ශුද්ධවූ අල් කුර්ආන් අර්ථ කථනය - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

පිටු අංක:close

external-link copy
15 : 10

وَاِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیَاتُنَا بَیِّنٰتٍ ۙ— قَالَ الَّذِیْنَ لَا یَرْجُوْنَ لِقَآءَنَا ائْتِ بِقُرْاٰنٍ غَیْرِ هٰذَاۤ اَوْ بَدِّلْهُ ؕ— قُلْ مَا یَكُوْنُ لِیْۤ اَنْ اُبَدِّلَهٗ مِنْ تِلْقَآئِ نَفْسِیْ ۚ— اِنْ اَتَّبِعُ اِلَّا مَا یُوْحٰۤی اِلَیَّ ۚ— اِنِّیْۤ اَخَافُ اِنْ عَصَیْتُ رَبِّیْ عَذَابَ یَوْمٍ عَظِیْمٍ ۟

இவர்கள் மீது தெளிவான நம் வசனங்கள் ஓதப்பட்டால் நம் சந்திப்பை ஆதரவு வைக்காதவர்கள் “இது அல்லாத (வேறு) ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரீர்; அல்லது (எங்கள் இஷ்டப்படி) நீர் அதை மாற்றுவீராக” என்று கூறுகின்றனர். “என் புறத்திலிருந்து அதை நான் மாற்றுவது என்னால் முடியாது. எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறொன்றை) நான் பின்பற்ற மாட்டேன். என் இறைவனுக்கு நான் மாறுசெய்தால் மகத்தான நாளின் வேதனையை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்” என்று (நபியே!) கூறுவீராக. info
التفاسير:

external-link copy
16 : 10

قُلْ لَّوْ شَآءَ اللّٰهُ مَا تَلَوْتُهٗ عَلَیْكُمْ وَلَاۤ اَدْرٰىكُمْ بِهٖ ۖؗۗ— فَقَدْ لَبِثْتُ فِیْكُمْ عُمُرًا مِّنْ قَبْلِهٖ ؕ— اَفَلَا تَعْقِلُوْنَ ۟

(மேலும்) கூறுவீராக! “அல்லாஹ் நாடியிருந்தால், நான் இதை உங்கள் மீது ஓதியிருக்கவும் மாட்டேன்; இன்னும் அவன் உங்களுக்கு இதை அறிவித்திருக்கவும் மாட்டான். இதற்கு முன்னர் ஒரு (நீண்ட) காலம் உங்களுடன் வசித்துள்ளேன். நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?” info
التفاسير:

external-link copy
17 : 10

فَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰی عَلَی اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِاٰیٰتِهٖ ؕ— اِنَّهٗ لَا یُفْلِحُ الْمُجْرِمُوْنَ ۟

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனைவிட அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்ப்பித்தவனைவிட பெரும் அநியாயக்காரன் யார்? நிச்சயமாக குற்றவாளிகள் வெற்றிபெற மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
18 : 10

وَیَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا یَضُرُّهُمْ وَلَا یَنْفَعُهُمْ وَیَقُوْلُوْنَ هٰۤؤُلَآءِ شُفَعَآؤُنَا عِنْدَ اللّٰهِ ؕ— قُلْ اَتُنَبِّـُٔوْنَ اللّٰهَ بِمَا لَا یَعْلَمُ فِی السَّمٰوٰتِ وَلَا فِی الْاَرْضِ ؕ— سُبْحٰنَهٗ وَتَعٰلٰی عَمَّا یُشْرِكُوْنَ ۟

அல்லாஹ்வை அன்றி அவர்களுக்கு தீங்கிழைக்காத, அவர்களுக்கு பலனளிக்காதவற்றை வணங்குகிறார்கள்; இன்னும் “இவை அல்லாஹ்விடம் எங்கள் சிபாரிசாளர்கள்” என்று கூறுகின்றனர். (ஆகவே, நபியே!) “வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்கு அவன் அறியாதவற்றை நீங்கள் அறிவிக்கிறீர்களா? அவன் மிகப் பரிசுத்தமானவன்; அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு அவன் உயர்ந்துவிட்டான்” என்று கூறுவீராக. info
التفاسير:

external-link copy
19 : 10

وَمَا كَانَ النَّاسُ اِلَّاۤ اُمَّةً وَّاحِدَةً فَاخْتَلَفُوْا ؕ— وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ لَقُضِیَ بَیْنَهُمْ فِیْمَا فِیْهِ یَخْتَلِفُوْنَ ۟

மனிதர்கள் (அனைவரும் ஒரே மார்க்கத்தைப் பின்பற்றும்) ஒரே ஒரு சமுதாயமாகவே தவிர இருக்கவில்லை. பிறகு (பொறாமையினால் தங்களுக்குள்) மாறுபட்டனர். (செயலுக்குரிய கூலி மறுமையில்தான் என்ற) உம் இறைவனின் சொல் முந்தியிருக்கவில்லையெனில், (அவர்கள்) மாறுபடுகின்றவற்றில் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்! info
التفاسير:

external-link copy
20 : 10

وَیَقُوْلُوْنَ لَوْلَاۤ اُنْزِلَ عَلَیْهِ اٰیَةٌ مِّنْ رَّبِّهٖ ۚ— فَقُلْ اِنَّمَا الْغَیْبُ لِلّٰهِ فَانْتَظِرُوْا ۚ— اِنِّیْ مَعَكُمْ مِّنَ الْمُنْتَظِرِیْنَ ۟۠

“ஓர் அத்தாட்சி அவர் மீது அவருடைய இறைவனிடமிருந்து இறக்கப்பட்டிருக்க வேண்டாமா?” என்று அவர்கள் கூறுகின்றனர். (அதற்கு நபியே!) கூறுவீராக! “மறைவானவை எல்லாம் அல்லாஹ்வுக்குரியனவே. ஆகவே, நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நான் உங்களுடன் எதிர்பார்ப்பவர்களில் இருக்கிறேன்.” info
التفاسير: