Tradução dos significados do Nobre Qur’an. - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Índice de tradução


Tradução dos significados Surah: Suratu An-Naba   Versículo:

ஸூரா அந்நபஃ

Dos propósitos do capítulo:
بيان أدلة القدرة على البعث والتخويف من العاقبة.
மீண்டும் எழுப்புவதற்கான ஆற்றல் உண்டு என்பதற்கான ஆதாரங்களைத் தெளிவுபடுத்தலும், தீய முடிவு உண்டு என அச்சமூட்டலும்

عَمَّ یَتَسَآءَلُوْنَ ۟ۚ
78.1. அல்லாஹ் தன் தூதரை இந்த இணைவைப்பாளர்களிடம் அனுப்பிய பிறகு இவர்கள் எதைக்குறித்து ஒருவருக்கொருவர் கேட்டுக் கொள்கிறார்கள்?
Os Tafssir em língua árabe:
عَنِ النَّبَاِ الْعَظِیْمِ ۟ۙ
78.2. அவர்கள் ஒருவருக்கொருவர் மகத்தான செய்தியைக் குறித்துக் கேட்டுக் கொள்கிறார்கள். அதுதான் மீண்டும் எழுப்பப்படும் செய்தியை உள்ளடக்கியுள்ள அவர்களின் தூதர் மீது இறக்கப்பட்ட இந்த குர்ஆனாகும்.
Os Tafssir em língua árabe:
الَّذِیْ هُمْ فِیْهِ مُخْتَلِفُوْنَ ۟ؕ
78.3. இந்தக் குர்ஆனைக் குறித்து அது சூனியமா அல்லது கவிதையா அல்லது ஜோதிடமா அல்லது முன்னோர்களின் கட்டுக் கதைகளா என எவ்வாறு அதனை வர்ணிப்பது என அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர்.
Os Tafssir em língua árabe:
كَلَّا سَیَعْلَمُوْنَ ۟ۙ
78.4. அவர்கள் எண்ணுவது போலல்ல விடயம். குர்ஆனை மறுக்கும் இவர்கள் தமது நிராகரிப்பின் தீய விளைவை விரைவில் அறிந்துகொள்வார்கள்.
Os Tafssir em língua árabe:
ثُمَّ كَلَّا سَیَعْلَمُوْنَ ۟
78.5. பின்னர் அவர்களுக்கு அது உறுதியாகிவிடும்.
Os Tafssir em língua árabe:
اَلَمْ نَجْعَلِ الْاَرْضَ مِهٰدًا ۟ۙ
78.6. நாம் பூமியை அவர்கள் வாழ்வதற்கேற்ப வசதியாக விரிக்கப்பட்டதாக ஆக்கவில்லையா?
Os Tafssir em língua árabe:
وَّالْجِبَالَ اَوْتَادًا ۟ۙ
78.7. அது ஆட்டம் காணாமல் தடுப்பதற்கு அதில் மலைகளை முளைகளாக ஆக்கியுள்ளோம்.
Os Tafssir em língua árabe:
وَّخَلَقْنٰكُمْ اَزْوَاجًا ۟ۙ
78.8. -மனிதர்களே!- உங்களை உங்களில் ஆண், பெண் இணைகளாகப் படைத்துள்ளோம்.
Os Tafssir em língua árabe:
وَّجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا ۟ۙ
78.9. நீங்கள் பணியிலிருந்து ஓய்வெடுக்கும் பொருட்டு தூக்கத்தை அமைத்துள்ளோம்.
Os Tafssir em língua árabe:
وَّجَعَلْنَا الَّیْلَ لِبَاسًا ۟ۙ
78.10. உங்களின் மறைவிடங்களை நீங்கள் மறைத்துக்கொள்ளும் ஆடையைப் போன்று தன் இருளினால் உங்களை மறைக்கக் கூடியதாக இரவை ஆக்கியுள்ளோம்.
Os Tafssir em língua árabe:
وَّجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا ۟ۚ
78.11. பகலை வாழ்வாதாரத்தைத் தேடி சம்பாதிப்பதற்கான களமாக ஆக்கியுள்ளோம்.
Os Tafssir em língua árabe:
وَبَنَیْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا ۟ۙ
78.12. உங்களுக்கு மேலே சிறந்த முறையில் உருவாக்கபட்டுள்ள உறுதியான ஏழு வானங்களை அமைத்துள்ளோம்.
Os Tafssir em língua árabe:
وَّجَعَلْنَا سِرَاجًا وَّهَّاجًا ۟ۙ
78.13. சூரியனை கடுமையாக எரியும் ஒளிரும் விளக்காக அமைத்துள்ளோம்.
Os Tafssir em língua árabe:
وَّاَنْزَلْنَا مِنَ الْمُعْصِرٰتِ مَآءً ثَجَّاجًا ۟ۙ
78.14. மழைபொழிய தயாராக இருக்கும் மேகங்களிலிருந்து நாம் ஏராளமான நீரை இறக்குகின்றோம்.
Os Tafssir em língua árabe:
لِّنُخْرِجَ بِهٖ حَبًّا وَّنَبَاتًا ۟ۙ
78.15. அதன் மூலம் நாம் பலவகையான தானியங்களையும் தாவரங்களையும் வெளியாக்குவதற்காக.
Os Tafssir em língua árabe:
وَّجَنّٰتٍ اَلْفَافًا ۟ؕ
78.16. ஒரு மரத்தின் கிளைகள் அடுத்த மரத்தோடு பின்னிப்பிணைந்த அடர்ந்த கிளைகளுடைய தோட்டங்களையும் வெளிப்படுத்துவதற்காகத்தான்.
Os Tafssir em língua árabe:
اِنَّ یَوْمَ الْفَصْلِ كَانَ مِیْقَاتًا ۟ۙ
78.17. நிச்சயமாக படைப்புகளிடையே தீர்ப்பு வழங்கப்படும் நாள் மாற்றமடையாத நேரம் குறிப்பிடப்பட்டதாகும்.
Os Tafssir em língua árabe:
یَّوْمَ یُنْفَخُ فِی الصُّوْرِ فَتَاْتُوْنَ اَفْوَاجًا ۟ۙ
78.18. வானவர் இரண்டாது முறை சூர் ஊதும்போது - மனிதர்களே! - நீங்கள் கூட்டம்கூட்டமாக வருவீர்கள்.
Os Tafssir em língua árabe:
وَّفُتِحَتِ السَّمَآءُ فَكَانَتْ اَبْوَابًا ۟ۙ
78.19. வானம் திறக்கப்பட்டுவிடும். திறக்கப்பட்ட வாயில்களைப் போன்று அதில் திறந்த இடைவெளிகளும் வெடிப்புகளும் ஏற்பட்டுவிடும்.
Os Tafssir em língua árabe:
وَّسُیِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا ۟ؕ
78.20. மலைகள் இடம்பெயர்ந்து செல்லும். எந்த அளவுக்கெனில் அவை பரப்பப்பட்ட புழுதியாகி கானலைப் போன்றாகிவிடும்.
Os Tafssir em língua árabe:
اِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا ۟ۙ
78.21. நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.
Os Tafssir em língua árabe:
لِّلطَّاغِیْنَ مَاٰبًا ۟ۙ
78.22. அது அநியாயக்காரர்கள் திரும்புமிடமாகும்.
Os Tafssir em língua árabe:
لّٰبِثِیْنَ فِیْهَاۤ اَحْقَابًا ۟ۚ
78.23. அவர்கள் அதில் நீடூழி காலம் என்றென்றும் வீழ்ந்துகிடப்பார்கள்.
Os Tafssir em língua árabe:
لَا یَذُوْقُوْنَ فِیْهَا بَرْدًا وَّلَا شَرَابًا ۟ۙ
78.24. அங்கு அவர்கள் நரகின் வெப்பதைத் தணிக்கும் குளிர்மையான காற்றையோ, சுவையான பானத்தையோ சுவைக்க மாட்டார்கள்.
Os Tafssir em língua árabe:
اِلَّا حَمِیْمًا وَّغَسَّاقًا ۟ۙ
78.25. கொதிக்கும் நீரையும் நரகவாசிகளிடமிருந்து வழியும் சீழையும் தவிர அவர்கள் வேறெதையும் சுவைக்க மாட்டார்கள்.
Os Tafssir em língua árabe:
جَزَآءً وِّفَاقًا ۟ؕ
78.26. இது அவர்கள் இருந்துகொண்டிருந்த நிராகரிப்பு மற்றும் வழிகேட்டிற்குத் தகுந்த கூலியாகும்.
Os Tafssir em língua árabe:
اِنَّهُمْ كَانُوْا لَا یَرْجُوْنَ حِسَابًا ۟ۙ
78.27. ஏனெனில் உலகில் நிச்சயமாக அவர்கள், மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை நம்பாமல் இருந்ததனால், மறுமையில் கணக்குக் கேட்கப்படுவதை அஞ்சாதோராக இருந்தனர். அவர்கள் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை நம்பியிருந்தால் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள்.
Os Tafssir em língua árabe:
وَّكَذَّبُوْا بِاٰیٰتِنَا كِذَّابًا ۟ؕ
78.28. நம் தூதர்மீது இறக்கப்பட்ட நம் வசனங்களை அவர்கள் கடுமையாக மறுத்தார்கள்.
Os Tafssir em língua árabe:
وَكُلَّ شَیْءٍ اَحْصَیْنٰهُ كِتٰبًا ۟ۙ
78.29. நாம் அவர்களின் அனைத்துச் செயல்பாடுகளையும் எண்ணி கணக்கிட்டு வைத்துள்ளோம். அவை அவர்களின் செயல்பதிவேடுகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
Os Tafssir em língua árabe:
فَذُوْقُوْا فَلَنْ نَّزِیْدَكُمْ اِلَّا عَذَابًا ۟۠
78.30. -வரம்புமீறியவர்களே!- நிரந்தரமான இந்த வேதனையைச் சுவையுங்கள். நாம் உங்களுக்கு மென்மேலும் வேதனை மேல் வேதனையைத்தான் அதிகரிப்போம்.
Os Tafssir em língua árabe:
Das notas do versículo nesta página:
• إحكام الله للخلق دلالة على قدرته على إعادته.
1. நுணுக்கமான அல்லாஹ்வின் படைப்பு மீண்டும் அதனைப் படைப்பதற்கு அவனுக்கு ஆற்றல் உள்ளது என்பதற்கு ஆதாரமாகும்.

• الطغيان سبب دخول النار.
2. வரம்புமீறல் நரகத்தின்பால் இட்டுச் செல்லும் காரணிகளில் ஒன்றாகும்.

• مضاعفة العذاب على الكفار.
3. நிராகரிப்பாளர்களுக்குப் பலமடங்கு வேதனையளிக்கப்படும்.

اِنَّ لِلْمُتَّقِیْنَ مَفَازًا ۟ۙ
78.31. நிச்சயமாக தங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு சுவனம் என்னும் வெற்றிக்கான அவர்கள் வேண்டிய இடம் இருக்கின்றது.
Os Tafssir em língua árabe:
حَدَآىِٕقَ وَاَعْنَابًا ۟ۙ
78.32. தோட்டங்களும் திராட்சைகளும்.
Os Tafssir em língua árabe:
وَّكَوَاعِبَ اَتْرَابًا ۟ۙ
78.33. சம வயதுடைய கன்னிகளும்.
Os Tafssir em língua árabe:
وَّكَاْسًا دِهَاقًا ۟ؕ
78.34. நிரப்பமான மதுக் கிண்ணங்களும் உண்டு.
Os Tafssir em língua árabe:
لَا یَسْمَعُوْنَ فِیْهَا لَغْوًا وَّلَا كِذّٰبًا ۟ۚۖ
78.35. அவர்கள் சுவனத்தில் வீணான விஷயத்தையோ, பொய்யானதையோ செவியுறமாட்டார்கள். ஒருவருக்கொருவர் பொய்யுரைக்கவுமாட்டார்கள்.
Os Tafssir em língua árabe:
جَزَآءً مِّنْ رَّبِّكَ عَطَآءً حِسَابًا ۟ۙ
78.36. இவையனைத்தும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய போதுமான வெகுமதியாகும்.
Os Tafssir em língua árabe:
رَّبِّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا الرَّحْمٰنِ لَا یَمْلِكُوْنَ مِنْهُ خِطَابًا ۟ۚ
78.37. அவன் வானங்கள், பூமி மற்றும் அவையிரண்டிற்கும் இடையிலுள்ளவற்றின் இறைவன். இம்மையிலும் மறுமையிலும் அளவிலாக் கருணையாளன். அவன் அனுமதியளித்தால் தவிர பூமியிலோ வானத்திலோ உள்ள எவரும் அவனிடம் உரையாட சக்திபெற மாட்டார்கள்.
Os Tafssir em língua árabe:
یَوْمَ یَقُوْمُ الرُّوْحُ وَالْمَلٰٓىِٕكَةُ صَفًّا ۙۗؕ— لَّا یَتَكَلَّمُوْنَ اِلَّا مَنْ اَذِنَ لَهُ الرَّحْمٰنُ وَقَالَ صَوَابًا ۟
78.38. ஜிப்ரீலும் வானவர்களும் அணிவகுத்து நிற்கும் நாளில் அளவிலாக் கருணையாளன் யாருக்கு அனுமதியளித்து சிபாரிசு கூறுபவரைத் தவிர வேறு யாரும் பரிந்துரை செய்ய முடியாது. ஏகத்துவ வார்த்தையை போன்று நேர்மையானதை கூறுவார்.
Os Tafssir em língua árabe:
ذٰلِكَ الْیَوْمُ الْحَقُّ ۚ— فَمَنْ شَآءَ اتَّخَذَ اِلٰی رَبِّهٖ مَاٰبًا ۟
78.39. உங்களுக்கு வர்ணிக்கப்பட்ட அந்த உண்மையான நாள் வருவதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. யார் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள விரும்புகிறாரோ அவர் தம் இறைவனை திருப்திபடுத்தும் நற்செயல்களுக்கான வழியை அமைத்துக் கொள்ளட்டும்.
Os Tafssir em língua árabe:
اِنَّاۤ اَنْذَرْنٰكُمْ عَذَابًا قَرِیْبًا ۖۚ۬— یَّوْمَ یَنْظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ یَدٰهُ وَیَقُوْلُ الْكٰفِرُ یٰلَیْتَنِیْ كُنْتُ تُرٰبًا ۟۠
78.40. -மனிதர்களே!- நெருங்கி வரக்கூடிய வேதனையைக் கொண்டு நிச்சயமாக நாம் உங்களை எச்சரித்துவிட்டோம். அந்த நாளில் மனிதன் உலகில் தான் செய்த செயல்களைக் காண்பான். நீங்கள் மண்ணாக ஆகிவிடுங்கள் என்று மிருகங்களை நோக்கி மறுமை நாளில் கூறப்படுவது போன்று, நிராகரிப்பாளனும் வேதனையிலிருந்து விடுதலையடைய ஆசைப்பட்டவனாக, “அந்தோ! நான் மண்ணாக ஆகியிருக்கக்கூடாதா!” எனக் கூறுவான்.
Os Tafssir em língua árabe:
Das notas do versículo nesta página:
• التقوى سبب دخول الجنة.
1. இறையச்சம் சுவனத்தின்பால் இட்டுச் செல்லும் காரணியாக இருக்கின்றது.

• تذكر أهوال القيامة دافع للعمل الصالح.
2. மறுமையின் பயங்கரங்களைச் சிந்திப்பது நற்காரியம் புரிவதற்குத் தூண்டக்கூடியதாகும்.

• قبض روح الكافر بشدّة وعنف، وقبض روح المؤمن برفق ولين.
3. நிராகரிப்பாளனின் ஆத்மா பலவந்தமாகவும் கடுமையாகவும் நம்பிக்கையாளனின் ஆத்மா மிருதுவாகவும் கைப்பற்றப்படும்.

 
Tradução dos significados Surah: Suratu An-Naba
Índice de capítulos Número de página
 
Tradução dos significados do Nobre Qur’an. - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Índice de tradução

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Fechar