Check out the new design

د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژبې ته د المختصر في تفسیر القرآن الکریم ژباړه * - د ژباړو فهرست (لړلیک)


د معناګانو ژباړه سورت: ممتحنه   آیت:
یٰۤاَیُّهَا النَّبِیُّ اِذَا جَآءَكَ الْمُؤْمِنٰتُ یُبَایِعْنَكَ عَلٰۤی اَنْ لَّا یُشْرِكْنَ بِاللّٰهِ شَیْـًٔا وَّلَا یَسْرِقْنَ وَلَا یَزْنِیْنَ وَلَا یَقْتُلْنَ اَوْلَادَهُنَّ وَلَا یَاْتِیْنَ بِبُهْتَانٍ یَّفْتَرِیْنَهٗ بَیْنَ اَیْدِیْهِنَّ وَاَرْجُلِهِنَّ وَلَا یَعْصِیْنَكَ فِیْ مَعْرُوْفٍ فَبَایِعْهُنَّ وَاسْتَغْفِرْ لَهُنَّ اللّٰهَ ؕ— اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
60.12. தூதரே! மக்கா வெற்றியின் போது இடம்பெற்றது போன்று, நம்பிக்கைகொண்ட பெண்கள் உம்மிடம் வந்து, “அல்லாஹ்வுக்கு யாரையும் இணையாக்க மாட்டோம். அவன் ஒருவனையே வணங்குவோம். திருட மாட்டோம், விபச்சாரம் புரிய மாட்டோம், அறியாமைக்கால வழக்கப்படி எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம், விபச்சாரத்தில் பிறந்த குழந்தைகளை தங்கள் கணவர்களுடன் இணைத்துக் கூற மாட்டோம், ஒப்பாரி வைத்தல், முடியை மழித்தல், சட்டைப்பைகளைக் கிழித்தல் ஆகிவற்றறுக்கான தடைகளைப் பேணுவது போன்ற நன்மையான விஷயங்களில் உமக்கு மாறுசெய்ய மாட்டோம்” என்று உம்மிடம் உறுதிமொழி அளித்தால் நீரும் அவர்களுக்கு உறுதிமொழி அளிப்பீராக. அவர்கள் உம்மிடம் செய்த உறுதிமொழிக்குப்பின் அவர்களின் பாவங்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவீராக. நிச்சயமாக அல்லாஹ் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
عربي تفسیرونه:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَتَوَلَّوْا قَوْمًا غَضِبَ اللّٰهُ عَلَیْهِمْ قَدْ یَىِٕسُوْا مِنَ الْاٰخِرَةِ كَمَا یَىِٕسَ الْكُفَّارُ مِنْ اَصْحٰبِ الْقُبُوْرِ ۟۠
60.13. அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு அவனது மார்க்கத்தின்படி செயற்பட்டவர்களே! மறுமையின் மீது உறுதியாக நம்பிக்கைகொள்ளாமல் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளான மக்களுடன் நட்பு கொள்ளாதீர்கள். மாறாக அவர்கள் மீண்டும் எழுப்புவதை நிராகரித்ததனால், அவர்களில் மரணித்தவர்கள் தம்மிடம் திரும்ப வர மாட்டார்கள் என்று நிராசையடைந்தது போல மறுமை ஏற்படுவதை விட்டும் நிராசையடைந்துவிட்டார்கள்.
عربي تفسیرونه:
په دې مخ کې د ایتونو د فایدو څخه:
• مشروعية مبايعة ولي الأمر على السمع والطاعة والتقوى.
1. ஆட்சித்தலைவர் கூறுவதைக் கேட்டு, வழிப்பட்டு, இறையச்சம் என்பவற்றுக்காக அவரிடம் பைஅத் (ஒப்பந்தம்) செய்யலாம்.

• وجوب الصدق في الأفعال ومطابقتها للأقوال.
2. கூறுபவற்றுக்கு ஏற்ப நடந்து தனது செயலில் உண்மைத் தன்மையைப் பேணுவது கடமையாகும்.

• بيَّن الله للعبد طريق الخير والشر، فإذا اختار العبد الزيغ والضلال ولم يتب فإن الله يعاقبه بزيادة زيغه وضلاله.
3 அல்லாஹ் அடியானுக்கு நலவு, தீமை ஆகியவற்றின் வழியைத் தெளிவுபடுத்தியுள்ளான். அடியான் வழிகேட்டைத் தேர்ந்தெடுத்து அதிலிருந்து மீளவில்லையெனில் அவனது வழிகேட்டை அதிகரிக்கச் செய்து அவனை நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பான்.

 
د معناګانو ژباړه سورت: ممتحنه
د سورتونو فهرست (لړلیک) د مخ نمبر
 
د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژبې ته د المختصر في تفسیر القرآن الکریم ژباړه - د ژباړو فهرست (لړلیک)

د مرکز تفسیر للدراسات القرآنیة لخوا خپور شوی.

بندول