Check out the new design

Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - El Muhtesar fi tefsir el Kuran el Kerim - Përkthimi tamilisht * - Përmbajtja e përkthimeve


Përkthimi i kuptimeve Surja: Hud   Ajeti:
وَیٰقَوْمِ لَاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ مَالًا ؕ— اِنْ اَجْرِیَ اِلَّا عَلَی اللّٰهِ وَمَاۤ اَنَا بِطَارِدِ الَّذِیْنَ اٰمَنُوْا ؕ— اِنَّهُمْ مُّلٰقُوْا رَبِّهِمْ وَلٰكِنِّیْۤ اَرٰىكُمْ قَوْمًا تَجْهَلُوْنَ ۟
11.29. என் சமூகமே! தூதை எடுத்துரைக்கும் பணிக்கு நான் உங்களிடம் எந்தப் பொருளையும் கேட்கவில்லை. எனது கூலி அல்லாஹ்விடமே உள்ளது. நீங்கள் விரட்டி விடுமாறு வேண்டும் நம்பிக்கை கொண்ட ஏழைகளை நான் எனது அவையிலிருந்து விரட்டுபவனல்ல. நிச்சயமாக அவர்கள் மறுமை நாளில் தங்கள் இறைவனை சந்திக்கக் கூடியவர்கள். அவர்களின் நம்பிக்கைக்கு அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான். ஆனால் நம்பிக்கை கொண்ட ஏழைகளை விரட்டுமாறு கோரும் உங்களை இந்த அழைப்பின் யதார்த்தத்தை புரியாத மக்களாகவே நான் காண்கிறேன்.
Tefsiret në gjuhën arabe:
وَیٰقَوْمِ مَنْ یَّنْصُرُنِیْ مِنَ اللّٰهِ اِنْ طَرَدْتُّهُمْ ؕ— اَفَلَا تَذَكَّرُوْنَ ۟
11.30. என் சமூகமே! நம்பிக்கைகொண்ட பாவம் செய்யாத இவர்களை அநியாயமாக நான் விரட்டிவிட்டால் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து என்னைக் காப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து, உங்களுக்குப் பயனளிக்கக்கூடியவற்றில் ஈடுபடமாட்டீர்களா?
Tefsiret në gjuhën arabe:
وَلَاۤ اَقُوْلُ لَكُمْ عِنْدِیْ خَزَآىِٕنُ اللّٰهِ وَلَاۤ اَعْلَمُ الْغَیْبَ وَلَاۤ اَقُوْلُ اِنِّیْ مَلَكٌ وَّلَاۤ اَقُوْلُ لِلَّذِیْنَ تَزْدَرِیْۤ اَعْیُنُكُمْ لَنْ یُّؤْتِیَهُمُ اللّٰهُ خَیْرًا ؕ— اَللّٰهُ اَعْلَمُ بِمَا فِیْۤ اَنْفُسِهِمْ ۖۚ— اِنِّیْۤ اِذًا لَّمِنَ الظّٰلِمِیْنَ ۟
11.31. -என் சமூகமே!- நீங்கள் நம்பிக்கை கொண்டால் உங்களுக்கு செலவு செய்யத்தக்க அல்லாஹ்வின் ரிஸ்க் உள்ள அவனது கருவூலங்கள் என்னிடம் உள்ளது என்றும், நான் மறைவானவற்றை அறிவேன் என்றும் நான் ஒரு வானவர் என்றும் நான் உங்களிடம் கூறமாட்டேன். மாறாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். நீங்கள் இழிவாகக் கருதும் ஏழைகளுக்கு அல்லாஹ் நேர்வழிகாட்ட மாட்டான் என்றும் நான் கூறமாட்டேன். அவர்களின் எண்ணங்களையும், நிலைகளையும் அல்லாஹ் நன்கறிந்தவன். நான் இவையனைத்தும் என்னிடம் இருப்பதாக வாதிட்டால் தண்டனைக்குரிய அநியாயக்காரர்களில் ஒருவனாகி விடுவேன்.
Tefsiret në gjuhën arabe:
قَالُوْا یٰنُوْحُ قَدْ جَادَلْتَنَا فَاَكْثَرْتَ جِدَالَنَا فَاْتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟
11.32. அவர்கள் பிடிவாதத்துடனும் கர்வத்துடனும் கூறினார்கள்: “நூஹே! நீர் எங்களுடன் அதிகமாகவே தர்க்கம் செய்து விட்டீர். நீர் கூறும் விஷயத்தில் உண்மையாளராக இருந்தால் நீர் எங்களை எச்சரிக்கும் வேதனையைக் கொண்டு வாரும்.”
Tefsiret në gjuhën arabe:
قَالَ اِنَّمَا یَاْتِیْكُمْ بِهِ اللّٰهُ اِنْ شَآءَ وَمَاۤ اَنْتُمْ بِمُعْجِزِیْنَ ۟
11.33. நூஹ் அவர்களிடம் கூறினார்: “வேதனையை நான் உங்களிடம் கொண்டுவர முடியாது. அல்லாஹ் நாடினால் அவனே உங்களிடம் வேதனையைக் கொண்டு வருவான். அவன் உங்களைத் தண்டிக்க நாடினால் அவனுடைய தண்டனையிலிருந்து தப்புவதற்கு நீங்கள் ஆற்றல் உள்ளவர்களல்ல.”
Tefsiret në gjuhën arabe:
وَلَا یَنْفَعُكُمْ نُصْحِیْۤ اِنْ اَرَدْتُّ اَنْ اَنْصَحَ لَكُمْ اِنْ كَانَ اللّٰهُ یُرِیْدُ اَنْ یُّغْوِیَكُمْ ؕ— هُوَ رَبُّكُمْ ۫— وَاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟ؕ
11.34. நேரான பாதையை விட்டு அல்லாஹ் உங்களை வழிகெடுக்க நாடினால், உங்களின் பிடிவாதத்தின் காரணமாக அவன் நேர்வழியை விட்டும் உங்களைக் கைவிட விரும்பினால் என் அறிவுரையும் நினைவூட்டலும் உங்களுக்குப் பயனளிக்காது. அவனே உங்களின் இறைவன். உங்களின் விவகாரங்களுக்கு அவனே அதிபதியாவான். எனவே அவன் நாடினால் உங்களை வழிதவறச் செய்து விடுவான். மறுமை நாளில் அவன் பக்கமே நீங்கள் திரும்ப வேண்டும். அவன் உங்களின் செயல்களுக்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான்.
Tefsiret në gjuhën arabe:
اَمْ یَقُوْلُوْنَ افْتَرٰىهُ ؕ— قُلْ اِنِ افْتَرَیْتُهٗ فَعَلَیَّ اِجْرَامِیْ وَاَنَا بَرِیْٓءٌ مِّمَّا تُجْرِمُوْنَ ۟۠
11.35. நூஹுடைய சமூகத்தின் நிராகரிப்புக்குக் காரணம் அவராகக் கொண்டு வந்த இம்மார்க்கத்தை அல்லாஹ்வின் மீது அவர் புனைகிறார் என்பதேயாகும். தூதரே! அவர்களிடம் நீர் கூறுவீராக: “நான் புனைந்து கூறியிருந்தால் என் குற்றத்தின் தண்டனை என்னையே சாரும். உங்கள் நிராகரிப்பின் பாவத்தில் எதையும் என்னால் சுமக்க முடியாது. நான் அவற்றை விட்டும் நீங்கியவனாவேன்.”
Tefsiret në gjuhën arabe:
وَاُوْحِیَ اِلٰی نُوْحٍ اَنَّهٗ لَنْ یُّؤْمِنَ مِنْ قَوْمِكَ اِلَّا مَنْ قَدْ اٰمَنَ فَلَا تَبْتَىِٕسْ بِمَا كَانُوْا یَفْعَلُوْنَ ۟ۚ
11.36. அல்லாஹ் நூஹிற்கு வஹி அறிவித்தான்: -“நூஹே!- உம் சமூகத்தில் ஏற்கனவே நம்பிக்கை கொண்டவர்களைத் தவிர இனி யாரும் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள். அவர்கள் நீண்ட காலமாக செய்து கொண்டிருந்த நிராகரிப்பு, பரிகாசம் ஆகியவற்றிற்காக -“நூஹே!- நீர் கவலைப்படாதீர்.”
Tefsiret në gjuhën arabe:
وَاصْنَعِ الْفُلْكَ بِاَعْیُنِنَا وَوَحْیِنَا وَلَا تُخَاطِبْنِیْ فِی الَّذِیْنَ ظَلَمُوْا ۚ— اِنَّهُمْ مُّغْرَقُوْنَ ۟
11.37. நம்முடைய கண்காணிப்பில் வஹியின் மூலம் நாம் கற்றுத் தருவதன்படி ஒரு கப்பலைச் செய்வீராக. நிராகரித்து தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டவர்களுக்காக அவகாசம் அளிக்கும்படி என்னிடம் வேண்டாதீர். நிச்சயமாக நிராகரிப்பில் நிலைத்திருந்ததற்குத் தண்டனையாக வெள்ளத்தில் -சந்தேகம் இல்லாமல்- அவர்களும் மூழ்குபவர்களே.
Tefsiret në gjuhën arabe:
Dobitë e ajeteve të kësaj faqeje:
• عفة الداعية إلى الله وأنه يرجو منه الثواب وحده.
1. அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைப்பவரது பக்குவமும், நிச்சயமாக அவர் அல்லாஹ் ஒருவனிடமே கூலியை எதிர்பார்ப்பார் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

• حرمة طرد فقراء المؤمنين، ووجوب إكرامهم واحترامهم.
2. நம்பிக்கைகொண்ட ஏழைகளை ஒருபோதும் விரட்டிவிடுவது ஹராமாகும். அவர்களைக் கண்ணியப்படுத்த வேண்டியது கடமையாகும்.

• استئثار الله تعالى وحده بعلم الغيب.
3. மறைவானவற்றின் ஞானம் அல்லாஹ் ஒருவனிடமே உள்ளது.

• مشروعية جدال الكفار ومناظرتهم.
4. நிராகரிப்பாளர்களுடன் விவாதம் புரியலாம்.

 
Përkthimi i kuptimeve Surja: Hud
Përmbajtja e sureve Numri i faqes
 
Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - El Muhtesar fi tefsir el Kuran el Kerim - Përkthimi tamilisht - Përmbajtja e përkthimeve

Botuar nga Qendra e Tefsirit për Studime Kuranore.

Mbyll