Check out the new design

Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu. * - Ishakiro ry'ibisobanuro


Ibisobanuro by'amagambo Isura: A Nahlu   Umurongo:
وَلَا تَتَّخِذُوْۤا اَیْمَانَكُمْ دَخَلًا بَیْنَكُمْ فَتَزِلَّ قَدَمٌ بَعْدَ ثُبُوْتِهَا وَتَذُوْقُوا السُّوْٓءَ بِمَا صَدَدْتُّمْ عَنْ سَبِیْلِ اللّٰهِ ۚ— وَلَكُمْ عَذَابٌ عَظِیْمٌ ۟
16.94. உங்களின் சத்தியங்களை ஒருவரையொருவர் ஏமாற்றும் கருவியாக ஆக்கிவிடாதீர்கள். உங்கள் மனஇச்சையைப் பின்பற்றி நீங்கள் விரும்பிய சமயத்தில் அதனை முறித்து விடவும், விரும்பினால் நிறைவேற்றவும் செய்யாதீர்கள். நீங்கள் இவ்வாறு செய்தால் உங்களின் பாதங்கள் நேர்வழியில் உறுதியான பின்னரும் நீங்கள் நெறிபிறழ்ந்து விடுவீர்கள். அல்லாஹ்வின் பாதையை விட்டு நெறிபிறழ்ந்ததனாலும் மற்றவர்களையும் நெறிபிறழச் செய்ததனாலும் நீங்கள் வேதனையை அனுபவிப்பீர்கள். உங்களுக்கு பல மடங்கு வேதனை உண்டு.
Ibisobanuro by'icyarabu:
وَلَا تَشْتَرُوْا بِعَهْدِ اللّٰهِ ثَمَنًا قَلِیْلًا ؕ— اِنَّمَا عِنْدَ اللّٰهِ هُوَ خَیْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۟
16.95. நீங்கள் ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல் அதனை முறிப்பதற்காக அல்லாஹ்வுக்கு அளித்த வாக்குறுதிக்கு பகரமாக அற்ப ஆதாயத்தைப் பெறாதீர்கள். நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் அல்லாஹ்விடம் இருக்கின்ற மறுமையின் நிலையான அருட்கொடைகள் வாக்குறுதியை மீறுவதற்காக நீங்கள் பெறும் அற்ப ஆதாயங்களைவிடச் சிறந்தவையாகும்.
Ibisobanuro by'icyarabu:
مَا عِنْدَكُمْ یَنْفَدُ وَمَا عِنْدَ اللّٰهِ بَاقٍ ؕ— وَلَنَجْزِیَنَّ الَّذِیْنَ صَبَرُوْۤا اَجْرَهُمْ بِاَحْسَنِ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
16.96. -மனிதர்களே!- உங்களிடம் இருக்கும் செல்வங்களும், இன்பங்களும், சுவண்டிகளும் அவை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அழிந்துவிடக் கூடியவையே. அல்லாஹ்விடம் இருக்கும் கூலியே நிலையானது. நிலையானதை விட்டு விட்டு அழியக்கூடியதற்கு எவ்வாறு முன்னுரிமை அழிக்கிறீர்கள்? பொறுமையாக இருந்து தங்களின் ஒப்பந்தங்களை நிறைவேற்றுபவர்களுக்கு அவர்கள் செய்த நற்செயல்களுக்கான சிறந்த கூலியை வழங்கிடுவோம். அவர்கள் செய்த நன்மைகளுக்கு பத்திலிருந்து எழுநூறு வரை பன்மடங்கு நாம் கூலி வழங்கிடுவோம்.
Ibisobanuro by'icyarabu:
مَنْ عَمِلَ صَالِحًا مِّنْ ذَكَرٍ اَوْ اُ وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْیِیَنَّهٗ حَیٰوةً طَیِّبَةً ۚ— وَلَنَجْزِیَنَّهُمْ اَجْرَهُمْ بِاَحْسَنِ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
16.97. ஆணாயினும் பெண்ணாயினும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்ட நிலையில் மார்க்கம் சொன்ன பிரகாரம் நற்செயல் புரிபவராக இருந்தால் நாம் இவ்வுலகில் அவரை, இறைவிதியை ஏற்றுக்கொண்டு போதுமென்ற மனதுடன் நன்மை செய்வதற்கான வாய்ப்பும் அளித்து நல்ல வாழ்வு வாழச் செய்வோம். அவர்கள் இவ்வுலகில் செய்த நற்செயல்களுக்கு மறுமையில் மிகச் சிறந்த கூலியை நாம் வழங்கிடுவோம்.
Ibisobanuro by'icyarabu:
فَاِذَا قَرَاْتَ الْقُرْاٰنَ فَاسْتَعِذْ بِاللّٰهِ مِنَ الشَّیْطٰنِ الرَّجِیْمِ ۟
16.98. -நம்பிக்கையாளனே!- நீ குர்ஆனை படிக்க விரும்பினால் அல்லாஹ்வின் அருளில் இருந்து விரட்டப்பட்ட ஷைத்தானின் ஊசலாட்டங்களை விட்டும் பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துகொள்.
Ibisobanuro by'icyarabu:
اِنَّهٗ لَیْسَ لَهٗ سُلْطٰنٌ عَلَی الَّذِیْنَ اٰمَنُوْا وَعَلٰی رَبِّهِمْ یَتَوَكَّلُوْنَ ۟
16.99. தங்கள் இறைவனின்மீது நம்பிக்கைகொண்டு தங்களின் எல்லா விவகாரங்களிலும் அவனையே சார்ந்திருப்பவர்கள்மீது ஷைத்தானின் ஆதிக்கம் செல்லுபடியாகாது.
Ibisobanuro by'icyarabu:
اِنَّمَا سُلْطٰنُهٗ عَلَی الَّذِیْنَ یَتَوَلَّوْنَهٗ وَالَّذِیْنَ هُمْ بِهٖ مُشْرِكُوْنَ ۟۠
16.100. அவனிடம் தோழமைகொண்டு அவனது வழிகெடுத்தலுக்குக் கட்டுப்பட்டு அவனது வழிகெடுத்தலால் அல்லாஹ்வுக்கு இணைவைப்பவர்களாகி அவனுடன் மற்றவர்களை வணங்குகிறார்களே அவர்களிடம் தான் அவனுடைய ஊசலாட்டங்கள் மூலமான அதிகாரம் செல்லுபடியாகும்.
Ibisobanuro by'icyarabu:
وَاِذَا بَدَّلْنَاۤ اٰیَةً مَّكَانَ اٰیَةٍ ۙ— وَّاللّٰهُ اَعْلَمُ بِمَا یُنَزِّلُ قَالُوْۤا اِنَّمَاۤ اَنْتَ مُفْتَرٍ ؕ— بَلْ اَكْثَرُهُمْ لَا یَعْلَمُوْنَ ۟
16.101. நாம் குர்ஆனின் ஏதேனும் ஒரு வசனத்தின் சட்டத்தை இன்னுமொரு வசனத்தின் மூலம் மாற்றினால் - காரணத்துக்காக குர்ஆனில் எதை நீக்க வேண்டும், எதை நீக்கக் கூடாது என்பதை அவனே நன்கறிந்தவன் - அவர்கள் கூறுகிறார்கள்: -“முஹம்மதே!- நீர் அல்லாஹ்வின் மீது புனைந்து பொய் கூறுகின்றீர்.” மாறாக அவர்களில் பெரும்பாலோர் இந்த மாற்றம் இறைவன் அறிந்த உன்னதமான நோக்கத்தின்படியே நடைபெறுகிறது என்பதை அறியமாட்டார்கள்.
Ibisobanuro by'icyarabu:
قُلْ نَزَّلَهٗ رُوْحُ الْقُدُسِ مِنْ رَّبِّكَ بِالْحَقِّ لِیُثَبِّتَ الَّذِیْنَ اٰمَنُوْا وَهُدًی وَّبُشْرٰی لِلْمُسْلِمِیْنَ ۟
16.102. -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “தவறுகளோ, மாற்றங்களோ, திரிவுகளோ அற்ற சத்தியத்தைக்கொண்டு ஜீப்ரீல் அல்லாஹ்விடமிருந்து இந்த குர்ஆனை இறக்கியுள்ளார். அது அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டவர்களை, புதிதாக ஒன்று இறங்கும் போதும் அதிலிருந்து ஏதேனும் ஒன்று நீக்கப்படும் போதும், அவர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தக்கூடியதாகவும் அவர்களுக்கு சத்தியத்தின்பால் வழிகாட்டக்கூடியதாகவும் இறைவனுக்கு கட்டுப்பட்டவர்களுக்கு அவர்கள் பெறும் சிறந்த கூலியைக் கொண்டு நற்செய்தி சொல்லக் கூடியதாகவும் இருக்கின்றது.
Ibisobanuro by'icyarabu:
Inyungu dukura muri ayat kuri Uru rupapuro:
• العمل الصالح المقرون بالإيمان يجعل الحياة طيبة.
1. ஈமானுடன் கூடிய நற்செயல்கள் நல்வாழ்வை அளிக்கின்றன.

• الطريق إلى السلامة من شر الشيطان هو الالتجاء إلى الله، والاستعاذة به من شره.
2. ஷைத்தானின் தீங்கிலிருந்து தப்புவதற்கான ஒரே வழி அல்லாஹ்விடம் புகலிடம் பெற்று அவன் மூலம் அவனது தீங்கிலிருந்து பாதுகாப்புத் தேடுவதாகும்.

• على المؤمنين أن يجعلوا القرآن إمامهم، فيتربوا بعلومه، ويتخلقوا بأخلاقه، ويستضيئوا بنوره، فبذلك تستقيم أمورهم الدينية والدنيوية.
3. அல்குர்ஆனை தமது வழிகாட்டியாக எடுத்து, அதன் கல்விகளைக் கற்று, அதன் நற்குணங்களை அணிகலன்களாகக் கொண்டு, அதன் ஒளியால் பிரகாசமுற்று விளங்குவது முஃமின்கள் மீது கடமையாகும். அதன் மூலமே அவர்களது ஈருலக காரியங்களும் சீராகும்.

• نسخ الأحكام واقع في القرآن زمن الوحي لحكمة، وهي مراعاة المصالح والحوادث، وتبدل الأحوال البشرية.
4. வஹி இறங்கும் காலத்தில் அல்குர்ஆனில் சட்ட மாற்றம் இடம்பெற்றதற்கு ஒரு நோக்கமுண்டு. நலன்களையும் நிகழ்வுகளையும் மனித நிலமைகள் மாறுபடுவதையும் கவனத்தில் கொள்வதே அந்நோக்கமாகும்.

 
Ibisobanuro by'amagambo Isura: A Nahlu
Urutonde rw'amasura numero y'urupapuro
 
Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu. - Ishakiro ry'ibisobanuro

Byasohowe n'ikigo Tafsir of Quranic Studies.

Gufunga