Check out the new design

Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu. * - Ishakiro ry'ibisobanuro


Ibisobanuro by'amagambo Isura: Twaha   Umurongo:
وَلَقَدْ اَوْحَیْنَاۤ اِلٰی مُوْسٰۤی ۙ۬— اَنْ اَسْرِ بِعِبَادِیْ فَاضْرِبْ لَهُمْ طَرِیْقًا فِی الْبَحْرِ یَبَسًا ۙ— لَّا تَخٰفُ دَرَكًا وَّلَا تَخْشٰی ۟
20.77. நாம் மூஸாவிற்கு வஹி அறிவித்தோம்: “எகிப்திலிருந்து என் அடியார்களை அழைத்துக் கொண்டு இரவு நேரத்தில் யாரும் அறியாதவண்ணம் சென்றுவிடுவீராக. கைத்தடியால் கடலை அடித்த பிறகு அவர்களுக்காக உலர்ந்த பாதையை அமைத்துக் கொள்வீராக. ஃபிர்அவ்ன் உங்களைப் பிடித்துவிடுவான் என்றோ கடலில் மூழ்கிவிடுவோம் என்றோ நீங்கள் அஞ்ச வேண்டாம்.”
Ibisobanuro by'icyarabu:
فَاَتْبَعَهُمْ فِرْعَوْنُ بِجُنُوْدِهٖ فَغَشِیَهُمْ مِّنَ الْیَمِّ مَا غَشِیَهُمْ ۟ؕ
20.78. ஃபிர்அவ்ன் தன் படைகளுடன் அவர்களைப் பின்தொடர்ந்தான். கடலிலிருந்து மூட வேண்டிய ஏதோ ஒன்று- அதன் உண்மை நிலையை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள்- அவனது படையை மூடிவிட்டது. அவர்கள் அனைவரும் மூழ்கி அழிந்தார்கள். மூஸாவும் அவருடன் இருந்தவர்களும் தப்பித்தார்கள்.
Ibisobanuro by'icyarabu:
وَاَضَلَّ فِرْعَوْنُ قَوْمَهٗ وَمَا هَدٰی ۟
20.79. ஃபிர்அவ்ன் தன் சமூகத்தினருக்கு நிராகரிப்பை அழகுபடுத்தியும், அசத்தியத்தைக் கொண்டு அவர்களை ஏமாற்றியும் அவர்களை வழிகெடுத்துவிட்டான். அவர்களுக்கு நேரான வழியை அவன் காட்டவில்லை.
Ibisobanuro by'icyarabu:
یٰبَنِیْۤ اِسْرَآءِیْلَ قَدْ اَنْجَیْنٰكُمْ مِّنْ عَدُوِّكُمْ وَوٰعَدْنٰكُمْ جَانِبَ الطُّوْرِ الْاَیْمَنَ وَنَزَّلْنَا عَلَیْكُمُ الْمَنَّ وَالسَّلْوٰی ۟
20.80. ஃபிர்அவ்னையும் அவனுடைய படைகளையும் விட்டு இஸ்ராயீலின் மக்களை பாதுகாத்த பிறகு நாம் அவர்களிடம் கூறினோம்: “இஸ்ராயீலின் மக்களே! நாம் உங்களின் எதிரிகளிடமிருந்து உங்களைக் காப்பாற்றியுள்ளோம். தூர் மலைக்கு பக்கத்தில் இருக்கின்ற பள்ளத்தாக்கின் வலது பக்கத்திலிருந்து நாம் மூஸாவுடன் உரையாடுவோம் என்று உங்களுக்கு வாக்களித்துள்ளோம். நீங்கள் பாலைவனத்தில் இருந்தபோது (மன்னு எனும்) தேன் போன்ற இனிப்புப் பானத்தையும் காடை போன்ற (சல்வா எனும்) நல்ல மாமிசமுடைய சிறு பறவையையும் உங்களுக்கு எங்களின் அருளாக இறக்கினோம்.
Ibisobanuro by'icyarabu:
كُلُوْا مِنْ طَیِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ وَلَا تَطْغَوْا فِیْهِ فَیَحِلَّ عَلَیْكُمْ غَضَبِیْ ۚ— وَمَنْ یَّحْلِلْ عَلَیْهِ غَضَبِیْ فَقَدْ هَوٰی ۟
20.81. நாம் உங்களுக்கு வழங்கிய அனுமதிக்கப்பட்ட சுவையான உணவுகளை உண்ணுங்கள். உங்களுக்கு அனுமதித்தவற்றில் எல்லை மீறி தடைசெய்யப்பட்டவற்றின்பால் சென்று விடாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால் என் கோபத்திற்குள்ளாகி விடுவீர்கள். எவர் என் கோபத்திற்கு உள்ளானாரோ அவர் ஈருலகிலும் அழிந்து துர்பாக்கியசாலியாகி விட்டார்.
Ibisobanuro by'icyarabu:
وَاِنِّیْ لَغَفَّارٌ لِّمَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًا ثُمَّ اهْتَدٰی ۟
20.82. நிச்சயமாக என் பக்கம் மீண்டு, நம்பிக்கை கொண்டு, நற்செயல் புரிந்து, பின்பு சத்தியத்தில் உறுதியாக நிலைத்திருப்பவர்களை நிச்சயமாக நான் அதிகம் மன்னிக்கக்கூடியவனாக இருக்கின்றேன்.
Ibisobanuro by'icyarabu:
وَمَاۤ اَعْجَلَكَ عَنْ قَوْمِكَ یٰمُوْسٰی ۟
20.83. -மூஸாவே!- உம் சமூகத்தினரை பின்னால் விட்டுவிட்டு என் பக்கம் விரைவாக உம்மை வரவைத்தது எது?
Ibisobanuro by'icyarabu:
قَالَ هُمْ اُولَآءِ عَلٰۤی اَثَرِیْ وَعَجِلْتُ اِلَیْكَ رَبِّ لِتَرْضٰی ۟
20.84. மூஸா கூறினார்: “அவர்கள் என் பின்னால் இருக்கிறார்கள். விரைவில் என்னை அடைந்துவிடுவார்கள். நீ என் விஷயத்தில் திருப்தியடைய வேண்டும் என்பதற்காகவே எனது சமூகத்தை முந்தி நான் உன் பக்கம் விரைந்து வந்துள்ளேன்.
Ibisobanuro by'icyarabu:
قَالَ فَاِنَّا قَدْ فَتَنَّا قَوْمَكَ مِنْ بَعْدِكَ وَاَضَلَّهُمُ السَّامِرِیُّ ۟
20.85. அல்லாஹ் கூறினான்: “நிச்சயமாக நாம் நீர் உமக்குப் பின் விட்டுவிட்டு வந்த உம் சமூகத்தினரை காளைக்கன்றை வணங்குவதைக் கொண்டு சோதித்துள்ளோம். அதனை வணங்குமாறு சாமிரி அவர்களை அழைத்துள்ளான். அவன் அதன் மூலம் அவர்களை வழிகெடுத்துவிட்டான்.
Ibisobanuro by'icyarabu:
فَرَجَعَ مُوْسٰۤی اِلٰی قَوْمِهٖ غَضْبَانَ اَسِفًا ۚ۬— قَالَ یٰقَوْمِ اَلَمْ یَعِدْكُمْ رَبُّكُمْ وَعْدًا حَسَنًا ؕ۬— اَفَطَالَ عَلَیْكُمُ الْعَهْدُ اَمْ اَرَدْتُّمْ اَنْ یَّحِلَّ عَلَیْكُمْ غَضَبٌ مِّنْ رَّبِّكُمْ فَاَخْلَفْتُمْ مَّوْعِدِیْ ۟
20.86. தம் சமூகம் காளைக்கன்றை வணங்கியதனால் அவர்கள் மீது கவலைகொண்டு மூஸா கோபமாக அவர்களிடம் திரும்பிச் சென்றார். அவர் அவர்களைப் பார்த்துக் கேட்டார்: “என் சமூகமே! அல்லாஹ் உங்களுக்குத் தவ்ராத்தை இறக்கி, சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வேன் என்று உங்களுக்கு அழகிய வாக்குறுதி அளிக்கவில்லையா? நீங்கள் மறந்துவிடுமளவுக்கு உங்கள் மீது காலம் நீண்டுவிட்டதா என்ன? அல்லது உங்களின் இந்த செயலின் மூலம் இறைவனின் கோபம் ஏற்பட்டு அவனது வேதனை உங்கள் மீது இறங்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? நான் உங்களின் பக்கம் திரும்பி வரும் வரைக்கும் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து உறுதியாக இருப்போம் என்று எனக்கு அளித்த வாக்குறுதிக்கு அதனால்தான் மாறுசெய்துவிட்டீர்களா?
Ibisobanuro by'icyarabu:
قَالُوْا مَاۤ اَخْلَفْنَا مَوْعِدَكَ بِمَلْكِنَا وَلٰكِنَّا حُمِّلْنَاۤ اَوْزَارًا مِّنْ زِیْنَةِ الْقَوْمِ فَقَذَفْنٰهَا فَكَذٰلِكَ اَلْقَی السَّامِرِیُّ ۟ۙ
20.87. மூஸாவின் சமூகத்தார் கூறினார்கள்: “-மூஸாவே!- நாங்கள் உமக்கு அளித்த வாக்குறுதிக்கு விரும்பி மாறாகச் செயல்படவில்லை. மாறாக நாங்கள் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டோம். நாங்கள் ஃபிர்அவ்னின் சமூகத்தாரிடமிருந்து ஆபரணங்களையும், சுமைகளையும் சுமந்து வந்தோம். அவற்றிலிருந்து நாங்கள் விடுபடுவதற்காக அவற்றை ஒரு குழியில் எறிந்துவிட்டோம். நாங்கள் அவற்றை குழியில் எறிந்தவாறே சாமிரியும் தன்னிடமிருந்த ஜிப்ரீலின் குதிரையின் பாதத்தின் மண்ணை எறிந்தான்.
Ibisobanuro by'icyarabu:
Inyungu dukura muri ayat kuri Uru rupapuro:
• من سُنَّة الله انتقامه من المجرمين بما يشفي صدور المؤمنين، ويقر أعينهم، ويذهب غيظ قلوبهم.
1. நம்பிக்கையாளர்களின் உள்ளங்களுக்கு நிவாரணியாகவும், கண்களையும் குளிரச் செய்யவும், அவர்களின் உள்ளங்களில் உள்ள ஆத்திரத்தைப் போக்கும் விதத்தில் குற்றவாளிகளைப் பழிவாங்குவது அல்லாஹ்வின் வழிமுறையாகும்.

• الطاغية شؤم على نفسه وعلى قومه؛ لأنه يضلهم عن الرشد، وما يهديهم إلى خير ولا إلى نجاة.
2. அநீதியான ஆட்சியாளன் தனக்கும், தன் சமூகத்திற்கும் துர்ச்சகுனமாக இருக்கின்றான். ஏனெனில் நிச்சயமாக அவன் மக்களை நேரான வழியைவிட்டும் கெடுக்கிறான். அவர்களுக்கு நன்மையின் பக்கமோ வெற்றியின் பக்கமோ வழிகாட்டுவதில்லை.

• النعم تقتضي الحفظ والشكر المقرون بالمزيد، وجحودها يوجب حلول غضب الله ونزوله.
3. அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்துவது அவை நிலையாக, பாதுகாப்பாக இருப்பதற்கும், அதிகரிக்கப்படுவதற்கும் காரணமாக அமைகிறது. அவற்றிற்கு நன்றிகெட்டத்தனமாக நடந்துகொள்வது அல்லாஹ்வின் கோபம் ஏற்பட்டு, வேதனை இறங்குவதற்கு காரணமாக அமைகின்றது.

• الله غفور على الدوام لمن تاب من الشرك والكفر والمعصية، وآمن به وعمل الصالحات، ثم ثبت على ذلك حتى مات عليه.
4. இணைவைப்பு, நிராகரிப்பு, பாவம் என்பனவற்றிலிருந்து மீண்டு, அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, நற்செயல்களில் ஈடுபட்டு, மரணிக்கும் வரை அதில் உறுதியாக நிலைத்திருப்பவரை அல்லாஹ் எப்போதும் மன்னிப்பவனாக உள்ளான்.

• أن العجلة وإن كانت في الجملة مذمومة فهي ممدوحة في الدين.
5. பொதுவாக, அவசரம் இகழப்பட்டதாக இருந்தாலும் நிச்சயமாக மார்க்க விடயத்தில் அது புகழுக்குரியதே.

 
Ibisobanuro by'amagambo Isura: Twaha
Urutonde rw'amasura numero y'urupapuro
 
Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu. - Ishakiro ry'ibisobanuro

Byasohowe n'ikigo Tafsir of Quranic Studies.

Gufunga