Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - El Muhtesar fi tefsir el Kuran el Kerim - Përkthimi tamilisht

external-link copy
10 : 11

وَلَىِٕنْ اَذَقْنٰهُ نَعْمَآءَ بَعْدَ ضَرَّآءَ مَسَّتْهُ لَیَقُوْلَنَّ ذَهَبَ السَّیِّاٰتُ عَنِّیْ ؕ— اِنَّهٗ لَفَرِحٌ فَخُوْرٌ ۟ۙ

11.10. அவனுக்கு ஏற்பட்ட வறுமைக்கும் நோய்க்கும் பிறகு அவனது வாழ்வாதாரத்தில் விசாலத்தையும் ஆரோக்கியத்தையும் வழங்கினால், “தீங்கு என்னை விட்டு அகன்று விட்டது, துன்பம் என்னை விட்டு நீங்கி விட்டது” என்று கூறுகிறான். அதற்காக அவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதில்லை. பெருமிதம் கொள்பவனாகவும் அல்லாஹ் தனக்கு அளித்த அருட்கொடைகளைக் கொண்டு மக்களை அதிகம் அவமதிப்பவனாகவும் பெருமை பேசித் திரிபவனாகவும் இருக்கின்றான். info
التفاسير:
Dobitë e ajeteve të kësaj faqeje:
• سعة علم الله تعالى وتكفله بأرزاق مخلوقاته من إنسان وحيوان وغيرهما.
1. அல்லாஹ்வின் அறிவு விசாலமானது. மனிதர்கள் மிருகங்கள் மற்றும் ஏனைய தனது படைப்புகளின் வாழ்வாதாரத்திற்கு அவன் பொறுப்பேற்றுக் கொண்டான். info

• بيان علة الخلق؛ وهي اختبار العباد بامتثال أوامر الله واجتناب نواهيه.
2. அடியார்கள் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகியிருக்கிறார்களா என்பதை சோதிப்பதே படைப்பின் நோக்கமாகும். info

• لا ينبغي الاغترار بإمهال الله تعالى لأهل معصيته، فإنه قد يأخذهم فجأة وهم لا يشعرون.
3. பாவிகளுக்கு அல்லாஹ் அளிக்கும் அவகாசத்தைக் கண்டு ஏமாந்து விடக்கூடாது. அவர்கள் உணராத வகையில் திடீரென்று அவன் அவர்களைப் பிடித்துவிடுவான். info

• بيان حال الإنسان في حالتي السعة والشدة، ومدح موقف المؤمن المتمثل في الصبر والشكر.
4. இன்பத்திலும் துன்பத்திலும் மனிதனின் நிலை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. நன்றியும் பொறுமையும் உடைய நம்பிக்கையாளனின் நிலைப்பாடு புகழ்ந்து கூறப்பட்டுள்ளது. info