د قرآن کریم د معناګانو ژباړه - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - د ژباړو فهرست (لړلیک)


د معناګانو ژباړه آیت: (23) سورت: الشورى
ذٰلِكَ الَّذِیْ یُبَشِّرُ اللّٰهُ عِبَادَهُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ؕ— قُلْ لَّاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ اَجْرًا اِلَّا الْمَوَدَّةَ فِی الْقُرْبٰی ؕ— وَمَنْ یَّقْتَرِفْ حَسَنَةً نَّزِدْ لَهٗ فِیْهَا حُسْنًا ؕ— اِنَّ اللّٰهَ غَفُوْرٌ شَكُوْرٌ ۟
42.23. தன்மீதும் தன் தூதர் மீதும் நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரியும் அடியார்களுக்கு தன் தூதரின் மூலமாக அல்லாஹ் மகத்தான இந்த நற்செய்தியை அளிக்கின்றான். -தூதரே!- நீர் கூறுவீராக: “நான் எடுத்துரைக்கும் இந்த சத்தியத்திற்கு உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. ஆனால் ஒரேயொரு நன்மையை எதிர்பார்க்கிறேன். அதனால் ஏற்படும் நன்மையும் உங்களையே சாரும். அது, நான் உங்களின் உறவினராக இருப்பதால் நீங்கள் என்னை நேசிக்க வேண்டும் என்பதே அதுவாகும். யார் ஒரு நன்மையைச் சம்பாதிப்பாரோ நாம் அவருக்கு அதனை பன்மடங்காக்கித் தருவோம். ஒரு நலவுக்கு அதைப்போன்ற பத்து மடங்கு நன்மையுண்டு. நிச்சயமாக அல்லாஹ் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் தன் திருப்தியை நாடி அவர்கள் செய்யும் நற்செயல்களுக்கு நன்றி பாராட்டுபவனாகவும் இருக்கின்றான்.
عربي تفسیرونه:
په دې مخ کې د ایتونو د فایدو څخه:
• الداعي إلى الله لا يبتغي الأجر عند الناس.
1. அல்லாஹ்வின்பால் அழைக்கும் அழைப்பாளன் மக்களிடம் கூலியை எதிர்பார்க்க மாட்டான்.

• التوسيع في الرزق والتضييق فيه خاضع لحكمة إلهية قد تخفى على كثير من الناس.
2. வாழ்வாதாரம் தாராளமாக வழங்கப்படுவதும் அதில் நெருக்கடி ஏற்படுத்தப்படுவதும் இறைநோக்கத்தின்படியே ஆகும். மக்களில் அதிகமானோர் இதனை அறிந்துகொள்வதில்லை.

• الذنوب والمعاصي من أسباب المصائب.
3. பாவங்கள் துன்பங்களுக்குக் காரணமாக இருக்கின்றன.

 
د معناګانو ژباړه آیت: (23) سورت: الشورى
د سورتونو فهرست (لړلیک) د مخ نمبر
 
د قرآن کریم د معناګانو ژباړه - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - د ژباړو فهرست (لړلیک)

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

بندول