Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Përmbajtja e përkthimeve


Përkthimi i kuptimeve Ajeti: (9) Surja: Suretu Er Rrum
اَوَلَمْ یَسِیْرُوْا فِی الْاَرْضِ فَیَنْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ— كَانُوْۤا اَشَدَّ مِنْهُمْ قُوَّةً وَّاَثَارُوا الْاَرْضَ وَعَمَرُوْهَاۤ اَكْثَرَ مِمَّا عَمَرُوْهَا وَجَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ ؕ— فَمَا كَانَ اللّٰهُ لِیَظْلِمَهُمْ وَلٰكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟ؕ
30.9. இவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து தங்களுக்கு முன்னர் பொய்ப்பித்தவர்களின் கதி என்னவாயிற்று என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? இந்த சமூகங்கள் அவர்களைவிட பலம்பெற்றவையாக இருந்தனர். அவர்கள் விவசாயத்திற்காகவும் கட்டடம் கட்டுவதற்காகவும் பூமியைப் பண்படுத்தி அதனை இவர்களைவிட அதிகம் செழிப்பாக்கினார்கள். அவர்களின் தூதர்கள் அவர்களிடம் அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குரியவன் என்பதை அறிவிக்கும் தெளிவான சான்றுகளோடு வந்தார்கள். ஆயினும் அவர்கள் பொய்ப்பித்தார்கள். அல்லாஹ் அவர்களை அழித்த போது அவர்கள் மீது அநீதி இழைக்கவில்லை. மாறாக அவர்கள் நிராகரித்து அழிவிற்கான காரணிகளைத் தேடி தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டார்கள்.
Tefsiret në gjuhën arabe:
Dobitë e ajeteve të kësaj faqeje:
• العلم بما يصلح الدنيا مع الغفلة عما يصلح الآخرة لا ينفع.
1. மறுமையைச் சீராக்குபவற்றை மறந்து உலகை சீராக்குபவற்றை அறிந்துகொள்வது பயனளிக்காது.

• آيات الله في الأنفس وفي الآفاق كافية للدلالة على توحيده.
2. உயிர்களுக்குள்ளும் பிரபஞ்சத்திற்குள்ளும் காணப்படும் சான்றுகள் அல்லாஹ்வின் ஒருமைத் தன்மையை அறிவிக்கப் போதுமானவையாக இருக்கின்றன.

• الظلم سبب هلاك الأمم السابقة.
3. முந்தைய சமூகங்களின் அழிவிற்கான காரணம் அநியாயமாகும்.

• يوم القيامة يرفع الله المؤمنين، ويخفض الكافرين.
4. மறுமை நாளில் அல்லாஹ் நம்பிக்கையாளர்களை உயர்த்தி நிராகரிப்பாளர்களைத் தாழ்த்துவான்.

 
Përkthimi i kuptimeve Ajeti: (9) Surja: Suretu Er Rrum
Përmbajtja e sureve Numri i faqes
 
Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Përmbajtja e përkthimeve

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Mbyll