Check out the new design

Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - El Muhtesar fi tefsir el Kuran el Kerim - Përkthimi tamilisht * - Përmbajtja e përkthimeve


Përkthimi i kuptimeve Surja: El Enbija   Ajeti:
فَجَعَلَهُمْ جُذٰذًا اِلَّا كَبِیْرًا لَّهُمْ لَعَلَّهُمْ اِلَیْهِ یَرْجِعُوْنَ ۟
21.58. இப்ராஹீம் அவர்களது சிலைகளை சிறிய துண்டுகளாக ஆகுமளவு உடைத்துவிட்டார், பெரிய சிலையை மாத்திரம் விட்டுவிட்டார். அவர்கள் அதனிடம் திரும்பி வந்து அவற்றை உடைத்தவனைக் குறித்து கேட்க வேண்டும் என்பதற்காக.
Tefsiret në gjuhën arabe:
قَالُوْا مَنْ فَعَلَ هٰذَا بِاٰلِهَتِنَاۤ اِنَّهٗ لَمِنَ الظّٰلِمِیْنَ ۟
21.59. அவர்கள் திரும்பி வந்து, தங்களின் சிலைகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும், அவர்களில் சிலர் சிலரிடம் கேட்டார்கள்: “நம்முடைய தெய்வங்களை உடைத்தது யார்? நிச்சயமாக நம்முடைய சிலைகளை உடைத்தவன் அநியாயக்காரனாகத்தான் இருப்பான். அவன் கண்ணியம், புனிதம் என்பவற்றுக்குத் தகுதியானதை இழிவுபடுத்திவிட்டான்.
Tefsiret në gjuhën arabe:
قَالُوْا سَمِعْنَا فَتًی یَّذْكُرُهُمْ یُقَالُ لَهٗۤ اِبْرٰهِیْمُ ۟ؕ
21.60. அவர்களில் சிலர் கூறினார்கள்: “ஒரு இளைஞரைக் குறித்து நாங்கள் கேள்விப்பட்டோம், அவர் இந்த சிலைகளைக் குறைகூறிக் கொண்டிருந்தார். அவருக்கு இப்ராஹீம் என்று சொல்லப்படும். அவர்தான் இந்த சிலைகளை உடைத்திருக்கலாம்.”
Tefsiret në gjuhën arabe:
قَالُوْا فَاْتُوْا بِهٖ عَلٰۤی اَعْیُنِ النَّاسِ لَعَلَّهُمْ یَشْهَدُوْنَ ۟
21.61. அவர்களின் தலைவர்கள் கூறினார்கள்: “தான் செய்ததை இப்ராஹீம் ஒத்துக்கொள்வதை அனைவரும் பார்ப்பதற்காக அவரை மக்கள் முன்னிலையில் அழைத்து வாருங்கள். அவ்வாறு அவரே ஏற்றுக்கொள்வது அவருக்கெதிரான, உங்களுக்குச் சார்பான ஆதாரமாகிவிடலாம்.”
Tefsiret në gjuhën arabe:
قَالُوْۤا ءَاَنْتَ فَعَلْتَ هٰذَا بِاٰلِهَتِنَا یٰۤاِبْرٰهِیْمُ ۟ؕ
21.62. அவர்கள் இப்ராஹீமை அழைத்து வந்து, அவரிடம் கேட்டார்கள்: “இப்ராஹீமே! நீயா எங்களுடைய சிலைகளுக்கு இந்த மோசமான செயலைச் செய்தாய்?”
Tefsiret në gjuhën arabe:
قَالَ بَلْ فَعَلَهٗ ۖۗ— كَبِیْرُهُمْ هٰذَا فَسْـَٔلُوْهُمْ اِنْ كَانُوْا یَنْطِقُوْنَ ۟
21.63. இப்ராஹீம் அந்த சிலைகளின் இயலாமையை மக்களுக்குப் புரிய வைப்பதற்காக அவர்களைப் பரிகாசம் செய்தவராகக் கூறினார்: “நான் இவ்வாறு செய்யவில்லை. மாறாக அவற்றில் பெரிய சிலைதான் இவ்வாறு செய்தது. உங்கள் சிலைகள் பேசக்கூடியவையாக இருந்தால் அவற்றிடமே கேட்டுப் பாருங்கள்.”
Tefsiret në gjuhën arabe:
فَرَجَعُوْۤا اِلٰۤی اَنْفُسِهِمْ فَقَالُوْۤا اِنَّكُمْ اَنْتُمُ الظّٰلِمُوْنَ ۟ۙ
21.64. அவர்கள் தமக்குள் திரும்பி சிந்தித்தார்கள். நிச்சயமாக அவர்களின் சிலைகள் பலனளிக்கவோ, தீங்கிழைக்கவோ சக்தியற்றவை, அல்லாஹ்வை விடுத்து அந்த சிலைகளை வணங்கிய அவர்கள் அநியாயக்காரர்களே என்பதை அறிந்துகொண்டார்கள்.
Tefsiret në gjuhën arabe:
ثُمَّ نُكِسُوْا عَلٰی رُءُوْسِهِمْ ۚ— لَقَدْ عَلِمْتَ مَا هٰۤؤُلَآءِ یَنْطِقُوْنَ ۟
21.65. பின்னர் மீண்டும் மறுப்பு, பிடிவாதமாகக் கூறினார்கள்: “-இப்ராஹீமே!- நிச்சயமாக இந்த சிலைகள் பேசாது என்பதை நீ உறுதியாக அறிவாய். பிறகு எப்படி அவற்றிடம் கேட்கும்படி எங்களை ஏவுகிறாய்.” அவர்கள் அதனை தங்களுக்கு சாதகமான ஆதாரமாக மாற்ற நாடினார்கள். ஆனால் அது அவர்களுக்கு எதிரான ஆதாரமாகிவிட்டது.
Tefsiret në gjuhën arabe:
قَالَ اَفَتَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا یَنْفَعُكُمْ شَیْـًٔا وَّلَا یَضُرُّكُمْ ۟ؕ
21.66. இப்ராஹீம் அவர்களைக் கண்டித்துக் கூறினார்: “நீங்கள் அல்லாஹ்வை விடுத்து உங்களுக்குப் பலனளிக்கவோ, தீங்கிழைக்கவோ சக்தியற்ற இந்த சிலைகளையா வணங்குகிறீர்கள். அவை தம்மை விட்டும் தீங்கைத் தடுக்கவோ, தமக்குப் பயனளிக்கவோ சக்தியற்றவை.
Tefsiret në gjuhën arabe:
اُفٍّ لَّكُمْ وَلِمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ— اَفَلَا تَعْقِلُوْنَ ۟
21.67. உங்களுக்கும் அல்லாஹ்வை விடுத்து பலனளிக்கவோ, தீங்கிழைக்கவோ சக்தியற்ற நீங்கள் வணங்கும் இந்த சிலைகளுக்கும் கேடுதான் உண்டாகும். இதை நீங்கள் விளங்கிக்கொண்டு, அவற்றை வணங்குவதை விட்டுவிட மாட்டீர்களா?
Tefsiret në gjuhën arabe:
قَالُوْا حَرِّقُوْهُ وَانْصُرُوْۤا اٰلِهَتَكُمْ اِنْ كُنْتُمْ فٰعِلِیْنَ ۟
21.68. ஆதாரத்தைக்கொண்டு அவரை எதிர்கொள்ள முடியாததால் அதிகாரத்தின்பால் அவர்கள் அடைக்கலம் தேடினார்கள். அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் அவருக்கு கடுமையாக தண்டனை வழங்குவோராக இருந்தால் அவர் உடைத்த உங்கள் சிலைகளுக்கு உதவிசெய்யும் பொருட்டு இப்ராஹீமை நெருப்பால் எரித்துவிடுங்கள்.”
Tefsiret në gjuhën arabe:
قُلْنَا یٰنَارُ كُوْنِیْ بَرْدًا وَّسَلٰمًا عَلٰۤی اِبْرٰهِیْمَ ۟ۙ
21.69. நெருப்பை மூட்டி அதில் அவரைப் போட்டார்கள். நாம் கூறினோம்: “நெருப்பே! இப்ராஹீமின் மீது குளிர்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் ஆகிவிடு.” அது அவ்வாறே ஆகியது. அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.”
Tefsiret në gjuhën arabe:
وَاَرَادُوْا بِهٖ كَیْدًا فَجَعَلْنٰهُمُ الْاَخْسَرِیْنَ ۟ۚ
21.70. அவரை நெருப்பில் போட்டு பொசுக்கிவிட இப்ராஹீமின் சமூகம் சூழ்ச்சி செய்தார்கள். நாம் அவர்களின் சூழ்ச்சியை ஒன்றுமில்லாமல் ஆக்கி, அவர்களை அடக்கி, அழித்துவிட்டோம்.
Tefsiret në gjuhën arabe:
وَنَجَّیْنٰهُ وَلُوْطًا اِلَی الْاَرْضِ الَّتِیْ بٰرَكْنَا فِیْهَا لِلْعٰلَمِیْنَ ۟
21.71. நாம் அவரையும், லூத்தையும் காப்பாற்றினோம். நாம் தூதர்களை அனுப்பி, படைப்பினங்களுக்கு பல நலவுகளை வழங்கி, அருள்செய்த ஷாம் தேசத்தின்பால் அவர்கள் இருவரையும் கொண்டு சேர்த்தோம்.
Tefsiret në gjuhën arabe:
وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ ؕ— وَیَعْقُوْبَ نَافِلَةً ؕ— وَكُلًّا جَعَلْنَا صٰلِحِیْنَ ۟
21.72. இப்ராஹீம் தம் இறைவனிடம் தனக்கு ஒரு மகனை அளிக்கும்படி பிரார்த்தனை செய்தபோது நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும் அதிகப்படியாக யஃகூபையும் வழங்கினோம். இப்ராஹீம், அவரது இரு மகன்கள் இஸ்ஹாக், யஃகூபு என ஒவ்வொருவரையும் அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிந்த நல்லவர்களாக ஆக்கினோம்.
Tefsiret në gjuhën arabe:
Dobitë e ajeteve të kësaj faqeje:
• جواز استخدام الحيلة لإظهار الحق وإبطال الباطل.
1. சத்தியத்தை மேலோங்கச் செய்வதற்காக, அசத்தியத்தை ஒழிப்பதற்காக தந்திரங்களைப் பயன்படுத்தலாம்.

• تعلّق أهل الباطل بحجج يحسبونها لهم، وهي عليهم.
2. அசத்தியவாதிகள் தங்களுக்கு எதிரான ஆதாரத்தை தமக்குச் சாதகமான ஆதாரமாக எண்ணி அதைப் பற்றிக்கொள்வார்கள்.

• التعنيف في القول وسيلة من وسائل التغيير للمنكر إن لم يترتّب عليه ضرر أكبر.
3. தீமையை கடுமையாக எதிர்ப்பதில் குறித்த தீமையை விட பெரிய பாதிப்புகள் இல்லையெனில் அது தீமையைத் தடுக்கும் ஒரு சாதனமே.

• اللجوء لاستخدام القوة برهان على العجز عن المواجهة بالحجة.
4. பலத்தை பயன்படுத்த முடிவெடுப்பது ஆதாரத்தால் எதிர்கொள்ள முடியாததன் அடையாளமாகும்.

• نَصْر الله لعباده المؤمنين، وإنقاذه لهم من المحن من حيث لا يحتسبون.
5. நம்பிக்கையாளர்களான தனது அடியார்களுக்கு அல்லாஹ் உதவி செய்தலும், சோதனைகளிலிருந்து அவர்கள் எதிர்பாராத விதத்தில் அவன் காப்பாற்றுவதும்.

 
Përkthimi i kuptimeve Surja: El Enbija
Përmbajtja e sureve Numri i faqes
 
Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - El Muhtesar fi tefsir el Kuran el Kerim - Përkthimi tamilisht - Përmbajtja e përkthimeve

Botuar nga Qendra e Tefsirit për Studime Kuranore.

Mbyll