Check out the new design

Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu. * - Ishakiro ry'ibisobanuro


Ibisobanuro by'amagambo Isura: Annisau   Umurongo:
وَمَا كَانَ لِمُؤْمِنٍ اَنْ یَّقْتُلَ مُؤْمِنًا اِلَّا خَطَأً ۚ— وَمَنْ قَتَلَ مُؤْمِنًا خَطَأً فَتَحْرِیْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ وَّدِیَةٌ مُّسَلَّمَةٌ اِلٰۤی اَهْلِهٖۤ اِلَّاۤ اَنْ یَّصَّدَّقُوْا ؕ— فَاِنْ كَانَ مِنْ قَوْمٍ عَدُوٍّ لَّكُمْ وَهُوَ مُؤْمِنٌ فَتَحْرِیْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ ؕ— وَاِنْ كَانَ مِنْ قَوْمٍ بَیْنَكُمْ وَبَیْنَهُمْ مِّیْثَاقٌ فَدِیَةٌ مُّسَلَّمَةٌ اِلٰۤی اَهْلِهٖ وَتَحْرِیْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ ۚ— فَمَنْ لَّمْ یَجِدْ فَصِیَامُ شَهْرَیْنِ مُتَتَابِعَیْنِ ؗ— تَوْبَةً مِّنَ اللّٰهِ ؕ— وَكَانَ اللّٰهُ عَلِیْمًا حَكِیْمًا ۟
4.92. தவறுதலாகவேயன்றி ஒரு நம்பிக்கையாளனைக் கொல்வது நம்பிக்கையாளனுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல. ஆயினும் ஒருவர் தவறுதலாக ஒரு நம்பிக்கையாளனைக் கொலை செய்துவிட்டால் தனது செயலுக்குப் பிராயசித்தமாக அவர் ஒரு முஸ்லிமான அடிமையை விடுதலை செய்யட்டும். கொல்லப்பட்டவரின் வாரிசுகளுக்கு ஏற்றுக் கொள்ளப்படும் இழப்பீட்டுத் தொகையையும் கொன்றவரிடமிருந்து அனந்தரம் பெறத்தக்க உறவினர்கள் வழங்கிவிட வேண்டும். ஆயினும் கொல்லப்பட்டவரின் வாரிசுகள் இழப்பீட்டுத் தொகையைத் தள்ளுபடி செய்துவிட்டாலே தவிர. கொல்லப்பட்டவர் உங்களுடன் போர் புரியும் சமூகத்தைச் சார்ந்த நம்பிக்கையாளராக இருந்தால் கொன்றவர் தனது செயலுக்குப் பிராயசித்தமாக அவர் ஒரு அடிமையை விடுதலை செய்யட்டும். இழப்பீட்டுத் தொகை அவர்மீது கடமையில்லை. கொல்லப்பட்டவர் நம்பிக்கையாளராக அல்லாமல் உங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட சமூகத்தைச் சார்ந்தவராக இருந்தால் கொல்லப்பட்டவரின் வாரிசுகளுக்கு ஏற்றுக் கொள்ளப்படும் இழப்பீட்டுத் தொகையை கொன்றவரிடமிருந்து அனந்தரம் பெறத்தக்க உறவினர்கள் வழங்கிவிட வேண்டும். கொலை செய்தவர் தனது செயலுக்கு பிராயசித்தமாக நம்பிக்கைகொண்ட ஒரு அடிமையையும் விடுதலை செய்துவிட வேண்டும். அவருக்கு உரிமைவிடத்தக்க அடிமை கிடைக்காவிடின் அல்லது அதற்கான பெறுமதியை வழங்குவதற்கு சக்தியில்லையெனில் அவர் செய்த காரியத்தை அல்லாஹ் மன்னிக்கும்பொருட்டு இரண்டு மாதங்கள் இடைவிடாமல் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும். அல்லாஹ் தன் அடியார்களின் எண்ணங்களையும் செயல்களையும் நன்கறிந்தவன். அவன் சட்டமியற்றுவதிலும் நிர்வகிப்பதிலும் ஞானம்மிக்கவன்.
Ibisobanuro by'icyarabu:
وَمَنْ یَّقْتُلْ مُؤْمِنًا مُّتَعَمِّدًا فَجَزَآؤُهٗ جَهَنَّمُ خَلِدًا فِیْهَا وَغَضِبَ اللّٰهُ عَلَیْهِ وَلَعَنَهٗ وَاَعَدَّ لَهٗ عَذَابًا عَظِیْمًا ۟
4.93. வேண்டுமென்றே அநியாயமாக ஒரு நம்பிக்கையாளனைக் கொலை செய்பவர் அதனை அனுமதியாகக் கருதினால் அல்லது அச்செயலுக்கு பாவமன்னிப்புக் கோராவிட்டால் அவர் நிரந்தரமாக நரகத்தில் தங்கிவிடுவார். அல்லாஹ் அவர் மீது கோபம்கொள்வான். தன் அருளிலிருந்து அவரைத் தூரமாக்குவான். அவர் பெரும் பாவத்தை சம்பாதித்ததன் காரணமாக அவருக்கு அவன் கடுமையான வேதனையைத் தயார்படுத்திவைத்துள்ளான்.
Ibisobanuro by'icyarabu:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا ضَرَبْتُمْ فِیْ سَبِیْلِ اللّٰهِ فَتَبَیَّنُوْا وَلَا تَقُوْلُوْا لِمَنْ اَلْقٰۤی اِلَیْكُمُ السَّلٰمَ لَسْتَ مُؤْمِنًا ۚ— تَبْتَغُوْنَ عَرَضَ الْحَیٰوةِ الدُّنْیَا ؗ— فَعِنْدَ اللّٰهِ مَغَانِمُ كَثِیْرَةٌ ؕ— كَذٰلِكَ كُنْتُمْ مِّنْ قَبْلُ فَمَنَّ اللّٰهُ عَلَیْكُمْ فَتَبَیَّنُوْا ؕ— اِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرًا ۟
4.94. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் போருக்காகப் புறப்பட்டால் நீங்கள் எதிர்த்துப் போரிடுவோர் விடயத்தில் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். உங்களிடம் இஸ்லாத்தை வெளிப்படுத்தியவரைப் பார்த்து, “நீ நம்பிக்கையாளன் அல்ல. உயிர், பொருளின் மீதுள்ள பயத்தினால்தான் இஸ்லாத்தை வெளிப்படுத்துகிறாய்” என்று கூறி, இவ்வுலகின் அற்ப ஆதாயமான போர்ச் செல்வங்களுக்கு ஆசைப்பட்டு அவரைக் கொலை செய்துவிடாதீர்கள். அல்லாஹ்விடத்தில் ஏராளமான செல்வங்கள் இருக்கின்றன. அவை இவற்றைவிடச் சிறந்ததாகும். இதற்கு முன்னர் நீங்களும் தனது கூட்டத்தை விட்டும் தனது ஈமானை மறைக்கும் இவரைப் போன்றுதான் இருந்தீர்கள். அல்லாஹ் இஸ்லாத்தை வழங்கி உங்கள்மீது கிருபை செய்து உங்களது உயிர்களைப் பாதுகாத்தான். எனவே நன்கு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களின் எவ்வளவு சிறிய செயலும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
Ibisobanuro by'icyarabu:
Inyungu dukura muri ayat kuri Uru rupapuro:
• جاء القرآن الكريم معظِّمًا حرمة نفس المؤمن، وناهيًا عن انتهاكها، ومرتبًا على ذلك أشد العقوبات.
1. குர்ஆன் நம்பிக்கையாளரின் உயிரைப் புனிதத்தை மகிமைப்படுத்தி அதனை மீறுவதைத் தடைசெய்துள்ளது. அவ்வாறு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனையை விதித்துள்ளது.

• من عقيدة أهل السُّنَّة والجماعة أن المؤمن القاتل لا يُخلَّد أبدًا في النار، وإنما يُعذَّب فيها مدة طويلة ثم يخرج منها برحمة الله تعالى.
2. நம்பிக்கைகொண்ட கொலையாளி நரகத்தில் நிரந்தரமாக இருக்கமாட்டான்; மாறாக நீண்ட காலம் நரகில் தண்டிக்கப்பட்ட பின் அல்லாஹ்வின் அருளால் அதிலிருந்து வௌியேற்றப்படுவான் என்பதே அஹ்லுஸ் ஸுன்னாக்களின் கொள்கையாகும்.

• وجوب التثبت والتبيُّن في الجهاد، وعدم الاستعجال في الحكم على الناس حتى لا يُعتدى على البريء.
3.போரில் உறுதிப்படுத்திக்கொள்வதும் நிரபராதி அநீதியிழைக்கப்படக்கூடாது என்பதற்காக மக்களைப் பற்றி முடிவுசெய்யும் போது அவசரப்படாமல் நடந்துகொள்வதும் கட்டாயமாகும்.

 
Ibisobanuro by'amagambo Isura: Annisau
Urutonde rw'amasura numero y'urupapuro
 
Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu. - Ishakiro ry'ibisobanuro

Byasohowe n'ikigo Tafsir of Quranic Studies.

Gufunga