د قرآن کریم د معناګانو ژباړه - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - د ژباړو فهرست (لړلیک)


د معناګانو ژباړه آیت: (148) سورت: الأعراف
وَاتَّخَذَ قَوْمُ مُوْسٰی مِنْ بَعْدِهٖ مِنْ حُلِیِّهِمْ عِجْلًا جَسَدًا لَّهٗ خُوَارٌ ؕ— اَلَمْ یَرَوْا اَنَّهٗ لَا یُكَلِّمُهُمْ وَلَا یَهْدِیْهِمْ سَبِیْلًا ۘ— اِتَّخَذُوْهُ وَكَانُوْا ظٰلِمِیْنَ ۟
7.148. மூஸா தம் இறைவனிடம் இரகசியமாக உரையாடச் சென்ற பிறகு அவரது சமூகத்தார் தங்கள் ஆபரணங்களால் உயிரற்ற, சப்தமிடும் ஒரு காளைக் கன்று உருவமொன்றை உருவாக்கிக் கொண்டார்கள். அந்த காளைக் கன்று அவர்களிடம் பேசவில்லை, பௌதீக, மானசீக எந்த நல்வழியையும் அவர்களுக்கு அது காட்டவில்லை, அவர்களுக்குப் பலனளிக்கவோ அவர்களை விட்டு தீங்கினை அகற்றவோ செய்யவில்லை என்பதை அவர்கள் அறியவில்லையா? அதனை வணங்கப்படும் தெய்வமாக ஆக்கிக் கொண்டார்கள். இதன் மூலம் அவர்கள் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைப்பவர்களாக இருந்தார்கள்.
عربي تفسیرونه:
په دې مخ کې د ایتونو د فایدو څخه:
• على العبد أن يكون من المُظْهِرين لإحسان الله وفضله عليه، فإن الشكر مقرون بالمزيد.
1. அடியான் அவனுக்கு அல்லாஹ் செய்த உபகாரத்தையும் அருளையும் வெளிப்படுத்தக்கூடியவனாக இருக்க வேண்டும். ஏனெனில் நன்றி செலுத்துதல் மென்மேலும் அதிகரிப்பதுடன் இணைந்துள்ளது.

• على العبد الأخذ بالأحسن في الأقوال والأفعال.
2. அடியான் சொற்களிலும் செயல்களிலும் சிறந்தவற்றையே எடுத்துக்கொள்ள வேண்டும்.

• يجب تلقي الشريعة بحزم وجد وعزم على الطاعة وتنفيذ ما ورد فيها من الصلاح والإصلاح ومنع الفساد والإفساد.
3. வழிபடும் உறுதியுடன் மார்க்கத்தை கற்றுக் கொள்வது, சீர்திருந்துதல், சீர்திருத்தல், குழப்பத்தைத் தடுத்தல், குழப்பம் விளைவிப்பதைத் தடுத்தல் போன்ற ஷரீஆவில் உள்ளவற்றை நடைமுறைப்படுத்துவதும் கட்டாயமாகும்.

• على العبد إذا أخطأ أو قصَّر في حق ربه أن يعترف بعظيم الجُرْم الذي أقدم عليه، وأنه لا ملجأ من الله في إقالة عثرته إلا إليه.
4.தனது இறைவனின் உரிமையில் ஒரு அடியான் தவறிழைத்தால் அல்லது குறை செய்தால் தான் செய்த பெரும் தவறை ஏற்றுக்கொள்வதோடு தனது அத்தவறை மன்னிப்பதற்கு அல்லாஹ்வை விட்டால் வேறு புகலிடமில்லை எனவும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 
د معناګانو ژباړه آیت: (148) سورت: الأعراف
د سورتونو فهرست (لړلیک) د مخ نمبر
 
د قرآن کریم د معناګانو ژباړه - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - د ژباړو فهرست (لړلیک)

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

بندول