Ibisobanuro bya qoran ntagatifu - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Ishakiro ry'ibisobanuro


Ibisobanuro by'amagambo Umurongo: (143) Isura: Al A’araf
وَلَمَّا جَآءَ مُوْسٰی لِمِیْقَاتِنَا وَكَلَّمَهٗ رَبُّهٗ ۙ— قَالَ رَبِّ اَرِنِیْۤ اَنْظُرْ اِلَیْكَ ؕ— قَالَ لَنْ تَرٰىنِیْ وَلٰكِنِ انْظُرْ اِلَی الْجَبَلِ فَاِنِ اسْتَقَرَّ مَكَانَهٗ فَسَوْفَ تَرٰىنِیْ ۚ— فَلَمَّا تَجَلّٰی رَبُّهٗ لِلْجَبَلِ جَعَلَهٗ دَكًّا وَّخَرَّ مُوْسٰی صَعِقًا ۚ— فَلَمَّاۤ اَفَاقَ قَالَ سُبْحٰنَكَ تُبْتُ اِلَیْكَ وَاَنَا اَوَّلُ الْمُؤْمِنِیْنَ ۟
7.143. மூஸா குறிப்பிட்ட நேரத்தில் தம் இறைவனுடன் உரையாட வந்து, அது முழுமையான நாற்பது இரவுகளாகும் அவருடைய இறைவன் ஏவல்கள், விலக்கல்கள் மற்றும் ஏனைய விடயங்களை அவருடன் பேசிய போது, அவரது உள்ளம் தனது இறைவனைக் காண ஆவல் கொண்டது. எனவே அவனைப் பார்க்கவேண்டுமெனக் கோரினார். அதற்கு அல்லாஹ் பின்வருமாறு விடையளித்தான், “இவ்வுலக வாழ்வில் நீர் அதற்குச் சக்தி பெறாததால் என்னை ஒருபோதும் காண முடியாது. ஆயினும் அந்த மலையைப் பாரும். அதில் என் பேரொளி வெளிப்பட்டும் அது தன் இடத்தில் நிலைத்திருந்தால் நீர் என்னைக் காணலாம். அது பூமியோடு தரைமட்டமாகிவிட்டால் என்னைக் காணமுடியாது” என்றான். அல்லாஹ் அந்த மலையில் தன் பேரொளியை வெளிப்படுத்தியபோது அது தூள் தூளாகிவிட்டது. மூஸா மயங்கி கீழே விழுந்தார். மயக்கம் தெளிந்த போது அவர் கூறினார்: “என் இறைவா, உனக்குப் பொருத்தமற்ற எல்லாவற்றையும் விட்டு நான் உன்னைத் தூய்மைப்படுத்துகிறேன். இவ்வுலகில் உன்னைப் பார்க்க வேண்டும் என்று நான் கேட்டதற்காக உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகிறேன். என் சமூகத்தில் நம்பிக்கைகொண்டவர்களில் நானே முதலாமவனாவேன்.”
Ibisobanuro by'icyarabu:
Inyungu dukura muri ayat kuri Uru rupapuro:
• تؤكد الأحداث أن بني إسرائيل كانوا ينتقلون من ضلالة إلى أخرى على الرغم من وجود نبي الله موسى بينهم.
1. இஸ்ரவேலர்கள் - அல்லாஹ்வின் தூதர் மூஸா அலை அவர்கள் அவர்களிடையே இருந்த போதும் ஒரு வழிகேட்டிலிருந்து இன்னொரு வழிகேட்டை நோக்கிச் செல்பவர்களாக இருந்தார்கள் என்பதை நிகழ்வுகள் உறுதி செய்கின்றன.

• من مظاهر خذلان الأمة أن تُحَسِّن القبيح، وتُقَبِّح الحسن بمجرد الرأي والأهواء.
2. சமூகத்தின் பலவீனுத்தின் வெளிப்பாடுகளில் ஒன்று, வெறும் சிந்தனை மற்றும் மனஇச்சையின் அடிப்படையில் கெட்டவற்றை நல்லவையாகவும் நல்லவற்றைக் கெட்டவையாகவும் அச்சமுதாயம் கருதுவதாகும்.

• إصلاح الأمة وإغلاق أبواب الفساد هدف سام للأنبياء والدعاة.
3. சமூகத்தை சீர்படுத்துவதும் குழப்பங்களின் வாயில்களை அடைப்பதும் தூதர்கள் மற்றும் அழைப்பாளர்களின் ஓர் உயரிய இலக்காகும்.

• قضى الله تعالى ألا يراه أحد من خلقه في الدنيا، وسوف يكرم من يحب من عباده برؤيته في الآخرة.
4. இந்த உலகில் தன்னை எந்தப் படைப்பினமும் காணமுடியாது என்று அல்லாஹ் முடிவுசெய்துள்ளான். மறுமையில் தான் விரும்பும் அடியார்களை அவனைப் பார்ப்பதன் மூலம் கண்ணியப்படுத்துவான்.

 
Ibisobanuro by'amagambo Umurongo: (143) Isura: Al A’araf
Urutonde rw'amasura numero y'urupapuro
 
Ibisobanuro bya qoran ntagatifu - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Ishakiro ry'ibisobanuro

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Gufunga