Check out the new design

Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - El Muhtesar fi tefsir el Kuran el Kerim - Përkthimi tamilisht * - Përmbajtja e përkthimeve


Përkthimi i kuptimeve Ajeti: (81) Surja: En Nisa
وَیَقُوْلُوْنَ طَاعَةٌ ؗ— فَاِذَا بَرَزُوْا مِنْ عِنْدِكَ بَیَّتَ طَآىِٕفَةٌ مِّنْهُمْ غَیْرَ الَّذِیْ تَقُوْلُ ؕ— وَاللّٰهُ یَكْتُبُ مَا یُبَیِّتُوْنَ ۚ— فَاَعْرِضْ عَنْهُمْ وَتَوَكَّلْ عَلَی اللّٰهِ ؕ— وَكَفٰی بِاللّٰهِ وَكِیْلًا ۟
4.81. இந்த நயவஞ்சகர்கள் தங்களின் நாவால், “நாங்கள் உமது கட்டளைக்குக் கட்டுப்படுகிறோம், அதனைச் செயல்படுத்துகிறோம்” என்று கூறுகிறார்கள். ஆனால் உம்மைவிட்டுச் சென்றவுடன் அவர்களில் ஒரு பிரிவினர் தாங்கள் கூறியதற்கு மாறாக மறைவில் சூழ்ச்சி செய்கிறார்கள். அவர்கள் சூழ்ச்சி செய்வதை அல்லாஹ் அறிகிறான். அவர்களின் இந்த சூழ்ச்சிகளுக்கு அவன் தண்டனை வழங்குவான். அவர்களின் பக்கம் கவனம் செலுத்தாதீர். அவர்கள் உமக்கு எந்தத் தீங்கையும் ஏற்படுத்திவிட முடியாது. உமது காரியங்களை அல்லாஹ்விடம் ஒப்படைப்பீராக. அவனையே நம்பி இருப்பீராக. நீர் நம்பிக்கை வைப்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
Tefsiret në gjuhën arabe:
Dobitë e ajeteve të kësaj faqeje:
• تدبر القرآن الكريم يورث اليقين بأنه تنزيل من الله؛ لسلامته من الاضطراب، ويظهر عظيم ما تضمنه من الأحكام.
1. குர்ஆனைச் சிந்திப்பது அது அல்லாஹ்விடமிருந்து இறங்கிய வேதமே என்ற உறுதியான நம்பிக்கையை ஏற்படுத்தும். ஏனெனில் அதில் எவ்வித முரண்பாடும் கிடையாது. மேலும் அவ்வாறு சிந்திப்பது அது உள்ளடக்கியிருக்கும் சட்டங்களிள் பெறுமதியையும் தெளிவுபடுத்தும்.

• لا يجوز نشر الأخبار التي تنشأ عنها زعزعة أمن المؤمنين، أو دبُّ الرعب بين صفوفهم.
2. முஸ்லிம்களின் அமைதியைக் குழைக்கும் அல்லது அவர்களுக்கு மத்தியில் பீதியை ஏற்படுத்தும் செய்திகளை வெளியிடக்கூடாது.

• التحدث بقضايا المسلمين والشؤون العامة المتصلة بهم يجب أن يصدر من أهل العلم وأولي الأمر منهم.
3. முஸ்லிம்களின் பொதுவிவகாரங்கள் பற்றிய தகவல்கள் அறிஞர்கள் மற்றும் அதிகாரம் உடையவர்கள் மூலமே வெளியிடப்படவேண்டும்.

• مشروعية الشفاعة الحسنة التي لا إثم فيها ولا اعتداء على حقوق الناس، وتحريم كل شفاعة فيها إثم أو اعتداء.
4. பாவமோ மனிதர்களது உரிமைகளில் வரம்புமீறலோ அற்ற நல்ல பரிந்துரை அனுமதிக்கப்பட்டுள்ளது. பாவங்களும் வரம்புமீறலும் கலந்துள்ள தீய பரிந்துரை தடுக்கப்பட்டுள்ளது.

 
Përkthimi i kuptimeve Ajeti: (81) Surja: En Nisa
Përmbajtja e sureve Numri i faqes
 
Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - El Muhtesar fi tefsir el Kuran el Kerim - Përkthimi tamilisht - Përmbajtja e përkthimeve

Botuar nga Qendra e Tefsirit për Studime Kuranore.

Mbyll