Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - El Muhtesar fi tefsir el Kuran el Kerim - Përkthimi tamilisht

external-link copy
23 : 36

ءَاَتَّخِذُ مِنْ دُوْنِهٖۤ اٰلِهَةً اِنْ یُّرِدْنِ الرَّحْمٰنُ بِضُرٍّ لَّا تُغْنِ عَنِّیْ شَفَاعَتُهُمْ شَیْـًٔا وَّلَا یُنْقِذُوْنِ ۟ۚ

36.23. என்னைப் படைத்த அல்லாஹ்வை விடுத்து நான் அநியாயமாக மற்றவர்களை தெய்வங்களாக்கிக் கொள்வேனா? அளவிலாக் கருணையாளன் எனக்கு ஏதேனும் தீங்கிழைக்க நாடினால் இந்த தெய்வங்களின் பரிந்துரைகள் எனக்கு எந்தப் பயனையும் அளிக்காது. அவை எனக்கு பலனளிக்கவோ, தீங்கிழைக்கவோ சக்தி பெறாது. நான் நிராகரித்த நிலையிலேயே இறந்தால் அல்லாஹ் எனக்கு நாடியிருக்கும் தீங்கிலிருந்து என்னைக் காப்பாற்ற அவை சக்தி பெறாது. info
التفاسير:
Dobitë e ajeteve të kësaj faqeje:
• أهمية القصص في الدعوة إلى الله.
1. அல்லாஹ்வின்பால் அழைக்கும் பணியில் சம்பவங்களின் முக்கியத்துவம் தெளிவாகிறது. info

• الطيرة والتشاؤم من أعمال الكفر.
2. துர்ச்சகுனம் பார்ப்பது நிராகரிப்பான செயல்களில் ஒன்றாகும். info

• النصح لأهل الحق واجب .
3. சத்தியவாதிகளுக்கு நலம் நாடுவது கட்டாயமாகும். info

• حب الخير للناس صفة من صفات أهل الإيمان.
4. மக்களுக்கு நன்மையை விரும்புவது நம்பிக்கையாளர்களின் பண்புகளில் ஒன்றாகும். info