Check out the new design

Tradução dos significados do Nobre Qur’an. - Tradução tâmil de interpretação abreviada do Nobre Alcorão. * - Índice de tradução


Tradução dos significados Surah: Ãli-Imran   Versículo:
قُلْ اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ عَلَیْنَا وَمَاۤ اُنْزِلَ عَلٰۤی اِبْرٰهِیْمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَاۤ اُوْتِیَ مُوْسٰی وَعِیْسٰی وَالنَّبِیُّوْنَ مِنْ رَّبِّهِمْ ۪— لَا نُفَرِّقُ بَیْنَ اَحَدٍ مِّنْهُمْ ؗ— وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ۟
3.84. தூதரே! நீர் கூறுவீராக: “நாங்கள் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு, எங்களுக்கு ஏவப்பட்டவிடயத்தில் அவனுக்குக் கட்டுப்பட்டுள்ளோம். எங்கள்மீது இறக்கப்பட்ட வஹியின் மீதும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூபு மற்றும் யஅகூபின் பிள்ளைகளில் தூதராக அனுப்பப்பட்டவர்கள் ஆகியோருக்கு இறக்கப்பட்டவற்றின்மீதும் நாங்கள் நம்பிக்கைகொண்டுள்ளோம். மூசாவுக்கும் ஈசாவுக்கும் மற்றும் தூதர்கள் அனைவருக்கும் இறைவனிடமிருந்து வழங்கப்பட்ட வேதங்கள், சான்றுகள் ஆகியவற்றின் மீதும் நம்பிக்கைகொண்டுள்ளோம். அவர்களில் சிலர் மீது நம்பிக்கைகொண்டு சிலரை நிராகரித்து அவர்களிடையே நாங்கள் வேற்றுமை பாராட்ட மாட்டோம். நாங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே அடிபணிந்தவர்கள்.”
Os Tafssir em língua árabe:
وَمَنْ یَّبْتَغِ غَیْرَ الْاِسْلَامِ دِیْنًا فَلَنْ یُّقْبَلَ مِنْهُ ۚ— وَهُوَ فِی الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِیْنَ ۟
3.85. யாரேனும் அல்லாஹ் ஏற்றுக்கொண்ட மார்க்கமான இஸ்லாத்தைத்தவிர வேறொரு மார்க்கத்தை விரும்பினால், அல்லாஹ் அவரிடமிருந்து அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டான். மறுமையில் தம்மைத்தாமே இழப்பிற்குள்ளாக்கி நரகில் நுழைவதன் மூலம் தமக்குத்தாமே இழப்பை உண்டாக்கிக்கொண்டவர்களில் ஒருவராக அவர் இருப்பார்.
Os Tafssir em língua árabe:
كَیْفَ یَهْدِی اللّٰهُ قَوْمًا كَفَرُوْا بَعْدَ اِیْمَانِهِمْ وَشَهِدُوْۤا اَنَّ الرَّسُوْلَ حَقٌّ وَّجَآءَهُمُ الْبَیِّنٰتُ ؕ— وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟
3.86. ’அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு முஹம்மது (ஸல்) அவர்கள் கொண்டுவந்தது உண்மையே’ என்று சாட்சிகூறிய பிறகும் நிராகரித்த கூட்டத்துக்கு தன்னையும் தனது தூதரையும் நம்பிக்கைகொள்வதற்கு அல்லாஹ் எவ்வாறு வழிகாட்டுவான்? அவர் உண்மையான தூதர்தாம் என்பதை அறிவிக்கும் தெளிவான சான்றுகளும் அவர்களிடம் வந்தேயுள்ளன. நேர்வழியை விட்டுவிட்டு வழிகேட்டை தேர்ந்தெடுத்துக்கொண்ட இந்த அநியாயக்காரர்களுக்கு அல்லாஹ் அவனை நம்பிக்கைகொள்ள வழிகாட்ட மாட்டான்.
Os Tafssir em língua árabe:
اُولٰٓىِٕكَ جَزَآؤُهُمْ اَنَّ عَلَیْهِمْ لَعْنَةَ اللّٰهِ وَالْمَلٰٓىِٕكَةِ وَالنَّاسِ اَجْمَعِیْنَ ۟ۙ
3.87. வழிகேட்டைத் தேர்ந்தெடுத்துக்கொண்ட இந்த அநியாயக்காரர்களுக்கான தண்டனை, அல்லாஹ்வும் வானவர்களும் மனிதர்கள் அனைவரும் இடுகின்ற சாபமேயாகும். அவர்கள் அல்லாஹ்வின் அருளை விட்டும் விரட்டப்பட்டுவிட்டார்கள்.
Os Tafssir em língua árabe:
خٰلِدِیْنَ فِیْهَا ۚ— لَا یُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ یُنْظَرُوْنَ ۟ۙ
3.88. அவர்கள் நரகத்தில் நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்கள். அதிலிருந்து அவர்களால் வெளியேற முடியாது. அவர்களின் தண்டனை குறைக்கப்பட மாட்டாது. பாவமன்னிப்புக்கோரவோ, சாக்குப்போக்குக் கூறவோ அவர்களுக்கு அவகாசமும் அளிக்கப்படாது.
Os Tafssir em língua árabe:
اِلَّا الَّذِیْنَ تَابُوْا مِنْ بَعْدِ ذٰلِكَ وَاَصْلَحُوْا ۫— فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
3.89. ஆயினும் தங்களின் நிராகரிப்பிற்கும் அக்கிரமத்திற்கும் பிறகு அல்லாஹ்வின்பால் மீண்டு தங்கள் செயல்களை சீர்படுத்திக் கொண்டவர்களைத்தவிர. தன்னிடம் பாவமன்னிப்புக்கோரும் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
Os Tafssir em língua árabe:
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا بَعْدَ اِیْمَانِهِمْ ثُمَّ ازْدَادُوْا كُفْرًا لَّنْ تُقْبَلَ تَوْبَتُهُمْ ۚ— وَاُولٰٓىِٕكَ هُمُ الضَّآلُّوْنَ ۟
3.90. நம்பிக்கைகொண்ட பிறகு நிராகரித்து, மரணம் வரை அந்த நிராகரிப்பிலேயே நிலைத்திருப்பவர்கள் மரணவேளையில் செய்கின்ற பாவமன்னிப்புக் கோரிக்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாது. ஏனெனில் பாவமன்னிப்பை ஏற்பதற்கான அவகாசம் முடிந்துவிட்டது. அவர்கள்தாம் அல்லாஹ்வின் பக்கம் செல்லக்கூடிய நேரான பாதையை விட்டும் வழிதவறியவர்களாவர்.
Os Tafssir em língua árabe:
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا وَمَاتُوْا وَهُمْ كُفَّارٌ فَلَنْ یُّقْبَلَ مِنْ اَحَدِهِمْ مِّلْءُ الْاَرْضِ ذَهَبًا وَّلَوِ افْتَدٰی بِهٖ ؕ— اُولٰٓىِٕكَ لَهُمْ عَذَابٌ اَلِیْمٌۙ— وَّمَا لَهُمْ مِّنْ نّٰصِرِیْنَ ۟۠
3.91. அல்லாஹ்வை நிராகரித்து, அந்நிலையிலேயே மரணித்தும் விடுபவர்கள் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்காக பூமி நிறைய தங்கத்தை ஈடாகக் கொடுத்தாலும் அது ஒருபோதும் அவர்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படாது. அவர்களுக்கு வேதனைமிக்க தண்டனை உண்டு. மறுமைநாளில் அந்த வேதனையிலிருந்து அவர்களைப் பாதுகாக்கக்கூடிய உதவியாளர்கள் யாரும் அவர்களுக்கு இருக்க மாட்டார்கள்.
Os Tafssir em língua árabe:
Das notas do versículo nesta página:
• يجب الإيمان بجميع الأنبياء الذين أرسلهم الله تعالى، وجميع ما أنزل عليهم من الكتب، دون تفريق بينهم.
1. அல்லாஹ் அனுப்பிய தூதர்கள் அனைவரின்மீதும், அவன் இறக்கிய வேதங்கள் அனைத்தின்மீதும் பாகுபாடின்றி நம்பிக்கைகொள்வது கட்டாயமாகும்.

• لا يقبل الله تعالى من أحد دينًا أيًّا كان بعد بعثة النبي محمد صلى الله عليه وسلم إلا الإسلام الذي جاء به.
2. முஹம்மது நபியின் தூதுத்துவத்திற்குப் பிறகு இஸ்லாத்தைத்தவிர எந்த மார்க்கத்தையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான்.

• مَنْ أصر على الضلال، واستمر عليه، فقد يعاقبه الله بعدم توفيقه إلى التوبة والهداية.
3. வழிகேட்டில் தொடர்ந்து நிலைத்திருப்பவர்களுக்கு பாவமன்னிப்புக்கோரி நேர்வழிபெறும் பாக்கியத்தை வழங்காமலும் அல்லாஹ் சிலவேளை தண்டிப்பான்.

• باب التوبة مفتوح للعبد ما لم يحضره الموت، أو تشرق الشمس من مغربها، فعندئذ لا تُقْبل منه التوبة.
4. மரணவேளை நெருங்கிவிட்டாலோ சூரியன் மேற்கிலிருந்து உதயமாகிவிட்டாலோ அடியானின் பாவமன்னிப்புக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாது. அதுவரை பாவமன்னிப்புக்கான வாசல்கள் அவனுக்கான திறந்தே இருக்கின்றன.

• لا ينجي المرء يوم القيامة من عذاب النار إلا عمله الصالح، وأما المال فلو كان ملء الأرض لم ينفعه شيئًا.
5. மறுமைநாளில் மனிதனுடைய நற்செயல்கள் மட்டுமே அவனை நரக வேதனையிலிருந்து காப்பாற்றும். பூமி நிரம்ப அவன் செல்வத்தை வைத்திருந்தாலும் அதனால் அவனுக்கு எந்தப் பயனும் இல்லை.

 
Tradução dos significados Surah: Ãli-Imran
Índice de capítulos Número de página
 
Tradução dos significados do Nobre Qur’an. - Tradução tâmil de interpretação abreviada do Nobre Alcorão. - Índice de tradução

Emitido pelo Centro de Tafssir para Estudos do Alcorão.

Fechar