Check out the new design

ශුද්ධවූ අල් කුර්ආන් අර්ථ කථනය - ශුද්ධ වූ අල්කුර්ආන් අර්ථ විවරණයේ සංෂිප්ත අනුවාදය - දෙමළ පරිවර්තනය * - පරිවර්තන පටුන


අර්ථ කථනය පරිච්ඡේදය: අන් නාසිආත්   වාක්‍යය:

அந்நாஸிஆத்

සූරාවෙහි අරමුණු:
التذكير بالله واليوم الآخر.
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஞாபகமூட்டல்

وَالنّٰزِعٰتِ غَرْقًا ۟ۙ
79.1. நிராகரிப்பாளர்களின் உயிர்களை கடுமையாகப், பலவந்தமாக பற்றியிழுக்கும் வானவர்களைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கின்றான்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَّالنّٰشِطٰتِ نَشْطًا ۟ۙ
79.2. நம்பிக்கையாளர்களின் உயிர்களை இலகுவாக, மென்மையாகக் கைப்பற்றும் வானவர்களைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கின்றான்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَّالسّٰبِحٰتِ سَبْحًا ۟ۙ
79.3. அல்லாஹ்வின் கட்டளையைக்கொண்டு வானத்திலிருந்து பூமியை நோக்கி நீந்திச் செல்லும் வானவர்களைக்கொண்டு அவன் சத்தியம் செய்கின்றான்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
فَالسّٰبِقٰتِ سَبْقًا ۟ۙ
79.4. அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுவதில் தம்மில் சிலரை முந்திக்கொண்டு செயற்படும் வானவர்களைக் கொண்டு அவன் சத்தியம் செய்துள்ளான்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
فَالْمُدَبِّرٰتِ اَمْرًا ۟ۘ
79.5. அடியார்களின் செயல்களுக்கு பொறுப்புச்சாட்டப்பட்ட வானவர்களைப் போன்ற அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தும் வானவர்களைக் கொண்டு அவன் சத்தியம் செய்கின்றான். விசாரணை செய்யப்படுவதற்காகவும் கூலி வழங்கப்படுவதற்காகவும் அவர்கள் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்பட்டே தீருவார்கள் என்பதற்கே இவையனைத்தின் மீதும் அவன் சத்தியம் செய்துள்ளான்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
یَوْمَ تَرْجُفُ الرَّاجِفَةُ ۟ۙ
79.6. முதல் முறை சூர் ஊதப்படும்போது பூமி குலுங்கிவிடும் நாளில்
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
تَتْبَعُهَا الرَّادِفَةُ ۟ؕ
79.7. அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையும் சூர் ஊதப்படும்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
قُلُوْبٌ یَّوْمَىِٕذٍ وَّاجِفَةٌ ۟ۙ
79.8. அந்த நாளில் நிராகரிப்பாளர்கள் மற்றும் பாவிகளின் உள்ளங்கள் பயந்து கொண்டிருக்கும்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
اَبْصَارُهَا خَاشِعَةٌ ۟ۘ
79.9. அவர்களின் பார்வையில் இழிவின் அடையாளம் காணப்படும்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
یَقُوْلُوْنَ ءَاِنَّا لَمَرْدُوْدُوْنَ فِی الْحَافِرَةِ ۟ؕ
79.10. “நாம் இறந்தபிறகு மீண்டும் வாழ்க்கையின் பக்கம் திரும்புவோமோ? என்று கேட்பவர்களாக இருக்கிறார்கள்:
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
ءَاِذَا كُنَّا عِظَامًا نَّخِرَةً ۟ؕ
79.11. நாம் உக்கிய எலும்புகளாகிவிட்டாலும் அதன்பிறகு திரும்புவோமா?”
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
قَالُوْا تِلْكَ اِذًا كَرَّةٌ خَاسِرَةٌ ۟ۘ
79.12. அவர்கள் கூறுவார்கள்: “நாம் திரும்பினால் அந்த திரும்புதல் நஷ்டம்தான். அவ்வாறு திரும்புபவன் ஏமாற்றத்திற்குள்ளானவனாவான்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
فَاِنَّمَا هِیَ زَجْرَةٌ وَّاحِدَةٌ ۟ۙ
79.13. மீண்டும் எழுப்பப்படுவது இலகுவானது. நிச்சயமாக சூர் ஊதுவதற்காக நியமிக்கப்பட்ட வானவரிடமிருந்து வெளிப்படும் ஒரேயொரு பெரும் சப்தம்தான்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
فَاِذَا هُمْ بِالسَّاهِرَةِ ۟ؕ
79.14. உடனே பூமியின் வயிற்றில் இறந்துகிடக்கின்ற அனைவரும் அதன் மேற்பரப்பில் உயிர்பெற்றவர்களாகி விடுவார்கள்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
هَلْ اَتٰىكَ حَدِیْثُ مُوْسٰی ۟ۘ
79.15. -தூதரே!- தனது இறைவனுடனும் தனது எதிரியான பிர்அவ்னுடனும் மூஸாவுக்கு நடந்த சம்பவம் உம்மிடம் வந்ததா?
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
اِذْ نَادٰىهُ رَبُّهٗ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًی ۟ۚ
79.16. அவரது இறைவன் அவரை துவா என்ற புனிதமான பள்ளத்தாக்கில் அழைத்தபோது
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
මෙ⁣ම පිටුවේ තිබෙන වැකිවල ප්‍රයෝජන:
• التقوى سبب دخول الجنة.
1. இறையச்சம் சுவனத்தின்பால் இட்டுச் செல்லும் காரணியாக இருக்கின்றது.

• تذكر أهوال القيامة دافع للعمل الصالح.
2. மறுமையின் பயங்கரங்களைச் சிந்திப்பது நற்காரியம் புரிவதற்குத் தூண்டக்கூடியதாகும்.

• قبض روح الكافر بشدّة وعنف، وقبض روح المؤمن برفق ولين.
3. நிராகரிப்பாளனின் ஆத்மா பலவந்தமாகவும் கடுமையாகவும் நம்பிக்கையாளனின் ஆத்மா மிருதுவாகவும் கைப்பற்றப்படும்.

 
අර්ථ කථනය පරිච්ඡේදය: අන් නාසිආත්
සූරා පටුන පිටු අංක
 
ශුද්ධවූ අල් කුර්ආන් අර්ථ කථනය - ශුද්ධ වූ අල්කුර්ආන් අර්ථ විවරණයේ සංෂිප්ත අනුවාදය - දෙමළ පරිවර්තනය - පරිවර්තන පටුන

අල්කුර්ආන් අධ්‍යයන සඳහා වූ තෆ්සීර් මධ්‍යස්ථානය විසින් නිකුත් කරන ලදී.

වසන්න