Check out the new design

د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژبې ته د المختصر في تفسیر القرآن الکریم ژباړه * - د ژباړو فهرست (لړلیک)


د معناګانو ژباړه سورت: انعام   آیت:
وَمَا عَلَی الَّذِیْنَ یَتَّقُوْنَ مِنْ حِسَابِهِمْ مِّنْ شَیْءٍ وَّلٰكِنْ ذِكْرٰی لَعَلَّهُمْ یَتَّقُوْنَ ۟
6.69. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சுபவர்கள் மீது இந்த அநியாயக்காரர்களைக் குறித்து எந்த கேள்விக் கணக்கும் இல்லை. இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சும்பொருட்டு இவர்கள் செய்துகொண்டிருக்கும் தீமைகளை விட்டும் தடுப்பதே அல்லாஹ்வை அஞ்சுபவர்கள் மீதுள்ள கடமையாகும்.
عربي تفسیرونه:
وَذَرِ الَّذِیْنَ اتَّخَذُوْا دِیْنَهُمْ لَعِبًا وَّلَهْوًا وَّغَرَّتْهُمُ الْحَیٰوةُ الدُّنْیَا وَذَكِّرْ بِهٖۤ اَنْ تُبْسَلَ نَفْسٌ بِمَا كَسَبَتْ ۖۗ— لَیْسَ لَهَا مِنْ دُوْنِ اللّٰهِ وَلِیٌّ وَّلَا شَفِیْعٌ ۚ— وَاِنْ تَعْدِلْ كُلَّ عَدْلٍ لَّا یُؤْخَذْ مِنْهَا ؕ— اُولٰٓىِٕكَ الَّذِیْنَ اُبْسِلُوْا بِمَا كَسَبُوْا ۚ— لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِیْمٍ وَّعَذَابٌ اَلِیْمٌ بِمَا كَانُوْا یَكْفُرُوْنَ ۟۠
6.70. தூதரே! தங்களின் மார்க்கத்தைப் பரிகாசம் செய்து வீண் விளையாட்டாக ஆக்கிக் கொண்ட இந்த இணைவைப்பாளர்களை விட்டு விடுவீராக. இவ்வுலகில் உள்ள அற்ப இன்பங்கள் அவர்களை ஏமாற்றிவிட்டது. தூதரே! எவரும் தாம் செய்த தீமைகளின் காரணமாக அழிந்து விடாமல் இருக்க மக்களுக்கு இந்த குர்ஆனைக் கொண்டு அறிவுரை வழங்குவீராக. மறுமை நாளில் அல்லாஹ்வைத் தவிர உதவி செய்யும் உதவியாளனோ அவனுடைய வேதனையிலிருந்து தடுக்கக்கூடிய பரிந்துரையாளனோ யாரும் அவருக்கு இருக்க மாட்டார்கள். அல்லாஹ்வின் வேதனையிலிருந்து விடுபடுவதற்கு ஈடாக எதையேனும் வழங்கினால் அதுவும் ஏற்றுக் கொள்ளப்படாது. மறுமை நாளில், தாங்கள் செய்த பாவங்களின் காரணமாக தன்னை அழிவில் போட்டுக் கொண்டவர்களுக்கு அவர்களது நிராகரிப்பின் காரணமாக கொதிக்கும் நீரும் வேதனைமிக்க தண்டனையும் உண்டு.
عربي تفسیرونه:
قُلْ اَنَدْعُوْا مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا یَنْفَعُنَا وَلَا یَضُرُّنَا وَنُرَدُّ عَلٰۤی اَعْقَابِنَا بَعْدَ اِذْ هَدٰىنَا اللّٰهُ كَالَّذِی اسْتَهْوَتْهُ الشَّیٰطِیْنُ فِی الْاَرْضِ حَیْرَانَ ۪— لَهٗۤ اَصْحٰبٌ یَّدْعُوْنَهٗۤ اِلَی الْهُدَی ائْتِنَا ؕ— قُلْ اِنَّ هُدَی اللّٰهِ هُوَ الْهُدٰی ؕ— وَاُمِرْنَا لِنُسْلِمَ لِرَبِّ الْعٰلَمِیْنَ ۟ۙ
6.71. தூதரே! இந்த இணைவைப்பாளர்களிடம் கேட்பீராக: “எங்களுக்கு நன்மையோ தீமையோ அளிக்க இயலாத இந்த சிலைகளையா நாங்கள் வணங்க வேண்டும்? அல்லாஹ் எங்களுக்கு நேர்வழிகாட்டிய பிறகு ஈமானை நாங்கள் இழந்து, ஷைத்தான்களால் வழிகெடுக்கப்பட்டவன் போல் ஆகலாமா? ஷைத்தான் அவனை செய்வதறியாது தடுமாறித் திரியுமாறு விட்டுவிட்டான். அதே நேரத்தில் அவனை நேரான வழியின் பக்கம் அழைக்கக்கூடிய தோழர்கள் இருந்தும் அவன் அந்த தோழர்களின் அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. தூதரே! நீர் அவர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ் காட்டிய வழியே நேரான வழியாகும். நாங்கள் அல்லாஹ்வை மட்டுமே வணங்கி அவனுக்கே அடிபணியுமாறு அல்லாஹ் எமக்கு ஏவியுள்ளான். அவன்தான் படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவன்.”
عربي تفسیرونه:
وَاَنْ اَقِیْمُوا الصَّلٰوةَ وَاتَّقُوْهُ ؕ— وَهُوَ الَّذِیْۤ اِلَیْهِ تُحْشَرُوْنَ ۟
6.72. நாங்கள் தொழுகையை முறையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனையே அஞ்ச வேண்டும் என்றும் அல்லாஹ் எமக்கு ஏவியுள்ளான். அவனிடமே மறுமைநாளில் அடியார்கள் அனைவரும் - அவர்களின் செயல்களுக்குக் கூலி வழங்குவதற்காக - ஒன்றுதிரட்டப்படுவார்கள்.
عربي تفسیرونه:
وَهُوَ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّ ؕ— وَیَوْمَ یَقُوْلُ كُنْ فَیَكُوْنُ ؕ۬— قَوْلُهُ الْحَقُّ ؕ— وَلَهُ الْمُلْكُ یَوْمَ یُنْفَخُ فِی الصُّوْرِ ؕ— عٰلِمُ الْغَیْبِ وَالشَّهَادَةِ ؕ— وَهُوَ الْحَكِیْمُ الْخَبِیْرُ ۟
6.73. அவன்தான் வானங்களையும் பூமியையும் சத்தியத்தைக் கொண்டு படைத்துள்ளான். அவன் ஏதேனும் ஒன்றைப் பார்த்து ஆகிவிடு என்று கூறும் நாளில் அது ஆகிவிடும். அவன் மறுமைநாளில், ‘எழுந்திருங்கள்’ என்று கூறுவான். அவர்கள் எழுந்திருப்பார்கள். அவனது சொல் நிச்சயமாக நிறைவேறியே தீரும் உண்மையான சொல்லாகும். இஸ்ராஃபீல் இரண்டாது சூர் ஊதும் மறுமை நாளில் ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. வெளிப்படையானதையும் மறைவானதையும் அவன் நன்கறிந்தவன். தன் படைப்பில், நிர்வாகத்தில் அவன் ஞானம்மிக்கவன். அனைத்தையும் அறிந்தவன், எந்த ஒன்றும் அவனை விட்டு மறையாது. மறைவானவையும் அவனிடத்தில் வெளிப்படையானவை போன்றவையே.
عربي تفسیرونه:
په دې مخ کې د ایتونو د فایدو څخه:
• الداعية إلى الله تعالى ليس مسؤولًا عن محاسبة أحد، بل هو مسؤول عن التبليغ والتذكير.
1. எவரையும் விசாரணை செய்வது அல்லாஹ்வின்பால் மக்களை அழைக்கும் அழைப்பாளரின் பொறுப்பல்ல. எடுத்துரைப்பதும் அறிவுரை வழங்குவதுமே அவர் மீதுள்ள பொறுப்பாகும்.

• الوعظ من أعظم وسائل إيقاظ الغافلين والمستكبرين.
2. நல்லுபதேசம் மறதியாளர்களையும் கர்வமிக்கவர்களையும் விழிப்பூட்டும் பிரதானமான வழிகளில் ஒன்றாகும்.

• من دلائل التوحيد: أن من لا يملك نفعًا ولا ضرًّا ولا تصرفًا، هو بالضرورة لا يستحق أن يكون إلهًا معبودًا.
3. எவ்விதமான பலனுக்கோ, தீமைக்கோ, இயங்குவதற்கோ உரிமையற்றவர்கள் ஒருபோதும் வணங்கப்படும் இறைவனாக இருக்கத் தகுதியற்றவர்கள் என்பது அல்லாஹ் மட்டுமே வணங்கப்பட வேண்டும் என்பதற்கான ஆதாரங்களில் ஒன்றாகும்.

 
د معناګانو ژباړه سورت: انعام
د سورتونو فهرست (لړلیک) د مخ نمبر
 
د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژبې ته د المختصر في تفسیر القرآن الکریم ژباړه - د ژباړو فهرست (لړلیک)

د مرکز تفسیر للدراسات القرآنیة لخوا خپور شوی.

بندول