Check out the new design

ශුද්ධවූ අල් කුර්ආන් අර්ථ කථනය - ශුද්ධ වූ අල්කුර්ආන් අර්ථ විවරණයේ සංෂිප්ත අනුවාදය - දෙමළ පරිවර්තනය * - පරිවර්තන පටුන


අර්ථ කථනය පරිච්ඡේදය: තාහා   වාක්‍යය:
اِذْ اَوْحَیْنَاۤ اِلٰۤی اُمِّكَ مَا یُوْحٰۤی ۟ۙ
20.38. ஃபிர்அவ்னின் சூழ்ச்சியிலிருந்து அல்லாஹ் உம்மை பாதுகாக்கும் விதத்தில் ஒர் உதிப்பை நாம் உம் தாய்க்கு ஏற்படுத்தினோம்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
اَنِ اقْذِفِیْهِ فِی التَّابُوْتِ فَاقْذِفِیْهِ فِی الْیَمِّ فَلْیُلْقِهِ الْیَمُّ بِالسَّاحِلِ یَاْخُذْهُ عَدُوٌّ لِّیْ وَعَدُوٌّ لَّهٗ ؕ— وَاَلْقَیْتُ عَلَیْكَ مَحَبَّةً مِّنِّیْ ۚ۬— وَلِتُصْنَعَ عَلٰی عَیْنِیْ ۟ۘ
20.39. நாம் அவளுக்கு உள்ளுதிப்பின் மூலம் பின்வருமாறு கட்டளையிட்டோம்: “குழந்தை பிறந்த பிறகு அதனை ஒரு பெட்டியில் வைத்து கடலில் எறிந்து விடுவீராக. நம் கட்டளையின்படி கடல் அதனைக் கரை ஒதுக்கி விடும். அக்குழந்தையை எனக்கும் அக்குழந்தைக்கும் எதிரியாக இருக்கின்ற ஃபிர்அவ்ன் எடுப்பான்.” நான் உம்மீது என் அன்பைப் பொழிந்துள்ளேன். அதனால் மக்களும் உம்மை நேசித்தனர். நீர் என் கண்காணிப்பில், பாதுகாப்பில் பராமரிப்பில் வளர வேண்டும் என்பதற்காக.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
اِذْ تَمْشِیْۤ اُخْتُكَ فَتَقُوْلُ هَلْ اَدُلُّكُمْ عَلٰی مَنْ یَّكْفُلُهٗ ؕ— فَرَجَعْنٰكَ اِلٰۤی اُمِّكَ كَیْ تَقَرَّ عَیْنُهَا وَلَا تَحْزَنَ ؕ۬— وَقَتَلْتَ نَفْسًا فَنَجَّیْنٰكَ مِنَ الْغَمِّ وَفَتَنّٰكَ فُتُوْنًا ۫۬— فَلَبِثْتَ سِنِیْنَ فِیْۤ اَهْلِ مَدْیَنَ ۙ۬— ثُمَّ جِئْتَ عَلٰی قَدَرٍ یّٰمُوْسٰی ۟
20.40. பெட்டியை பின்தொடர்ந்துகொண்டே உம் சகோதரி சென்றாள். அக்குழந்தையை எடுத்தவர்களிடம் உம் சகோதரி கூறினாள்: “நான் உங்களுக்கு இக்குழந்தையை பாதுகாத்து பாலூட்டி, வளர்க்கும் ஒருவரைக் குறித்து அறிவிக்கட்டுமா?” உம் தாய் மகிழ்ச்சியடைவதற்காக, உம்மைக் குறித்து கவலையடையாமல் இருப்பதற்காக உம்மை அவளிடம் திரும்பச் செய்து உம்மீது அருள்புரிந்தோம். நீர் கிப்தி குலத்தைச் சேர்ந்த ஒருவரைக் கொன்றுவிட்டீர். அதனால் கிடைக்கும் தண்டனையிலிருந்து நாம் உம்மைக் காப்பாற்றி உம்மீது அருள்புரிந்தோம். உமக்கு ஒன்றன் பின் ஒன்றாக ஏற்பட்ட ஒவ்வொரு சோதனையிலிருந்தும் உம்மை விடுவித்தோம். நீர் மத்யன்வாசிகளிடம் நீண்ட காலம் தங்கியிருந்தீர். பின்னர் மூஸாவே உரையாடுவதற்கு உமக்கு விதிக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்தில் வந்தீர்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَاصْطَنَعْتُكَ لِنَفْسِیْ ۟ۚ
20.41. நான் உமக்கு வஹியாக அறிவிப்பவற்றை நீர் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காக நான் உம்மை என் புறத்திலிருந்து தூதராக தேர்ந்தெடுத்தேன்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
اِذْهَبْ اَنْتَ وَاَخُوْكَ بِاٰیٰتِیْ وَلَا تَنِیَا فِیْ ذِكْرِیْ ۟ۚ
20.42. -மூஸாவே!- நீரும் உம் சகோதரர் ஹாரூனும் அல்லாஹ்வின் ஆற்றலையும் அவனது ஏகத்துவத்தையும் அறிவிக்கக்கூடிய நம்முடைய சான்றுகளுடன் செல்லுங்கள். என் பக்கம் அழைப்பதைவிட்டும் என்னை நினைவுகூர்வதைவிட்டும் சோர்ந்துவிடாதீர்கள்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
اِذْهَبَاۤ اِلٰی فِرْعَوْنَ اِنَّهٗ طَغٰی ۟ۚۖ
20.43. நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள். நிச்சயமாக அவன் அல்லாஹ்வை நிராகரிப்பதில் பிடிவாதமாக இருந்து வரம்பு மீறிவிட்டான்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
فَقُوْلَا لَهٗ قَوْلًا لَّیِّنًا لَّعَلَّهٗ یَتَذَكَّرُ اَوْ یَخْشٰی ۟
20.44. அவன் அறிவுரையை ஏற்று அல்லாஹ்வை அஞ்சி பாவமன்னிப்பு கோரும் பொருட்டு கடினமற்ற மென்மையான வார்த்தைகளை அவனுக்குக் கூறுங்கள்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
قَالَا رَبَّنَاۤ اِنَّنَا نَخَافُ اَنْ یَّفْرُطَ عَلَیْنَاۤ اَوْ اَنْ یَّطْغٰی ۟
20.45. மூஸாவும் ஹாரூனும் கூறினார்கள்: “எங்களின் அழைப்பை நிறைவுசெய்வதற்கு முன்பே அவன் எங்களைத் தண்டித்துவிடுவான் அல்லது வரம்புமீறி அநியாயமாக எங்களைக் கொலை அல்லது வேறு ஏதும் செய்துவிடுவான் என்று நிச்சயமாக நாங்கள் அஞ்சுகிறோம்.”
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
قَالَ لَا تَخَافَاۤ اِنَّنِیْ مَعَكُمَاۤ اَسْمَعُ وَاَرٰی ۟
20.46. அல்லாஹ் அவர்கள் இருவருக்கும் கூறினான்: “நீங்கள் அஞ்சாதீர்கள். நான் உதவி செய்வதன் மூலம் உங்களுடன் இருக்கின்றேன். உங்களுக்கும் அவனுக்கும் இடையில் நடப்பதை பார்த்துக்கொண்டும், கேட்டுக்கொண்டும் இருக்கிறேன்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
فَاْتِیٰهُ فَقُوْلَاۤ اِنَّا رَسُوْلَا رَبِّكَ فَاَرْسِلْ مَعَنَا بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۙ۬— وَلَا تُعَذِّبْهُمْ ؕ— قَدْ جِئْنٰكَ بِاٰیَةٍ مِّنْ رَّبِّكَ ؕ— وَالسَّلٰمُ عَلٰی مَنِ اتَّبَعَ الْهُدٰی ۟
20.47. நீங்கள் இருவரும் அவனிடம் சென்று அவனிடம் கூறுங்கள்: “-ஃபிர்அவ்னே!- நாங்கள் இருவரும் உம் இறைவனின் தூதர்களாவோம். எங்களுடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பிவிடும். அவர்களின் ஆண்மக்களைக் கொலைசெய்து பெண்மக்களை உயிருடன் விட்டுவிட்டு அவர்களை வேதனைக்குள்ளாக்காதீர். நாங்கள் உண்மையாளர்கள் என்பதைக் காட்டுவதற்காக உம் இறைவனிடமிருந்து சான்றினைக் கொண்டு வந்துள்ளோம். அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய வழிகாட்டுதலைப் பின்பற்றியவருக்கு அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து பாதுகாப்பு உண்டு.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
اِنَّا قَدْ اُوْحِیَ اِلَیْنَاۤ اَنَّ الْعَذَابَ عَلٰی مَنْ كَذَّبَ وَتَوَلّٰی ۟
20.48. அல்லாஹ்வின் சான்றுகளை பொய்ப்பித்து, தூதர்கள் கொண்டு வந்ததைப் புறக்கணித்தவர்களுக்கே, இவ்வுலகிலும், மறுவுலகிலும் வேதனை உண்டு என்று நிச்சயமாக எங்கள் இறைவன் எங்களுக்கு அறிவித்துள்ளான்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
قَالَ فَمَنْ رَّبُّكُمَا یٰمُوْسٰی ۟
20.49. ஃபிர்அவ்ன் அவர்கள் கொண்டு வந்ததை நிராகரித்தவாறு கேட்டான்: “மூஸாவே! என் பக்கம் உங்கள் இருவரையும் அனுப்பியதாக நீங்கள் எண்ணும் உங்கள் இறைவன் யார்?”
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
قَالَ رَبُّنَا الَّذِیْۤ اَعْطٰی كُلَّ شَیْءٍ خَلْقَهٗ ثُمَّ هَدٰی ۟
20.50. மூஸா கூறினார்: “ஒவ்வொரு படைப்புக்கும் உருவத்தையும் அதற்குப் பொருத்தமான வடிவத்தையும் வழங்கி, பின்பு படைக்கப்பட்டதன் நோக்கத்தின்பால் படைப்பினங்களை வழிகாட்டியவனே எங்கள் இறைவன்.”
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
قَالَ فَمَا بَالُ الْقُرُوْنِ الْاُوْلٰی ۟
20.51. ஃபிர்அவ்ன் கேட்டான்: “நிராகரிப்பில் இருந்த முந்தைய சமூகங்களின் நிலை என்ன?”
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
මෙ⁣ම පිටුවේ තිබෙන වැකිවල ප්‍රයෝජන:
• كمال اعتناء الله بكليمه موسى عليه السلام والأنبياء والرسل، ولورثتهم نصيب من هذا الاعتناء على حسب أحوالهم مع الله.
1. அல்லாஹ் மூஸா மற்றும் இறைத்தூதர்கள், நபிமார்கள் மீது கொண்ட பரிபூரண அக்கறை வெளிப்படுகிறது. அவர்களது வாரிசுகள் அல்லாஹ்வுடன் நடந்துகொள்வதற்கு ஏற்ப அவர்களுக்கும் இந்த அக்கறையில் பங்கு உண்டு.

• من الهداية العامة للمخلوقات أن تجد كل مخلوق يسعى لما خلق له من المنافع، وفي دفع المضار عن نفسه.
2. ஒவ்வொரு படைப்பும் தான் படைக்கப்பட்ட நலவுகளுக்காகப் பாடுபடுவதோடு, தன்னை விட்டும் தீங்கை அகற்றுவதற்கும் முயற்சி செய்வது, படைப்பினங்களுக்குரிய பொது வழிகாட்டலைச் சார்ந்ததாகும்.

• بيان فضيلة الأمر بالمعروف والنهي عن المنكر، وأن ذلك يكون باللين من القول لمن معه القوة، وضُمِنَت له العصمة.
3. நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதன் சிறப்பு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. நிச்சயமாக இது சக்தி (அதிகாரம்) உள்ளவர்களிடம் மென்மையான வார்த்தையில்தான் எடுத்துரைக்கப்பட வேண்டும். நன்மையை ஏவி தீமையைத் தடுப்பவர்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளது.

• الله هو المختص بعلم الغيب في الماضي والحاضر والمستقبل.
4. இறந்த, நிகழ், எதிர் காலத்திலுள்ள மறைவானவற்றை அறிவதில் அல்லாஹ் மாத்திரமே விசேடமானவன்.

 
අර්ථ කථනය පරිච්ඡේදය: තාහා
සූරා පටුන පිටු අංක
 
ශුද්ධවූ අල් කුර්ආන් අර්ථ කථනය - ශුද්ධ වූ අල්කුර්ආන් අර්ථ විවරණයේ සංෂිප්ත අනුවාදය - දෙමළ පරිවර්තනය - පරිවර්තන පටුන

අල්කුර්ආන් අධ්‍යයන සඳහා වූ තෆ්සීර් මධ්‍යස්ථානය විසින් නිකුත් කරන ලදී.

වසන්න