Check out the new design

Tradução dos significados do Nobre Qur’an. - Tradução tâmil de interpretação abreviada do Nobre Alcorão. * - Índice de tradução


Tradução dos significados Surah: Yunus   Versículo:
قَالَ قَدْ اُجِیْبَتْ دَّعْوَتُكُمَا فَاسْتَقِیْمَا وَلَا تَتَّبِعٰٓنِّ سَبِیْلَ الَّذِیْنَ لَا یَعْلَمُوْنَ ۟
10.89. அல்லாஹ் கூறினான்: -மூஸா மற்றும் ஹாரூனே!- பிர்அவ்ன் மற்றும் அவனுடைய சமூகத்தின் தலைவர்களுக்கு எதிராக நீங்கள் செய்த பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டு விட்டது. உங்களின் மார்க்கத்தில் உறுதியாக இருங்கள். அதிலிருந்து நெறிபிறழ்ந்து சத்திய பாதையை அறியாத மூடர்களின் பாதையைப் பின்பற்றி விடாதீர்கள்.
Os Tafssir em língua árabe:
وَجٰوَزْنَا بِبَنِیْۤ اِسْرَآءِیْلَ الْبَحْرَ فَاَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُوْدُهٗ بَغْیًا وَّعَدْوًا ؕ— حَتّٰۤی اِذَاۤ اَدْرَكَهُ الْغَرَقُ قَالَ اٰمَنْتُ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا الَّذِیْۤ اٰمَنَتْ بِهٖ بَنُوْۤا اِسْرَآءِیْلَ وَاَنَا مِنَ الْمُسْلِمِیْنَ ۟
10.90. கடலைப் பிளந்து இஸ்ராயீலின் மக்களுக்கு அதனைக் கடப்பதை நாம் எளிதாக்கினோம். அவர்கள் பாதுகாப்பாக அதனைக் கடந்தார்கள். பிர்அவ்னும் அவனுடைய படைகளும் அநியாயமாகவும் வரம்பு மீறியும் அவர்களைப் பின்தொடர்ந்தார்கள். கடல் அவனை மூடி, மூழ்கடித்து, தப்புவதில் விரக்தியடைந்து அவன் கூறினான்: “இஸ்ராயீலின் மக்கள் யார் மீது நம்பிக்கை கொண்டார்களோ அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான எந்த இறைவனும் இல்லை என்று நான் நம்பிக்கை கொள்கிறேன். கட்டளைகளை கொண்டு நான் அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவர்களில் ஒருவனாகி விட்டேன்.”
Os Tafssir em língua árabe:
آٰلْـٰٔنَ وَقَدْ عَصَیْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ الْمُفْسِدِیْنَ ۟
10.91. இப்பொழுது, வாழ்க்கையிலிருந்து விரக்தியடைந்த பிறகுதானா நம்பிக்கைகொள்கிறாய்? -பிர்அவ்னே- வேதனை இறங்குவதற்கு முன்னர் அல்லாஹ்வை நிராகரித்து, அவனது பாதையை விட்டும் தடுத்து; அவனுக்கு மாறாகச் செயல்பட்டாய்; நீயும் வழிகெட்டு மற்றவர்களையும் வழிகெடுத்ததனால் நீ குழப்பவாதிகளில் ஒருவனாக இருந்தாய்.
Os Tafssir em língua árabe:
فَالْیَوْمَ نُنَجِّیْكَ بِبَدَنِكَ لِتَكُوْنَ لِمَنْ خَلْفَكَ اٰیَةً ؕ— وَاِنَّ كَثِیْرًا مِّنَ النَّاسِ عَنْ اٰیٰتِنَا لَغٰفِلُوْنَ ۟۠
10.92. -பிர்அவ்னே!- உனக்குப் பின்னர் வரக்கூடியவர்கள் படிப்பினை பெறும் பொருட்டு இன்றைய தினம் கடலிலிருந்து உன்னை வெளிப்படுத்தி பூமியின் உயர்ந்த நிலப்பரப்பு ஒன்றில் உன்னை வைப்போம். மக்களில் பெரும்பாலோர் நம்முடைய சான்றுகளையும் ஆதாரங்களையும் விட்டு அலட்சியமாகவே இருக்கிறார்கள். அவற்றில் அவர்கள் சிந்தனை செலுத்துவதில்லை.
Os Tafssir em língua árabe:
وَلَقَدْ بَوَّاْنَا بَنِیْۤ اِسْرَآءِیْلَ مُبَوَّاَ صِدْقٍ وَّرَزَقْنٰهُمْ مِّنَ الطَّیِّبٰتِ ۚ— فَمَا اخْتَلَفُوْا حَتّٰی جَآءَهُمُ الْعِلْمُ ؕ— اِنَّ رَبَّكَ یَقْضِیْ بَیْنَهُمْ یَوْمَ الْقِیٰمَةِ فِیْمَا كَانُوْا فِیْهِ یَخْتَلِفُوْنَ ۟
10.93. நாம் இஸ்ராயீலின் மக்களை அருள்வளம்மிக்க ஷாம் தேசத்திலுள்ள சிறந்த, விரும்பத்தக்க ஓர் இடத்தில், இறங்கச் செய்தோம். அவர்களுக்குத் தூய்மையான, அனுமதிக்கப்பட்ட பொருள்களை வழங்கினோம். தவ்ராத்தில் அவர்கள் படித்த முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வர்ணணையை உண்மைப்படுத்தக்கூடியதாக அல்குர்ஆன் அவர்களிடம் வரும் வரை அவர்கள் தமது மார்க்க விடயத்தில் முரண்படவில்லை. அவர்கள் அதனை நிராகரித்த போது அவர்களின் நாடுகள் கைப்பற்றப்பட்டன. -தூதரே!- நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் முரண்பட்டுள்ளவற்றில் மறுமை நாளில் அவர்களிடையே தீர்ப்பளிப்பான். அவர்களில் சத்தியத்தில் இருந்தவர்களுக்கும் அசத்தியத்தில் இருந்தவர்களுக்கும் தகுந்த கூலியை அவன் வழங்குவான்.
Os Tafssir em língua árabe:
فَاِنْ كُنْتَ فِیْ شَكٍّ مِّمَّاۤ اَنْزَلْنَاۤ اِلَیْكَ فَسْـَٔلِ الَّذِیْنَ یَقْرَءُوْنَ الْكِتٰبَ مِنْ قَبْلِكَ ۚ— لَقَدْ جَآءَكَ الْحَقُّ مِنْ رَّبِّكَ فَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُمْتَرِیْنَ ۟ۙ
10.94. -தூதரே!- நாம் உம்மீது இறக்கிய குர்ஆனின் உண்மை நிலையைக் குறித்து நீர் சந்தேகத்தில் இருந்தீரானால் தவ்ராத்தையும் இன்ஜீலையும் படித்துக் கொண்டிருந்த யூதர்கள் மற்றும் கிருஸ்தவர்களில் நம்பிக்கை கொண்டவர்களிடம் கேட்டுப்பாருங்கள். அவர்கள் தங்களின் வேதங்களில் உம்மீது இறக்கப்பட்டதைக் குறித்து கூறப்பட்டுள்ளதைக் கண்டதனால் உம்மீது இறக்கப்பட்டது சத்தியமே என்பதை அவர்கள் உமக்கு கூறுவார்கள். சந்தேகமற்ற சத்தியம் உம் இறைவனிடமிருந்து உமக்கு வந்துள்ளது. எனவே சந்தேகம் கொள்வோரில் ஒருவராகிவிடாதீர்.
Os Tafssir em língua árabe:
وَلَا تَكُوْنَنَّ مِنَ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِ اللّٰهِ فَتَكُوْنَ مِنَ الْخٰسِرِیْنَ ۟
10.95. அல்லாஹ்வின் சான்றுகளையும் ஆதாரங்களையும் பொய் எனக்கூறி மறுத்தவர்களில் ஒருவராகிவிடாதீர். அவ்வாறு செய்தால் நிராகரித்து தங்களைத் தாங்களே அழிவில் ஆழ்த்தியவர்களில் ஒருவராகி விடுவீர். இவையனைத்தும் பொய்பித்தல், சந்தேகம் என்னும் ஆபத்தைக் குறித்து எச்சரிப்பதற்காகத்தான். மற்றபடி இது போன்ற சந்தேகம் ஏற்படுவதை விட்டும் நிச்சயமாக நபியவர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளார்கள்.
Os Tafssir em língua árabe:
اِنَّ الَّذِیْنَ حَقَّتْ عَلَیْهِمْ كَلِمَتُ رَبِّكَ لَا یُؤْمِنُوْنَ ۟ۙ
10.96. நிச்சயமாக, நிராகரிப்பில் நிலைத்திருந்ததனால் நிராகரித்த நிலையிலேயே மரணிப்பார்கள் என்று அல்லாஹ்வின் விதி யார் மீது தீர்மானமாகி விட்டதோ அவர்கள் ஒருபோதும் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்.
Os Tafssir em língua árabe:
وَلَوْ جَآءَتْهُمْ كُلُّ اٰیَةٍ حَتّٰی یَرَوُا الْعَذَابَ الْاَلِیْمَ ۟
10.97. அவர்களிடம் மார்க்க ரீதியான அல்லது பிரபஞ்ச ரீதியான சான்றுகள் அனைத்தும் வந்தாலும் வேதனை மிக்க தண்டனையைக் காணும் வரை நம்பிக்கைகொள்ள மாட்டார்கள். அப்போது அவர்கள் கொள்ளும் நம்பிக்கையினால் எந்தப் பயனும் இல்லை என்ற நிலை வரும் போது ஈமான் கொள்வார்கள்.
Os Tafssir em língua árabe:
Das notas do versículo nesta página:
• وجوب الثبات على الدين، وعدم اتباع سبيل المجرمين.
1. குற்றவாளிகளின் பாதையைப் பின்பற்றாமல் மார்க்கத்தில் நிலைத்திருப்பது கட்டாயமாகும்.

• لا تُقْبل توبة من حَشْرَجَت روحه، أو عاين العذاب.
2. உயிர் தொண்டைக் குழியை அடைந்த பிறகு அல்லது வேதனையைக் கண்ட பிறகு பாவமன்னிப்புக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படாது.

• أن اليهود والنصارى كانوا يعلمون صفات النبي صلى الله عليه وسلم، لكن الكبر والعناد هو ما منعهم من الإيمان.
3. யூதர்களும் கிறிஸ்தவர்களும் நபியவர்களின் பண்புகளைக் குறித்து அறிந்திருந்தார்கள். கர்வமும் பிடிவாதமுமே அவர்களை நம்பிக்கை கொள்ளவிடாமல் தடுத்தது.

 
Tradução dos significados Surah: Yunus
Índice de capítulos Número de página
 
Tradução dos significados do Nobre Qur’an. - Tradução tâmil de interpretação abreviada do Nobre Alcorão. - Índice de tradução

Emitido pelo Centro de Tafssir para Estudos do Alcorão.

Fechar