Tradução dos significados do Nobre Qur’an. - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Índice de tradução


Tradução dos significados Versículo: (275) Surah: Suratu Al-Baqarah
اَلَّذِیْنَ یَاْكُلُوْنَ الرِّبٰوا لَا یَقُوْمُوْنَ اِلَّا كَمَا یَقُوْمُ الَّذِیْ یَتَخَبَّطُهُ الشَّیْطٰنُ مِنَ الْمَسِّ ؕ— ذٰلِكَ بِاَنَّهُمْ قَالُوْۤا اِنَّمَا الْبَیْعُ مِثْلُ الرِّبٰوا ۘ— وَاَحَلَّ اللّٰهُ الْبَیْعَ وَحَرَّمَ الرِّبٰوا ؕ— فَمَنْ جَآءَهٗ مَوْعِظَةٌ مِّنْ رَّبِّهٖ فَانْتَهٰی فَلَهٗ مَا سَلَفَ ؕ— وَاَمْرُهٗۤ اِلَی اللّٰهِ ؕ— وَمَنْ عَادَ فَاُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ— هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
2.275. வட்டி வியாபாரத்தில் ஈடுபடுவோர், அதனை வாங்கியோர் மறுமைநாளில் ஷைத்தானால் தீண்டப்பட்டவன் போல் தங்கள் மண்ணறைகளிலிருந்து எழுவார்கள். வலிப்பு நோய் உள்ளவர் விழுந்து எழுவதற்குத் தடுமாறுவது போல் தடுமாறியவராக தனது மண்ணறையிலிருந்து எழுவார். இதற்குக் காரணம், அவர்கள் வட்டியை அனுமதிக்கப்பட்டதாகக் கருதினார்கள்; அல்லாஹ் அனுமதித்த வியாபாரத்தின் இலாபத்திற்கும், அவன் தடுத்த வட்டிக்கும் இடையே அவர்கள் வேறுபாடு காட்டவில்லை.வியாபாரமும் வட்டியைப் போன்றதுதான். இரண்டும் செல்வத்தைப் பெருக்குவதுதானே என்று அவர்கள் கூறினார்கள். அவர்களின் இந்த ஒப்பீட்டை அல்லாஹ் மறுத்துரைத்து அவர்களை பொய்ப்பிக்கின்றான். வியாபாரத்தில் அடங்கியுள்ள பொதுவான பிரத்யேக நன்மையின் காரணமாக அவன் அதனை அனுமதிக்கப்பட்டதாகவும், வட்டியில் அடங்கியுள்ள - மக்களின் செல்வங்களை தவறான முறையில் உண்ணுதல், அநியாயம் போன்ற - தீங்குகளின் காரணமாக அதனைத் தடைசெய்யப்பட்டதாகவும் ஆக்கியுள்ளான். வட்டி தடை என்பதாக தம் இறைவனிடமிருந்து அறிவுரைவந்த பின் அதனை விட்டும் தவிர்ந்து, அதிலிருந்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரியவர் மீது முன்னர் வாங்கிய வட்டிக்காக எந்தக் குற்றமும் இல்லை. அது அவருக்கு ஆகுமானதே. எதிர்காலத்தில் அவர் செய்யும் செயல்களின் முடிவு அல்லாஹ்விடமே இருக்கின்றது. அல்லாஹ்விடமிருந்து தடைவந்து ஆதாரம் நிரூபனமாகிவிட்ட பிறகும் யாராவது மீண்டும் வட்டி வாங்கினால் அவர் நரகத்தில் நிரந்தரமாக வீழ்ந்துகிடக்க தகுதியானவராகிவிட்டார். (இங்கு நிரந்தர நரகம் என்பது வட்டியை அனுமதிக்கப்பட்டதாகக் கருதி அதனை உண்பவர்களுக்குரியதாகும் அல்லது நிரந்தரம் என்பது நீண்ட காலத்தைக் குறிப்பதாகும். ஏனெனில் அல்லாஹ்வை நிராகரிப்பவர்கள் மட்டுமே நரகத்தில் நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்கள். ஓரிறைக் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் அங்கு நிரந்தரமாக தங்க மாட்டார்கள்.)
Os Tafssir em língua árabe:
Das notas do versículo nesta página:
• من أعظم الكبائر أكل الربا، ولهذا توعد الله تعالى آكله بالحرب وبالمحق في الدنيا والتخبط في الآخرة.
1. வட்டி வாங்கி உண்பது மிகப் பெரிய பாவமாகும். எனவேதான் அதனை உண்பவர்களை அல்லாஹ் போர், உலகில் இழப்பு, மறுமையில் தடுமாற்றம் போன்றவற்றைின் மூலம் எச்சரிக்கிறான்.

• الالتزام بأحكام الشرع في المعاملات المالية ينزل البركة والنماء فيها.
2. பொருளாதார விஷயங்களில் அல்லாஹ்வின் சட்டங்களை முறையாகக் கடைப்பிடிப்பதால் அவற்றில் பரக்கத்தும் வளர்ச்சியும் ஏற்படுகிறது.

• فضل الصبر على المعسر، والتخفيف عنه بالتصدق عليه ببعض الدَّين أو كله.
3. கடனை அடைக்கமுடியாமல் சிரமப்படுபவர் விடயத்தில் பொறுமைமேற்கொள்வதும் கடனை முழுமையாகவோ ஒரு பகுதியையோ தள்ளுபடி செய்து தர்மம் செய்வதும் சிறப்புக்குரியவைகளாகும்.

 
Tradução dos significados Versículo: (275) Surah: Suratu Al-Baqarah
Índice de capítulos Número de página
 
Tradução dos significados do Nobre Qur’an. - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Índice de tradução

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Fechar