Check out the new design

د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژبې ته د المختصر في تفسیر القرآن الکریم ژباړه * - د ژباړو فهرست (لړلیک)


د معناګانو ژباړه سورت: غاشیه   آیت:

அல்காஷியா

د سورت د مقصدونو څخه:
التذكير بالآخرة وما فيها من الثواب والعقاب، والنظر في براهين قدرة الله.
மறுமையைக் கொண்டும் அதிலுள்ள கூலி, தண்டனை ஆகியவற்றை ஞாபகமூட்டலும், அல்லாஹ்வின் ஆற்றலுக்கான சான்றுகளை உற்றுநோக்கலும்.

هَلْ اَتٰىكَ حَدِیْثُ الْغَاشِیَةِ ۟ؕ
88.1. -தூதரே!- தன் பயங்கரங்களால் மக்களை சூழ்ந்துகொள்ளக்கூடிய மறுமை நாளின் செய்தி உம்மிடம் வந்ததா?
عربي تفسیرونه:
وُجُوْهٌ یَّوْمَىِٕذٍ خَاشِعَةٌ ۟ۙ
88.2. மறுமை நாளில் மனிதர்கள் நற்பாக்கியசாலிகள் அல்லது துர்பாக்கியசாலிகளாக இருப்பார்கள். துர்பாக்கியசாலிகளின் முகங்கள் இழிவடைந்தவையாக, அடிபணிந்தவையாக இருக்கும்.
عربي تفسیرونه:
عَامِلَةٌ نَّاصِبَةٌ ۟ۙ
88.3. இழுத்துச் செல்லப்படும் சங்கிலிகளாலும் மாட்டப்படும் விலங்குகளாலும் அவை கஷ்டப்பட்டு களைத்துப் போனவையாக இருக்கும்.
عربي تفسیرونه:
تَصْلٰی نَارًا حَامِیَةً ۟ۙ
88.4. அந்த முகங்கள் வெப்பமிக்க நெருப்பில் பிரவேசித்து அதன் சூட்டை அனுபவிக்கும்.
عربي تفسیرونه:
تُسْقٰی مِنْ عَیْنٍ اٰنِیَةٍ ۟ؕ
88.5. கடுமையாக கொதிக்கும் நீருற்றிலிருந்து அவர்கள் தண்ணீர் புகட்டப்படுவார்கள்.
عربي تفسیرونه:
لَیْسَ لَهُمْ طَعَامٌ اِلَّا مِنْ ضَرِیْعٍ ۟ۙ
88.6. காய்ந்தால் விஷமாக மாறிவிடும் ஷிப்ரக் என்று சொல்லப்படும் செடியிலிருந்து வழங்கப்படும் அறுவறுப்பான உணவைத்தவிர வேறு எந்த உணவும் அவர்களுக்கு வழங்கப்படாது.
عربي تفسیرونه:
لَّا یُسْمِنُ وَلَا یُغْنِیْ مِنْ جُوْعٍ ۟ؕ
88.7. அது உண்பவரை கொழுக்க வைக்காது, அவரது பசியையும் போக்காது.
عربي تفسیرونه:
وُجُوْهٌ یَّوْمَىِٕذٍ نَّاعِمَةٌ ۟ۙ
88.8. அந்நாளில் நற்பாக்கியசாலிகளின் முகங்கள் அருட்கொடைகளைப் பெறுவதனால் பொலிவானவையாக, மகிழ்ச்சியானவையாக, அருள் சொறிந்தவையாக இருக்கும்.
عربي تفسیرونه:
لِّسَعْیِهَا رَاضِیَةٌ ۟ۙ
88.9. உலகில் தாம் செய்த செயல்களைக் கொண்டு அவை திருப்தியடைந்திருக்கும். அவை தமது நற்செயல்களுக்கான கூலி பல மடங்காக சேமிக்கப்பட்டிருப்பதைக் கண்டுகொள்ளும்.
عربي تفسیرونه:
فِیْ جَنَّةٍ عَالِیَةٍ ۟ۙ
88.10. உயர்ந்த அந்தஸ்தும் இடமும் உடைய சுவனத்தில் இருக்கும்.
عربي تفسیرونه:
لَّا تَسْمَعُ فِیْهَا لَاغِیَةً ۟ؕ
88.11. அவை சுவனத்தில் தடைசெய்யப்பட்ட வார்த்தையைச் செவிமடுப்பது ஒரு புறமிருக்க வீணான மற்றும் பொய்யான வார்த்தைகளைச் செவியுறாது.
عربي تفسیرونه:
فِیْهَا عَیْنٌ جَارِیَةٌ ۟ۘ
88.12. அந்த சுவனத்தில் வெடித்து ஓடக்கூடிய ஓர் நீருற்று இருக்கும். அவர்கள் நாடியவாறு அதனை ஓடச் செய்வார்கள்.
عربي تفسیرونه:
فِیْهَا سُرُرٌ مَّرْفُوْعَةٌ ۟ۙ
88.13. அங்கு உயர்ந்த கட்டில்கள்.
عربي تفسیرونه:
وَّاَكْوَابٌ مَّوْضُوْعَةٌ ۟ۙ
88.14. பருகுவதற்காக தயார் செய்து வைக்கப்பட்ட குவளைகளும்.
عربي تفسیرونه:
وَّنَمَارِقُ مَصْفُوْفَةٌ ۟ۙ
88.15. வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட தலையணைகளும்.
عربي تفسیرونه:
وَّزَرَابِیُّ مَبْثُوْثَةٌ ۟ؕ
இங்குமங்கும் விரிக்கப்பட்ட பல அதிகமான விரிப்புக்கள் அதிலுண்டு.
عربي تفسیرونه:
اَفَلَا یَنْظُرُوْنَ اِلَی الْاِبِلِ كَیْفَ خُلِقَتْ ۟ۥ
88.17. ஒட்டகத்தை அல்லாஹ் எவ்வாறு படைத்து அதனை மனிதனுக்கு வசப்படுத்தித் தந்துள்ளான்? என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
عربي تفسیرونه:
وَاِلَی السَّمَآءِ كَیْفَ رُفِعَتْ ۟ۥ
88.18. வானத்தை எவ்வாறு அவர்கள் மீது விழாதவாறு அவர்களுக்கு மேலே பாதுகாப்பான கூரையாக அவன் உயர்த்திவைத்துள்ளான் என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
عربي تفسیرونه:
وَاِلَی الْجِبَالِ كَیْفَ نُصِبَتْ ۟ۥ
88.19. பூமி மக்களால் ஆட்டம் காணாமல் இருக்க எவ்வாறு மலைகளை நட்டி அதனை உறுதிப்படுத்தியுள்ளான் என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
عربي تفسیرونه:
وَاِلَی الْاَرْضِ كَیْفَ سُطِحَتْ ۟
88.20. பூமியை எவ்வாறு அவன் விரித்து மனித வாழ்வுக்கேற்றவாறு அதனைத் தயார்செய்து வைத்துள்ளான் என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
عربي تفسیرونه:
فَذَكِّرْ ۫— اِنَّمَاۤ اَنْتَ مُذَكِّرٌ ۟ؕ
88.21. தூதரே! இவர்களுக்கு அறிவுரை வழங்குவீராக. அல்லாஹ்வின் வேதனையிலிருந்து எச்சரிக்கை செய்வீராக. நீர் அறிவுரை வழங்கக்கூடியவர்தாம். அதைத்தவிர உம்மீது எந்தப் பொறுப்பும் இல்லை. நேர்வழியளிக்கும் அதிகாரம் அல்லாஹ்வின் கைவசமே உள்ளது.
عربي تفسیرونه:
لَسْتَ عَلَیْهِمْ بِمُصَۜیْطِرٍ ۟ۙ
88.22. நீர் அவர்களை நம்பிக்கைகொள்ளுமாறு நிர்ப்பந்திப்பதற்கு நீர் அவர்களின் பொறுப்பாளர் அல்ல.
عربي تفسیرونه:
په دې مخ کې د ایتونو د فایدو څخه:
• أهمية تطهير النفس من الخبائث الظاهرة والباطنة.
1. வெளிப்படையான மற்றும் அந்தரங்கமான அழுக்குகளைவிட்டும் மனதைத் தூய்மைப்படுத்துவதன் முக்கியத்துவம் தெளிவாகிறது.

• الاستدلال بالمخلوقات على وجود الخالق وعظمته.
2. படைப்பினங்கள் படைப்பாளனின் இருப்பிற்கும் வல்லமைக்குமான சான்றுகளாகும்.

• مهمة الداعية الدعوة، لا حمل الناس على الهداية؛ لأن الهداية بيد الله.
3. அழைப்பாளனின் கடமை எடுத்துரைப்பது மட்டுமே. மக்களை நேர்வழியில் செலுத்துவது அவன்மீதுள்ள கடமையல்ல. ஏனெனில் நிச்சயமாக நேர்வழியளிக்கும் அதிகாரம் அல்லாஹ்விடமே உள்ளது.

 
د معناګانو ژباړه سورت: غاشیه
د سورتونو فهرست (لړلیک) د مخ نمبر
 
د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژبې ته د المختصر في تفسیر القرآن الکریم ژباړه - د ژباړو فهرست (لړلیک)

د مرکز تفسیر للدراسات القرآنیة لخوا خپور شوی.

بندول