د قرآن کریم د معناګانو ژباړه - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

د مخ نمبر:close

external-link copy
21 : 41

وَقَالُوْا لِجُلُوْدِهِمْ لِمَ شَهِدْتُّمْ عَلَیْنَا ؕ— قَالُوْۤا اَنْطَقَنَا اللّٰهُ الَّذِیْۤ اَنْطَقَ كُلَّ شَیْءٍ وَّهُوَ خَلَقَكُمْ اَوَّلَ مَرَّةٍ وَّاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟

அவர்கள் தங்களுடைய தோல்களிடம் “எங்களுக்கு எதிராக ஏன் சாட்சி கூறினீர்கள் என்று கூறுவார்கள்.” அதற்கு அவை கூறும்: எல்லாவற்றையும் பேசவைத்த அல்லாஹ்தான் எங்களையும் (இன்று) பேச வைத்தான். அவன்தான் உங்களை முதல் முறையாகப் படைத்தான். அவன் பக்கம்தான் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். info
التفاسير:

external-link copy
22 : 41

وَمَا كُنْتُمْ تَسْتَتِرُوْنَ اَنْ یَّشْهَدَ عَلَیْكُمْ سَمْعُكُمْ وَلَاۤ اَبْصَارُكُمْ وَلَا جُلُوْدُكُمْ وَلٰكِنْ ظَنَنْتُمْ اَنَّ اللّٰهَ لَا یَعْلَمُ كَثِیْرًا مِّمَّا تَعْمَلُوْنَ ۟

உங்களுக்கு எதிராக உங்கள் செவியும் உங்கள் பார்வைகளும் உங்கள் தோல்களும் சாட்சி கூறிவிடும் என்பதற்காக நீங்கள் (உங்கள் செயல்களை) மறைப்பவர்களாக இருக்கவில்லை. (உங்கள் செயல்களை மறைக்கவும் உங்களால் முடியாது.) என்றாலும் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதில் அதிகமானதை அறியமாட்டான் என்று நீங்கள் எண்ணினீர்கள். info
التفاسير:

external-link copy
23 : 41

وَذٰلِكُمْ ظَنُّكُمُ الَّذِیْ ظَنَنْتُمْ بِرَبِّكُمْ اَرْدٰىكُمْ فَاَصْبَحْتُمْ مِّنَ الْخٰسِرِیْنَ ۟

உங்கள் இறைவனைப் பற்றி நீங்கள் எண்ணிய அந்த உங்கள் எண்ணம் தான் உங்களை நாசமாக்கியது. ஆகவே, நீங்கள் நஷ்டவாளிகளில் ஆகிவிட்டீர்கள். info
التفاسير:

external-link copy
24 : 41

فَاِنْ یَّصْبِرُوْا فَالنَّارُ مَثْوًی لَّهُمْ ؕ— وَاِنْ یَّسْتَعْتِبُوْا فَمَا هُمْ مِّنَ الْمُعْتَبِیْنَ ۟

அவர்கள் பொறுமையாக இருந்தாலும் (இல்லை என்றாலும்) நரகம்தான் அவர்களுக்குரிய தங்குமிடமாகும். அவர்கள் (தங்களுக்கு விருப்பமான ஒன்றின் பக்கம்) தங்களைத் திருப்புமாறு கோரினால் அப்படி அவர்கள் திருப்பப்பட மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
25 : 41

وَقَیَّضْنَا لَهُمْ قُرَنَآءَ فَزَیَّنُوْا لَهُمْ مَّا بَیْنَ اَیْدِیْهِمْ وَمَا خَلْفَهُمْ وَحَقَّ عَلَیْهِمُ الْقَوْلُ فِیْۤ اُمَمٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمْ مِّنَ الْجِنِّ وَالْاِنْسِ ۚ— اِنَّهُمْ كَانُوْا خٰسِرِیْنَ ۟۠

அவர்களுக்கு சில நண்பர்களை நாம் இலகுவாக்கி அமைத்து கொடுத்தோம். அவர்கள் (-அந்த நண்பர்கள்) அவர்களுக்கு (அந்த பாவிகளான நிராகரிப்பாளர்களுக்கு) முன்னுள்ளதையும் அவர்களுக்கு பின்னுள்ளதையும் அலங்கரித்துக் காட்டினார்கள். இவர்களுக்கு முன்னர் சென்றுவிட்ட ஜின்களில் மற்றும் மனிதர்களில் உள்ள (பாவிகளான) சமுதாயங்களுக்கு விதிக்கப்பட்ட அதே விதி (-அதே தண்டனை) இவர்கள் மீதும் உறுதியாகிவிட்டது. நிச்சயமாக இவர்கள் நஷ்டவாளிகளாக இருக்கின்றனர். info
التفاسير:

external-link copy
26 : 41

وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا لَا تَسْمَعُوْا لِهٰذَا الْقُرْاٰنِ وَالْغَوْا فِیْهِ لَعَلَّكُمْ تَغْلِبُوْنَ ۟

நிராகரிப்பாளர்கள் கூறினார்கள்: இந்த குர்ஆனை நீங்கள் செவியுறாதீர்கள் (அதை ஏற்காதீர்கள்), அதில் (அது ஓதப்படும் போது பிறர் கேட்கமுடியாதவாறு) கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்துங்கள்! அதனால், நீங்கள் வெற்றி பெறுவீர்கள். info
التفاسير:

external-link copy
27 : 41

فَلَنُذِیْقَنَّ الَّذِیْنَ كَفَرُوْا عَذَابًا شَدِیْدًا وَّلَنَجْزِیَنَّهُمْ اَسْوَاَ الَّذِیْ كَانُوْا یَعْمَلُوْنَ ۟

ஆகவே, நிராகரித்தவர்களுக்கு கடுமையான வேதனையை நிச்சயமாக சுவைக்க வைப்போம். நிச்சயமாக, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றில் மிகக் கெட்ட செயலுக்கு (தகுந்த) கூலி அவர்களுக்கு கொடுப்போம். info
التفاسير:

external-link copy
28 : 41

ذٰلِكَ جَزَآءُ اَعْدَآءِ اللّٰهِ النَّارُ ۚ— لَهُمْ فِیْهَا دَارُ الْخُلْدِ ؕ— جَزَآءً بِمَا كَانُوْا بِاٰیٰتِنَا یَجْحَدُوْنَ ۟

இதுதான் - நரகம்தான் அல்லாஹ்வின் எதிரிகளுக்குரிய கூலியாகும். அதில் அவர்களுக்கு நிரந்தரமாக தங்கும் இல்லம் உண்டு, நமது வசனங்களை அவர்கள் மறுப்பவர்களாக இருந்ததற்கு கூலியாக. info
التفاسير:

external-link copy
29 : 41

وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا رَبَّنَاۤ اَرِنَا الَّذَیْنِ اَضَلّٰنَا مِنَ الْجِنِّ وَالْاِنْسِ نَجْعَلْهُمَا تَحْتَ اَقْدَامِنَا لِیَكُوْنَا مِنَ الْاَسْفَلِیْنَ ۟

நிராகரிப்பவர்கள் கூறுவார்கள்:எங்கள் இறைவா! ஜின் மற்றும் மனிதர்களில் எங்களை வழிகெடுத்தவர்களை எங்களுக்குக் காண்பி! அவர்கள் (-வழிகெடுத்த அந்த இரு சாரார்களும்) மிகக் கீழ்த்தரமானவர்களில் ஆகிவிடுவதற்காக அவர்களை நாங்கள் எங்கள் பாதங்களுக்குக் கீழ் ஆக்கிக் கொள்கிறோம். info
التفاسير: