د قرآن کریم د معناګانو ژباړه - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

د مخ نمبر:close

external-link copy
59 : 17

وَمَا مَنَعَنَاۤ اَنْ نُّرْسِلَ بِالْاٰیٰتِ اِلَّاۤ اَنْ كَذَّبَ بِهَا الْاَوَّلُوْنَ ؕ— وَاٰتَیْنَا ثَمُوْدَ النَّاقَةَ مُبْصِرَةً فَظَلَمُوْا بِهَا ؕ— وَمَا نُرْسِلُ بِالْاٰیٰتِ اِلَّا تَخْوِیْفًا ۟

முன்னோர் அவற்றை பொய்ப்பித்தனர் என்பதைத் தவிர (வேறொன்றும்) அத்தாட்சிகளை நாம் அனுப்பி வைக்க நம்மை தடுக்கவில்லை. ‘ஸமூது’ க்கு பெண் ஒட்டகத்தை தெளிவான அத்தாட்சியாகக் கொடுத்தோம். அவர்கள் அதற்குத் தீங்கிழைத்தனர். பயமுறுத்தலாகவே தவிர அத்தாட்சிகளை நாம் அனுப்பமாட்டோம். info
التفاسير:

external-link copy
60 : 17

وَاِذْ قُلْنَا لَكَ اِنَّ رَبَّكَ اَحَاطَ بِالنَّاسِ ؕ— وَمَا جَعَلْنَا الرُّءْیَا الَّتِیْۤ اَرَیْنٰكَ اِلَّا فِتْنَةً لِّلنَّاسِ وَالشَّجَرَةَ الْمَلْعُوْنَةَ فِی الْقُرْاٰنِ ؕ— وَنُخَوِّفُهُمْ ۙ— فَمَا یَزِیْدُهُمْ اِلَّا طُغْیَانًا كَبِیْرًا ۟۠

(நபியே!) “நிச்சயமாக உம் இறைவன் மனிதர்களைச் சூழ்ந்து கொண்டான்” என்று நாம் உமக்குக் கூறிய சமயத்தை நினைவு கூருவீராக! (எனவே எவரையும் நீர் அஞ்சாமல் மார்க்கத்தை எடுத்துக் கூறுவீராக!). உமக்கு நாம் (மிஃராஜ் பயணத்தில்) காண்பித்த காட்சியையும் குர்ஆனில் சபிக்கப்பட்ட மரத்தையும் மனிதர்களுக்கு சோதனையாகவே தவிர நாம் ஆக்கவில்லை. அவர்களைப் பயமுறுத்துகிறோம். அது அவர்களுக்கு பெரும் அட்டூழியத்தைத் தவிர அதிகப்படுத்துவதில்லை. info
التفاسير:

external-link copy
61 : 17

وَاِذْ قُلْنَا لِلْمَلٰٓىِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِیْسَ ؕ— قَالَ ءَاَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِیْنًا ۟ۚ

“ஆதமுக்குச் சிரம் பணியுங்கள்” என வானவர்களுக்கு நாம் கூறிய சமயத்தை நினைவு கூருவீராக! இப்லீஸைத் தவிர (மற்ற அனைவரும்) சிரம் பணிந்தனர். “நீ மண்ணிலிருந்து படைத்தவருக்கு நான் சிரம் பணிவதா?” என்று (இப்லீஸ்) கூறினான். info
التفاسير:

external-link copy
62 : 17

قَالَ اَرَءَیْتَكَ هٰذَا الَّذِیْ كَرَّمْتَ عَلَیَّ ؗ— لَىِٕنْ اَخَّرْتَنِ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ لَاَحْتَنِكَنَّ ذُرِّیَّتَهٗۤ اِلَّا قَلِیْلًا ۟

“என்னை விட நீ கண்ணியப் படுத்தியவர் இவர்தானா என்று நீ அறிவிப்பாயாக?” (என்று ஏளனமாக கூறி) “நீ என்னை மறுமை நாள் வரை பிற்படுத்தினால், இவருடைய சந்ததிகளை நான் (அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி அவர்களை) வழிகெடுத்து விடுவேன். (ஆனால் நீ அருள்புரியும்) குறைவானவர்களைத் தவிர” என்று (இப்லீஸ்) கூறினான். info
التفاسير:

external-link copy
63 : 17

قَالَ اذْهَبْ فَمَنْ تَبِعَكَ مِنْهُمْ فَاِنَّ جَهَنَّمَ جَزَآؤُكُمْ جَزَآءً مَّوْفُوْرًا ۟

(அல்லாஹ்) கூறினான்: நீ போய்விடு; அவர்களில் உன்னை யார் பின்பற்றினாரோ நிச்சயமாக நரகம்தான் உங்கள் (அனைவரின்) முழுமையான கூலியாக அமையும். info
التفاسير:

external-link copy
64 : 17

وَاسْتَفْزِزْ مَنِ اسْتَطَعْتَ مِنْهُمْ بِصَوْتِكَ وَاَجْلِبْ عَلَیْهِمْ بِخَیْلِكَ وَرَجِلِكَ وَشَارِكْهُمْ فِی الْاَمْوَالِ وَالْاَوْلَادِ وَعِدْهُمْ ؕ— وَمَا یَعِدُهُمُ الشَّیْطٰنُ اِلَّا غُرُوْرًا ۟

அவர்களில் நீ இயன்றவர்களை உன் சப்தத்தைக் கொண்டு தூண்டிவிடு; உன் குதிரைப் படைகளையும், காலாட்படைகளையும் அவர்கள் மீது ஏவிவிடு; செல்வங்களிலும் சந்ததிகளிலும் அவர்களுடன் இணைந்து விடு; அவர்களுக்கு வாக்களி; ஏமாற்றுவதற்கே தவிர (வேறு எதற்கும்) ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டான். info
التفاسير:

external-link copy
65 : 17

اِنَّ عِبَادِیْ لَیْسَ لَكَ عَلَیْهِمْ سُلْطٰنٌ ؕ— وَكَفٰی بِرَبِّكَ وَكِیْلًا ۟

“நிச்சயமாக என் அடியார்கள் அவர்கள் மீது உனக்கு ஓர் அதிகாரம் இல்லை” (நபியே! உமக்கு) பொறுப்பாளனாக உம் இறைவனே போதுமாகிவிட்டான். info
التفاسير:

external-link copy
66 : 17

رَبُّكُمُ الَّذِیْ یُزْجِیْ لَكُمُ الْفُلْكَ فِی الْبَحْرِ لِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ ؕ— اِنَّهٗ كَانَ بِكُمْ رَحِیْمًا ۟

(மனிதர்களே!) உங்கள் இறைவன் உங்களுக்காக கப்பலைக் கடலில் செலுத்துகிறான், அவனுடைய அருளிலிருந்து நீங்கள் தேடுவதற்காக. நிச்சயமாக அவன் உங்கள் மீது பெரும் கருணையாளனாக இருக்கின்றான். info
التفاسير: