د قرآن کریم د معناګانو ژباړه - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

د مخ نمبر:close

external-link copy
43 : 10

وَمِنْهُمْ مَّنْ یَّنْظُرُ اِلَیْكَ ؕ— اَفَاَنْتَ تَهْدِی الْعُمْیَ وَلَوْ كَانُوْا لَا یُبْصِرُوْنَ ۟

உம் பக்கம் பார்ப்பவரும் அவர்களில் உண்டு. குருடர்களை அவர்கள் பார்க்காதவர்களாக இருந்தாலும் நீர் நேர்வழி செலுத்துவீரா? info
التفاسير:

external-link copy
44 : 10

اِنَّ اللّٰهَ لَا یَظْلِمُ النَّاسَ شَیْـًٔا وَّلٰكِنَّ النَّاسَ اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟

நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு ஒரு சிறிதும் அநீதியிழைக்க மாட்டான். எனினும், மனிதர்கள் தங்களுக்கே அநீதீயிழைக்கின்றனர். info
التفاسير:

external-link copy
45 : 10

وَیَوْمَ یَحْشُرُهُمْ كَاَنْ لَّمْ یَلْبَثُوْۤا اِلَّا سَاعَةً مِّنَ النَّهَارِ یَتَعَارَفُوْنَ بَیْنَهُمْ ؕ— قَدْ خَسِرَ الَّذِیْنَ كَذَّبُوْا بِلِقَآءِ اللّٰهِ وَمَا كَانُوْا مُهْتَدِیْنَ ۟

அவன் அவர்களை ஒன்று சேர்க்கும் நாளில் பகலில் ஒரு (சொற்ப) நேரத்தைத் தவிர (உலகில்) தாங்கள் தங்கவில்லை (என்று அவர்கள் எண்ணுவர்), தங்களுக்குள் (ஒருவரையொருவர்) அறிந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்ப்பித்தவர்கள் திட்டமாக நஷ்டமடைந்தார்கள். அவர்கள் நேர்வழி பெற்றவர்களாக இருக்கவில்லை. info
التفاسير:

external-link copy
46 : 10

وَاِمَّا نُرِیَنَّكَ بَعْضَ الَّذِیْ نَعِدُهُمْ اَوْ نَتَوَفَّیَنَّكَ فَاِلَیْنَا مَرْجِعُهُمْ ثُمَّ اللّٰهُ شَهِیْدٌ عَلٰی مَا یَفْعَلُوْنَ ۟

(நபியே!) நாம் அவர்களுக்கு வாக்களிக்கும் (வேதனைகளில்) சிலவற்றை (உம் வாழ்விலேயே) உமக்கு காண்பிப்போம்; அல்லது (அதற்கு முன்) உம்மை கைப்பற்றிக் கொள்வோம். (எவ்வாறாயினும்) அவர்களுடைய மீளுமிடம் நம் பக்கமே. பிறகு, அல்லாஹ் அவர்கள் செய்தவற்றிற்கு சாட்சியாக இருப்பான். info
التفاسير:

external-link copy
47 : 10

وَلِكُلِّ اُمَّةٍ رَّسُوْلٌ ۚ— فَاِذَا جَآءَ رَسُوْلُهُمْ قُضِیَ بَیْنَهُمْ بِالْقِسْطِ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟

ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு தூதர் (அனுப்பப்பட்டார்). அவர்களுடைய தூதர் (மறுமையில்) வரும்போது அவர்களுக்கிடையில் நீதமாக தீர்ப்பளிக்கப்படும். அவர்கள் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
48 : 10

وَیَقُوْلُوْنَ مَتٰی هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟

“நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (வேதனையின்) இந்த வாக்கு எப்போது (வரும்)?” என்று அவர்கள் கேட்கின்றனர். info
التفاسير:

external-link copy
49 : 10

قُلْ لَّاۤ اَمْلِكُ لِنَفْسِیْ ضَرًّا وَّلَا نَفْعًا اِلَّا مَا شَآءَ اللّٰهُ ؕ— لِكُلِّ اُمَّةٍ اَجَلٌ ؕ— اِذَا جَآءَ اَجَلُهُمْ فَلَا یَسْتَاْخِرُوْنَ سَاعَةً وَّلَا یَسْتَقْدِمُوْنَ ۟

(அதற்கு நபியே!) கூறுவீராக! “அல்லாஹ் நாடியதைத் தவிர (எவ்வித) தீமைக்கோ நன்மைக்கோ நான் எனக்கு உரிமை பெறமாட்டேன். ஒவ்வொரு வகுப்பாருக்கும் ஒரு (குறிப்பிட்ட) தவணையுண்டு. அவர்களுடைய தவணை வந்தால் ஒரு சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.” info
التفاسير:

external-link copy
50 : 10

قُلْ اَرَءَیْتُمْ اِنْ اَتٰىكُمْ عَذَابُهٗ بَیَاتًا اَوْ نَهَارًا مَّاذَا یَسْتَعْجِلُ مِنْهُ الْمُجْرِمُوْنَ ۟

(மேலும்) கூறுவீராக: “அவனுடைய வேதனை இரவில் அல்லது பகலில் உங்களுக்கு வந்தால்... (அதை நீங்கள் தடுத்துவிட முடியுமா?) (நபியே!) எதை (இக்)குற்றவாளிகள் அவசரமாகத் தேடுகின்றனர்? என்று கூறுவீராக” info
التفاسير:

external-link copy
51 : 10

اَثُمَّ اِذَا مَا وَقَعَ اٰمَنْتُمْ بِهٖ ؕ— آٰلْـٰٔنَ وَقَدْ كُنْتُمْ بِهٖ تَسْتَعْجِلُوْنَ ۟

“அங்கே (அந்த வேதனை) நிகழ்ந்தால் அதைக் கொண்டு நீங்கள் நம்பிக்கை கொள்வீர்களா? இப்போதுதானா (உங்களுக்கு நம்பிக்கை வருகிறது)? அதையோ நீங்கள் திட்டமாக அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்கள்!” info
التفاسير:

external-link copy
52 : 10

ثُمَّ قِیْلَ لِلَّذِیْنَ ظَلَمُوْا ذُوْقُوْا عَذَابَ الْخُلْدِ ۚ— هَلْ تُجْزَوْنَ اِلَّا بِمَا كُنْتُمْ تَكْسِبُوْنَ ۟

அநியாயம் செய்தவர்களை நோக்கி “நிலையான வேதனையை சுவையுங்கள். நீங்கள் செய்துகொண்டிருந்ததற்கே தவிர நீங்கள் கூலி கொடுக்கப்படுகிறீர்களா?” என்றும் கூறப்படும். info
التفاسير:

external-link copy
53 : 10

وَیَسْتَنْۢبِـُٔوْنَكَ اَحَقٌّ هُوَ ؔؕ— قُلْ اِیْ وَرَبِّیْۤ اِنَّهٗ لَحَقٌّ ؔؕ— وَمَاۤ اَنْتُمْ بِمُعْجِزِیْنَ ۟۠

(நபியே!) “அது உண்மைதானா?” என்று அவர்கள் உம்மிடம் செய்தி கேட்கின்றனர். கூறுவீராக! “ஆம். என் இறைவன் மீது சத்தியமாக, நிச்சயமாக அது உண்மைதான்! நீங்கள் பலவீனப்படுத்துபவர்கள் அல்லர்” info
التفاسير: