Check out the new design

د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژباړه- د عمر شریف * - د ژباړو فهرست (لړلیک)

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

د معناګانو ژباړه سورت: اعراف   آیت:
وَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖۤ اِلَّاۤ اَنْ قَالُوْۤا اَخْرِجُوْهُمْ مِّنْ قَرْیَتِكُمْ ۚ— اِنَّهُمْ اُنَاسٌ یَّتَطَهَّرُوْنَ ۟
“இவர்களை உங்கள் ஊரிலிருந்து வெளியேற்றுங்கள்” என்று அவர்கள் கூறியது தவிர அவருடைய சமுதாயத்தினரின் பதில் இருக்கவில்லை. நிச்சயமாக இவர்கள் சுத்தமான மனிதர்கள் (என்று கேலியாக கூறினார்கள்).
عربي تفسیرونه:
فَاَنْجَیْنٰهُ وَاَهْلَهٗۤ اِلَّا امْرَاَتَهٗ ۖؗ— كَانَتْ مِنَ الْغٰبِرِیْنَ ۟
ஆக, அவரையும் அவருடைய மனைவியைத் தவிர அவருடைய குடும்பத்தையும் பாதுகாத்தோம். அவள் (தண்டனையில்) தங்கியவர்களில் ஆகிவிட்டாள்.
عربي تفسیرونه:
وَاَمْطَرْنَا عَلَیْهِمْ مَّطَرًا ؕ— فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُجْرِمِیْنَ ۟۠
இன்னும், அவர்கள் மீது (கல்) மழையை பொழியச் செய்தோம். ஆகவே, குற்றவாளிகளின் முடிவு எவ்வாறு ஆகிவிட்டது என்பதை (நபியே!) கவனிப்பீராக.
عربي تفسیرونه:
وَاِلٰی مَدْیَنَ اَخَاهُمْ شُعَیْبًا ؕ— قَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ— قَدْ جَآءَتْكُمْ بَیِّنَةٌ مِّنْ رَّبِّكُمْ فَاَوْفُوا الْكَیْلَ وَالْمِیْزَانَ وَلَا تَبْخَسُوا النَّاسَ اَشْیَآءَهُمْ وَلَا تُفْسِدُوْا فِی الْاَرْضِ بَعْدَ اِصْلَاحِهَا ؕ— ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟ۚ
‘மத்யன்’க்கு அவர்களுடைய சகோதரர் ‘ஷுஐப்’ஐ (தூதராக அனுப்பினோம்). அவர் கூறினார்: “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள். அவன் அன்றி (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் யாரும் உங்களுக்கில்லை. உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு ஓர் அத்தாட்சி திட்டமாக வந்து விட்டது. ஆகவே, அளவையையும் நிறுவையையும் முழுமையாக்குங்கள். இன்னும், மக்களுக்கு அவர்களுடைய பொருள்களைக் குறை(த்து கொடு)க்காதீர்கள். இன்னும், பூமியில் அது சீர்திருத்தப்பட்(டு அதில் சமாதானம் ஏற்பட்)ட பின்னர் கலகம் (குழப்பம், சீர்கேடு) செய்யாதீர்கள். நீங்கள் நம்பிக்கை கொள்பவர்களாக இருந்தால் (நான் கூறும் உபதேசங்களாகிய) இவை உங்களுக்கு சிறந்ததாகும்.”
عربي تفسیرونه:
وَلَا تَقْعُدُوْا بِكُلِّ صِرَاطٍ تُوْعِدُوْنَ وَتَصُدُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ مَنْ اٰمَنَ بِهٖ وَتَبْغُوْنَهَا عِوَجًا ۚ— وَاذْكُرُوْۤا اِذْ كُنْتُمْ قَلِیْلًا فَكَثَّرَكُمْ ۪— وَانْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِیْنَ ۟
“இன்னும், நீங்கள் எல்லாப் பாதையிலும் (மக்களை) அச்சுறுத்தியவர்களாகவும்; அல்லாஹ்வின் பாதையை விட்டு அவனை நம்பிக்கை கொண்டவரை தடுப்பவர்களாகவும்; இன்னும், அதில் கோணலைத் தேடியவர்களாகவும் அமராதீர்கள். இன்னும், நீங்கள் குறைவாக இருந்தபோது அவன் உங்க(ள் எண்ணிக்கைக)ளை அதிகமாக்கிய சமயத்தை நினைவு கூருங்கள். இன்னும், கலகம் செய்பவர்களின் முடிவு எவ்வாறு இருந்தது என்று கவனியுங்கள்!”
عربي تفسیرونه:
وَاِنْ كَانَ طَآىِٕفَةٌ مِّنْكُمْ اٰمَنُوْا بِالَّذِیْۤ اُرْسِلْتُ بِهٖ وَطَآىِٕفَةٌ لَّمْ یُؤْمِنُوْا فَاصْبِرُوْا حَتّٰی یَحْكُمَ اللّٰهُ بَیْنَنَا ۚ— وَهُوَ خَیْرُ الْحٰكِمِیْنَ ۟
“உங்களில் ஒரு பிரிவினர் நான் எதைக் கொண்டு அனுப்பப்பட்டேனோ அதை நம்பிக்கை கொண்டவர்களாக இருந்து, (வேறு) ஒரு பிரிவினர் (அதை) நம்பிக்கை கொள்ளாதவர்களாக இருந்தால், - நமக்கு மத்தியில் அல்லாஹ் தீர்ப்பளிக்கின்ற வரை பொறுமையாக இருங்கள். தீர்ப்பளிப்பவர்களில் அவன் மிகச் சிறந்தவன்.”
عربي تفسیرونه:
 
د معناګانو ژباړه سورت: اعراف
د سورتونو فهرست (لړلیک) د مخ نمبر
 
د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژباړه- د عمر شریف - د ژباړو فهرست (لړلیک)

شیخ عمر شریف بن عبد السلام ژباړلی دی.

بندول