Check out the new design

Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - El Muhtesar fi tefsir el Kuran el Kerim - Përkthimi tamilisht * - Përmbajtja e përkthimeve


Përkthimi i kuptimeve Ajeti: (7) Surja: Esh Shura
وَكَذٰلِكَ اَوْحَیْنَاۤ اِلَیْكَ قُرْاٰنًا عَرَبِیًّا لِّتُنْذِرَ اُمَّ الْقُرٰی وَمَنْ حَوْلَهَا وَتُنْذِرَ یَوْمَ الْجَمْعِ لَا رَیْبَ فِیْهِ ؕ— فَرِیْقٌ فِی الْجَنَّةِ وَفَرِیْقٌ فِی السَّعِیْرِ ۟
42.7. -தூதரே!- உமக்கு முன் வந்த நபிமார்களுக்கு நாம் வஹி அறிவித்தவாறே உமக்கும் அரபி மொழியில் அமைந்துள்ள இந்த குர்ஆனை வஹியாக அறிவித்துள்ளோம். அது மக்காவாசிகளையும் அதனைச் சுற்றி இருக்கின்ற அரபுக்களையும் பின்னர் மனிதர்கள் அனைவரையும் நீர் எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காகவும் முன்னோர்களும் பின்னோர்களும் விசாரணைக்காக ஒரே மைதானத்தில் ஒன்றுதிரட்டப்படும் மறுமை நாளைக் குறித்து நீர் மக்களுக்கு அச்சுறுத்த வேண்டும் என்பதற்காகவும்தான். அந்த நாள் நிகழ்வதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. அந்நாளில் மனிதர்கள் இருபிரிவினராக பிரிந்துவிடுவார்கள். ஒரு பிரிவினர் சுவனத்தில் இருப்பார்கள். அவர்கள் நம்பிக்கையாளர்களாவர். மற்றொரு பிரிவினர் நரகத்தில் இருப்பார்கள் அவர்கள் நிராகரிப்பாளர்களாவர்.
Tefsiret në gjuhën arabe:
Dobitë e ajeteve të kësaj faqeje:
• عظمة الله ظاهرة في كل شيء.
1. அல்லாஹ்வின் மகிமை ஒவ்வொரு பொருளிலும் வெளிப்படுகின்றது.

• دعاء الملائكة لأهل الإيمان بالخير.
2. நம்பிக்கையாளர்களின் நலவுக்காக வானவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.

• القرآن والسُنَّة مرجعان للمؤمنين في شؤونهم كلها، وبخاصة عند الاختلاف.
3.நம்பிக்கையாளர்களின் அனைத்து விவகாரங்களிலும் குறிப்பாக கருத்து வேற்றுமையின் போது குர்ஆன், சுன்னாவே அவர்களின் அடிப்படைகளாகும்.

• الاقتصار على إنذار أهل مكة ومن حولها؛ لأنهم مقصودون بالرد عليهم لإنكارهم رسالته صلى الله عليه وسلم وهو رسول للناس كافة كما قال تعالى: ﴿وَمَآ أَرسَلنُّكَ إلَّا كافةً لِّلنَّاس...﴾، (سبأ: 28).
4. நபியவர்கள் முழு முனிதர்களுக்கும் தூதராக இருந்தாலும் மக்காவாசிகளுக்கும் அதனைச் சூழ உள்ளோருக்கும் எச்சரிக்கை செய்வதற்கு என்று மாத்திரம் கூறப்பட்டதற்குக் காரணம், அவர்கள் அவரின் தூதை மறுத்ததால் அவர்களுக்குப் பதில் கூறுவதன் மூலம் அவர்களே நாடப்படுகிறார்கள் என்பதனாலாகும். அல்லாஹ் கூறுவது போன்று: (இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமேயன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை) ஸபஃ அத்தியாயம்

 
Përkthimi i kuptimeve Ajeti: (7) Surja: Esh Shura
Përmbajtja e sureve Numri i faqes
 
Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - El Muhtesar fi tefsir el Kuran el Kerim - Përkthimi tamilisht - Përmbajtja e përkthimeve

Botuar nga Qendra e Tefsirit për Studime Kuranore.

Mbyll