Check out the new design

Tradução dos significados do Nobre Qur’an. - Tradução tâmil de interpretação abreviada do Nobre Alcorão. * - Índice de tradução


Tradução dos significados Versículo: (79) Surah: Al-Baqarah
فَوَیْلٌ لِّلَّذِیْنَ یَكْتُبُوْنَ الْكِتٰبَ بِاَیْدِیْهِمْ ۗ— ثُمَّ یَقُوْلُوْنَ هٰذَا مِنْ عِنْدِ اللّٰهِ لِیَشْتَرُوْا بِهٖ ثَمَنًا قَلِیْلًا ؕ— فَوَیْلٌ لَّهُمْ مِّمَّا كَتَبَتْ اَیْدِیْهِمْ وَوَیْلٌ لَّهُمْ مِّمَّا یَكْسِبُوْنَ ۟
2.79. தங்களின் கைகளால் ஒரு நூலை எழுதிக்கொண்டு, பிறகு அபாண்டமாக, இது அல்லாஹ்விடமிருந்து வந்த வேதமாகும் என்று கூறும் இவர்களுக்கு கடுமையான வேதனையும், அழிவும் காத்திருக்கிறது. சத்தியம் மற்றும் நேர்வழியைப் பின்பற்றுவதற்குப் பதிலாக இவ்வுலகில் பணம், பதவி போன்ற அற்ப ஆதாயம் பெறுவதற்காக இவ்வாறு அவர்கள் நடந்துகொள்கின்றனர். தங்களின் கைகளால் எழுதிய நூலை அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த வேதம் என்று அல்லாஹ்வின் மீதே பொய் கூறியதற்கும், அதன் மூலம் அவர்கள் சம்பாதித்த பணம், பதவிகளின் காரணமாகவும் அவர்களுக்கு அழிவும் கடுமையான வேதனையும் உண்டு.
Os Tafssir em língua árabe:
Das notas do versículo nesta página:
• بعض أهل الكتاب يدّعي العلم بما أنزل الله، والحقيقة أن لا علم له بما أنزل الله، وإنما هو الوهم والجهل.
1. வேதம் வழங்கப்பட்டவர்களில் சிலர் அல்லாஹ் இறக்கிய ஞானம் தங்களிடம் இருப்பதாகக் கூறுகிறார்கள். உண்மையில் அவர்களிடம் அல்லாஹ் இறக்கிய எந்த ஞானமும் இல்லை. அது அறியாமையும் யூகம் மாத்திரமே.

• من أعظم الناس إثمًا من يكذب على الله تعالى ورسله ؛ فينسب إليهم ما لم يكن منهم.
2. அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும், அவர்கள் கூறாத விஷயத்தை பொய்யாக புனைந்து கூறுபவரே மிகப் பெரிய பாவியாவார்.

• مع عظم المواثيق التي أخذها الله تعالى على اليهود وشدة التأكيد عليها، لم يزدهم ذلك إلا إعراضًا عنها ورفضًا لها.
3. அல்லாஹ் யூதர்களிடம் மிகவும் வலியுறுத்தி முக்கியமான உறுதிமொழிகளை எடுத்திருந்தும் அவர்கள் அவற்றை மென்மேலும் புறக்கணிப்பவர்களாகவே இருந்தனர்.

 
Tradução dos significados Versículo: (79) Surah: Al-Baqarah
Índice de capítulos Número de página
 
Tradução dos significados do Nobre Qur’an. - Tradução tâmil de interpretação abreviada do Nobre Alcorão. - Índice de tradução

Emitido pelo Centro de Tafssir para Estudos do Alcorão.

Fechar