د قرآن کریم د معناګانو ژباړه - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

external-link copy
253 : 2

تِلْكَ الرُّسُلُ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلٰی بَعْضٍ ۘ— مِنْهُمْ مَّنْ كَلَّمَ اللّٰهُ وَرَفَعَ بَعْضَهُمْ دَرَجٰتٍ ؕ— وَاٰتَیْنَا عِیْسَی ابْنَ مَرْیَمَ الْبَیِّنٰتِ وَاَیَّدْنٰهُ بِرُوْحِ الْقُدُسِ ؕ— وَلَوْ شَآءَ اللّٰهُ مَا اقْتَتَلَ الَّذِیْنَ مِنْ بَعْدِهِمْ مِّنْ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَیِّنٰتُ وَلٰكِنِ اخْتَلَفُوْا فَمِنْهُمْ مَّنْ اٰمَنَ وَمِنْهُمْ مَّنْ كَفَرَ ؕ— وَلَوْ شَآءَ اللّٰهُ مَا اقْتَتَلُوْا ۫— وَلٰكِنَّ اللّٰهَ یَفْعَلُ مَا یُرِیْدُ ۟۠

அத்தூதர்கள், அவர்களில் சிலரை, சிலரைவிட நாம் மேன்மையாக்கினோம். அல்லாஹ் பேசியவரும் அவர்களில் இருக்கிறார். அவர்களில் சிலரைப் பதவிகளால் அவன் உயர்த்தினான். மர்யமுடைய மகன் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம். பரிசுத்த ஆத்மாவைக் கொண்டு அவருக்கு உதவினோம். அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களுக்குப் பின் உள்ளவர்கள் தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னர் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். என்றாலும், அவர்கள் (தங்களுக்குள்) வேறுபட்டார்கள். அவர்களில் நம்பிக்கை கொண்டவரும் உண்டு. அவர்களில் நிராகரித்தவரும் உண்டு. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். என்றாலும், அல்லாஹ் தான் நாடுவதைச் செய்தே ஆவான். info
التفاسير: