د قرآن کریم د معناګانو ژباړه - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

د مخ نمبر:close

external-link copy
5 : 12

قَالَ یٰبُنَیَّ لَا تَقْصُصْ رُءْیَاكَ عَلٰۤی اِخْوَتِكَ فَیَكِیْدُوْا لَكَ كَیْدًا ؕ— اِنَّ الشَّیْطٰنَ لِلْاِنْسَانِ عَدُوٌّ مُّبِیْنٌ ۟

“என்னருமை மகனே! உன் கனவை உன் சகோதரர்களிடம் விவரிக்காதே. அவர்கள் உனக்கொரு சூழ்ச்சியை சூழ்ச்சி செய்வார்கள். நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்கு பகிரங்கமான எதிரியாவான்” என்று (யஅகூப்) கூறினார். info
التفاسير:

external-link copy
6 : 12

وَكَذٰلِكَ یَجْتَبِیْكَ رَبُّكَ وَیُعَلِّمُكَ مِنْ تَاْوِیْلِ الْاَحَادِیْثِ وَیُتِمُّ نِعْمَتَهٗ عَلَیْكَ وَعَلٰۤی اٰلِ یَعْقُوْبَ كَمَاۤ اَتَمَّهَا عَلٰۤی اَبَوَیْكَ مِنْ قَبْلُ اِبْرٰهِیْمَ وَاِسْحٰقَ ؕ— اِنَّ رَبَّكَ عَلِیْمٌ حَكِیْمٌ ۟۠

“இவ்வாறே உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுப்பான். (கனவைப் பற்றிய) பேச்சுகளின் (முடிவான) விளக்கத்திலிருந்து உனக்குக் கற்பிப்பான். உம்மீதும், யஅகூபின் (மற்ற) கிளையார் மீதும் அவன்தன் அருளை முழுமையாக்குவான், முன்னர் உன் இரு பாட்டன்களான இப்ராஹீம், இஸ்ஹாக் மீது அதை முழுமைப்படுத்தியது போன்று. நிச்சயமாக உன் இறைவன் நன்கறிந்தவன், மகா ஞானவான்.” info
التفاسير:

external-link copy
7 : 12

لَقَدْ كَانَ فِیْ یُوْسُفَ وَاِخْوَتِهٖۤ اٰیٰتٌ لِّلسَّآىِٕلِیْنَ ۟

யூஸுஃப் இன்னும் அவரது சகோதரர்களில் (அவர்களைப் பற்றி) வினவுகின்றவர்களுக்கு (பல) அத்தாட்சிகள் திட்டவட்டமாக இருக்கின்றன. info
التفاسير:

external-link copy
8 : 12

اِذْ قَالُوْا لَیُوْسُفُ وَاَخُوْهُ اَحَبُّ اِلٰۤی اَبِیْنَا مِنَّا وَنَحْنُ عُصْبَةٌ ؕ— اِنَّ اَبَانَا لَفِیْ ضَلٰلٍ مُّبِیْنِ ۟ۙۖ

நாம் ஒரு (பெரும்) கூட்டமாக இருக்க, திட்டமாக யூஸுஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்கள் ஆவர். (இதில்) நிச்சயமாக நம் தந்தை பகிரங்கமான தவறில்தான் இருக்கிறார்” என்று கூறிய சமயத்தை நினைவு கூருவீராக. info
التفاسير:

external-link copy
9 : 12

١قْتُلُوْا یُوْسُفَ اَوِ اطْرَحُوْهُ اَرْضًا یَّخْلُ لَكُمْ وَجْهُ اَبِیْكُمْ وَتَكُوْنُوْا مِنْ بَعْدِهٖ قَوْمًا صٰلِحِیْنَ ۟

“யூஸுஃபைக் கொல்லுங்கள். அல்லது பூமியில் (எங்கேனும்) அவரை எறியுங்கள். (அதன் பின்) உங்கள் தந்தையின் முகம் உங்களுக்கு (மட்டும்) தனியாகிவிடும், இதன் பின்னர், நீங்கள் (திருந்தி) நல்ல மக்களாக மாறிவிடுவீர்கள்.” info
التفاسير:

external-link copy
10 : 12

قَالَ قَآىِٕلٌ مِّنْهُمْ لَا تَقْتُلُوْا یُوْسُفَ وَاَلْقُوْهُ فِیْ غَیٰبَتِ الْجُبِّ یَلْتَقِطْهُ بَعْضُ السَّیَّارَةِ اِنْ كُنْتُمْ فٰعِلِیْنَ ۟

அவர்களில் கூறுபவர் ஒருவர், “யூஸுஃபை கொல்லாதீர்கள். நீங்கள் (அவருக்கு கெடுதல்) செய்பவர்களாக இருந்தால் கிணற்றின் ஆழத்தில் அவரைப் போ(ட்டு வி)டுங்கள். வழிப்போக்கர்களில் சிலர் அவரை எடுத்துக் கொள்வார்கள்” என்று கூறினார். info
التفاسير:

external-link copy
11 : 12

قَالُوْا یٰۤاَبَانَا مَا لَكَ لَا تَاْمَنَّا عَلٰی یُوْسُفَ وَاِنَّا لَهٗ لَنٰصِحُوْنَ ۟

“எங்கள் தந்தையே! உமக்கு என்ன நேர்ந்தது? யூஸுஃப் விஷயத்தில் நீங்கள் எங்களை நம்புவதில்லை? நிச்சயமாக நாங்கள் அவருக்கு நன்மையை நாடுபவர்கள்தான்” என்று கூறினர். info
التفاسير:

external-link copy
12 : 12

اَرْسِلْهُ مَعَنَا غَدًا یَّرْتَعْ وَیَلْعَبْ وَاِنَّا لَهٗ لَحٰفِظُوْنَ ۟

“நாளை அவரை எங்களுடன் அனுப்புவீராக. அவர் மகிழ்ச்சியாக இருப்பார், விளையாடுவார். நிச்சயமாக நாங்கள் அவரை பாதுகாப்பவர்கள்தான்.” info
التفاسير:

external-link copy
13 : 12

قَالَ اِنِّیْ لَیَحْزُنُنِیْۤ اَنْ تَذْهَبُوْا بِهٖ وَاَخَافُ اَنْ یَّاْكُلَهُ الذِّئْبُ وَاَنْتُمْ عَنْهُ غٰفِلُوْنَ ۟

“நிச்சயமாக நான், நீங்கள் அவரை அழைத்துச் செல்வது எனக்கு கவலையளிக்கும். நீங்கள் (விளையாட்டில்) அவரை விட்டு கவனமற்றவர்களாக இருக்க, ஓநாய் அவரை தின்றுவிடுவதைப் பயப்படுகிறேன்” என்று கூறினார். info
التفاسير:

external-link copy
14 : 12

قَالُوْا لَىِٕنْ اَكَلَهُ الذِّئْبُ وَنَحْنُ عُصْبَةٌ اِنَّاۤ اِذًا لَّخٰسِرُوْنَ ۟

“நாங்கள் ஒரு கூட்டமாக இருக்க, அவரை ஓநாய் தின்றால் நிச்சயமாக நாங்கள் அப்போது நஷ்டவாளிகள்தான்” என்று கூறினர். info
التفاسير: