அவர்களுக்கும் தெளிவானது. அவர் அல்லாஹ்விடத்தில் வேண்டுதல் மறுக்கப்படாத, முயற்சி வீணாக்கப்படாத அந்தஸ்த்துடையவராவார்.
عربي تفسیرونه:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَقُوْلُوْا قَوْلًا سَدِیْدًا ۟ۙ
33.70. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். உண்மையான, சரியான வார்த்தையையே கூறுங்கள்.
عربي تفسیرونه:
یُّصْلِحْ لَكُمْ اَعْمَالَكُمْ وَیَغْفِرْ لَكُمْ ذُنُوْبَكُمْ ؕ— وَمَنْ یُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَقَدْ فَازَ فَوْزًا عَظِیْمًا ۟
33.71. நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி, சரியான வார்த்தையைக் கூறினால் அவன் உங்களின் செயல்களைச் சீராக்குவான்; உங்களிடமிருந்து அவற்றை ஏற்றுக்கொள்வான்; உங்கள் பாவங்களைப் போக்கி, அவற்றின் காரணமாக உங்களைக் குற்றம்பிடிக்க மாட்டான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுபவர் மிகப் பெரும் வெற்றி பெற்றுவிட்டார். அதற்கு இணையான வேறு வெற்றி இல்லை. அது அல்லாஹ்வின் திருப்தியையும் சுவனத்தில் நுழையும் வெற்றியாகும்.
عربي تفسیرونه:
اِنَّا عَرَضْنَا الْاَمَانَةَ عَلَی السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَالْجِبَالِ فَاَبَیْنَ اَنْ یَّحْمِلْنَهَا وَاَشْفَقْنَ مِنْهَا وَحَمَلَهَا الْاِنْسَانُ ؕ— اِنَّهٗ كَانَ ظَلُوْمًا جَهُوْلًا ۟ۙ
33.72. நிச்சயமாக நாம் வானங்கள், பூமி மற்றும் மலைகளுக்கு முன்னால் மார்க்க பொறுப்புகளையும் பாதுகாக்கப்பட வேண்டிய செல்வங்களையும் இரகசியங்களையும் வைத்தபோது அவை அவற்றை ஏற்க முடியாது என்று மறுத்துவிட்டன. அதன் பின்விளைவைக் குறித்து அஞ்சின. ஆனால் மனிதன் அவற்றை ஏற்றுக் கொண்டான். நிச்சயமாக அவன் தனக்குத்தானே அநீதி இழைப்பவனாகவும் அதனைப் பொறுப்பேற்பதன் பின்விளைவைக் குறித்து அறியாதவனாகவும் இருக்கின்றான்.
عربي تفسیرونه:
لِّیُعَذِّبَ اللّٰهُ الْمُنٰفِقِیْنَ وَالْمُنٰفِقٰتِ وَالْمُشْرِكِیْنَ وَالْمُشْرِكٰتِ وَیَتُوْبَ اللّٰهُ عَلَی الْمُؤْمِنِیْنَ وَالْمُؤْمِنٰتِ ؕ— وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا ۟۠
33.73. அல்லாஹ் ஏற்படுத்திய விதிப்படி மனிதன் அவற்றை ஏற்றுக்கொண்டான். இது நயவஞ்சம் கொண்ட ஆண்களையும் பெண்களையும் அவர்களின் நயவஞ்சகத்தின் காரணமாகவும் இணைவைக்கும் ஆண்களையும் பெண்களையும் அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்ததன் காரணமாக அல்லாஹ் தண்டிக்க வேண்டும் என்பதற்காகவும் நம்பிக்கைகொண்ட ஆண்களையும் பெண்களையும் அவர்கள் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை சிறந்த முறையில் நிறைவேற்றியதனால் மன்னிக்க வேண்டும் என்பதற்காகத்தான். அல்லாஹ் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
عربي تفسیرونه:
په دې مخ کې د ایتونو د فایدو څخه:
• اختصاص الله بعلم الساعة.
1. மறுமை நாள் பற்றிய அறிவு அல்லாஹ்விடம் மாத்திரமே உள்ளது.

• تحميل الأتباع كُبَرَاءَهُم مسؤوليةَ إضلالهم لا يعفيهم هم من المسؤولية.
2. பின்பற்றியவர்கள் தமது வழிகேட்டுக்கான பொறுப்பைத் தமது தலைவர்களின் மீது சுமத்துவது அவர்களைப் பொறுப்பிலிருந்து விடுவிக்காது.

• شدة التحريم لإيذاء الأنبياء بالقول أو الفعل.
3. சொல்லாலோ, செயலாலோ நபிமார்களுக்குத் தொல்லையளிப்பது முற்றிலும் தடையாகும்.

• عظم الأمانة التي تحمّلها الإنسان.
4. மனிதன் சுமந்துள்ள அமானிதம் பெரியது (மகத்தானது).

 
د معناګانو ژباړه سورت: احزاب
د سورتونو فهرست (لړلیک) د مخ نمبر
 
د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژبې ته د المختصر في تفسیر القرآن الکریم ژباړه - د ژباړو فهرست (لړلیک)

د مرکز تفسیر للدراسات القرآنیة لخوا خپور شوی.

بندول