د قرآن کریم د معناګانو ژباړه - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - د ژباړو فهرست (لړلیک)


د معناګانو ژباړه آیت: (48) سورت: الشورى
فَاِنْ اَعْرَضُوْا فَمَاۤ اَرْسَلْنٰكَ عَلَیْهِمْ حَفِیْظًا ؕ— اِنْ عَلَیْكَ اِلَّا الْبَلٰغُ ؕ— وَاِنَّاۤ اِذَاۤ اَذَقْنَا الْاِنْسَانَ مِنَّا رَحْمَةً فَرِحَ بِهَا ۚ— وَاِنْ تُصِبْهُمْ سَیِّئَةٌ بِمَا قَدَّمَتْ اَیْدِیْهِمْ فَاِنَّ الْاِنْسَانَ كَفُوْرٌ ۟
42.48. -தூதரே!- நீர் ஏவும் விஷயங்களை அவர்கள் புறக்கணித்தால் அறிந்துகொள்ளும், அவர்களின் செயல்களைக் கண்காணிக்கும் கண்காணிப்பாளராக நாம் உம்மை அனுப்பவில்லை. நான் கட்டளையிட்டவற்றை எடுத்துரைப்பதைத் தவிர உம்மீது வேறு எந்த பொறுப்பும் இல்லை. அவர்களை விசாரணை செய்வது அல்லாஹ்வின் மீதுள்ள கடமையாகும். நாம் மனிதனுக்கு ஆரோக்கியம், செல்வம் போன்ற அருளை வழங்கி அவனை அனுபவிக்கச் செய்தால் அவன் மகிழ்ச்சியடைகிறான். அவர்களின் பாவங்களின் காரணமாக ஏதேனும் துன்பம், சோதனை மனிதர்களைத் தீண்டிவிட்டால், அல்லாஹ்வின் அருட்கொடைகளை நிராகரிப்பதும், நன்றிகெட்டத்தனமாக நடந்துகொள்வதும் அல்லாஹ் தனது நோக்கத்தின் அடிப்படையில் முடிவுசெய்தவற்றை வெறுப்பதுமே நிச்சயமாக அவர்களின் இயல்பாகும்.
عربي تفسیرونه:
په دې مخ کې د ایتونو د فایدو څخه:
• وجوب المسارعة إلى امتثال أوامر الله واجتناب نواهيه.
1. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்துவதிலும் அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகியிருப்பதிலும் விரைவாகச் செயல்பட வேண்டும்.

• مهمة الرسول البلاغ، والنتائج بيد الله.
2. எடுத்துரைப்பது மட்டுமே தூதர்மீதுள்ள கடமையாகும். முடிவு அல்லாஹ்வின் கையில்தான் உள்ளது.

• هبة الذكور أو الإناث أو جمعهما معًا هو على مقتضى علم الله بما يصلح لعباده، ليس فيها مزية للذكور دون الإناث.
3. ஆண் குழந்தைகளை மாத்திரம் அல்லது பெண்குழந்தைகளை மாத்திரம் அல்லது இரண்டையும் சேர்த்து வழங்குவது தனது அடியார்களுக்கு பொருத்தமானது என அல்லாஹ் அறிந்ததன்படியே நடைபெறுகிறது. இதில் பெண்களை விட ஆண்களுக்கு எந்தச் சிறப்பும் இல்லை.

• يوحي الله تعالى إلى أنبيائه بطرق شتى؛ لِحِكَمٍ يعلمها سبحانه.
4. அல்லாஹ் அவன் அறிந்த நோக்கங்களின்படி தன் நபிமார்களுக்கு பலமுறைகளில் வஹி அறிவிக்கிறான்.

 
د معناګانو ژباړه آیت: (48) سورت: الشورى
د سورتونو فهرست (لړلیک) د مخ نمبر
 
د قرآن کریم د معناګانو ژباړه - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - د ژباړو فهرست (لړلیک)

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

بندول