Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - El Muhtesar fi tefsir el Kuran el Kerim - Përkthimi tamilisht

external-link copy
4 : 22

كُتِبَ عَلَیْهِ اَنَّهٗ مَنْ تَوَلَّاهُ فَاَنَّهٗ یُضِلُّهٗ وَیَهْدِیْهِ اِلٰی عَذَابِ السَّعِیْرِ ۟

22.4. வரம்புமீறிய இந்த மனித மற்றும் ஜின் இனத்திலுள்ள ஷைத்தானை யார் பின்பற்றி அவனை உண்மைப்படுத்துவார்களோ அவன் அவர்களை சத்தியப் பாதையைவிட்டுத் திருப்பி நிராகரிப்பு, பாவங்கள் ஆகியவற்றுக்கு வழிகாட்டி, நரக நெருப்பின் பக்கம் இழுத்துச் சென்றுவிடுவான் என்று விதிக்கப்பட்டுள்ளது. info
التفاسير:
Dobitë e ajeteve të kësaj faqeje:
• وجوب الاستعداد ليوم القيامة بزاد التقوى.
1. தக்வா எனும் முன்னேற்பாடுகளைச் செய்து மறுமை நாளுக்காக தயாராவது கட்டாயமாகும். info

• شدة أهوال القيامة حيث تنسى المرضعة طفلها وتسقط الحامل حملها وتذهب عقول الناس.
2. மறுமையின் பயங்கரங்கள் கடுமையானவை. எந்தளவுக்கெனில் பாலூட்டும் தாய் தனது குழந்தையை மறந்து விடுவாள். கர்ப்பிணி தனது கருவை ஈன்றுவிடுவாள். மனிதர்களின் புத்தி நீங்கிவிடும். info

• التدرج في الخلق سُنَّة إلهية.
3. படிப்படியாக படைப்பது இறை நியதியாகும். info

• دلالة الخلق الأول على إمكان البعث.
4. ஆரம்பமாகப் படைத்தது மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவது சாத்தியம் என்பதற்கான ஆதாரமாகும். info

• ظاهرة المطر وما يتبعها من إنبات الأرض دليل ملموس على بعث الأموات.
5. மழை மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெறும் பூமியின் விளைச்சல் மரணித்தவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதற்கான பௌதீக ஆதாரமாகும். info