Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Përmbajtja e përkthimeve


Përkthimi i kuptimeve Ajeti: (104) Surja: Suretu El Maide
وَاِذَا قِیْلَ لَهُمْ تَعَالَوْا اِلٰی مَاۤ اَنْزَلَ اللّٰهُ وَاِلَی الرَّسُوْلِ قَالُوْا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَیْهِ اٰبَآءَنَا ؕ— اَوَلَوْ كَانَ اٰبَآؤُهُمْ لَا یَعْلَمُوْنَ شَیْـًٔا وَّلَا یَهْتَدُوْنَ ۟
5.104. சில கால்நடைகளைத் தடைசெய்வதன் மூலம் அல்லாஹ்வின் மீது அபாண்டமாகப் பொய் கூறும் இவர்களிடம், “அனுமதிக்கப்பட்டவற்றையும் தடைசெய்யப்பட்டவற்றையும் அறிந்துகொள்வதற்காக அல்லாஹ் இறக்கிய குர்ஆனின் பக்கமும் தூதரின் நடைமுறையின் பக்கமும் வாருங்கள்” என்று கூறப்பட்டால், “எங்கள் முன்னோர்களிடமிருந்து நாங்கள் அனந்தரமாகப் பெற்ற கொள்கைகளும், வார்த்தைகளும் நடைமுறைகளுமே, எங்களுக்குப் போதுமானவை” என்று கூறுகிறார்கள். அவை எவ்வாறு அவர்களுக்குப் போதுமானதாக இருக்க முடியும்? அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவுமல்லவா இருந்தனர்! எனவே அவர்களையும் விட மூடர்களாகவும் வழிகெட்டவர்களாகவும் உள்ளவர்களைத் தவிர வேறு யாரும் அவர்களைப் பின்பற்றமாட்டார்கள். அவர்கள் மூடர்களாகவும் வழிகெட்டவர்களாகவும் இருக்கின்றார்கள்.
Tefsiret në gjuhën arabe:
Dobitë e ajeteve të kësaj faqeje:
• إذا ألزم العبد نفسه بطاعة الله، وأمر بالمعروف ونهى عن المنكر بحسب طاقته، فلا يضره بعد ذلك ضلال أحد، ولن يُسْأل عن غيره من الناس، وخاصة أهل الضلال منهم.
1. அடியான் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு தன்னால் இயன்றவரை நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் செயலில் ஈடுபட்டால் மற்றவர்களின் வழிகேடு அவனுக்கு எந்த தீங்கையும் அளிக்காது. அவனிடம் ஏனைய மனிதர்களைக் குறித்து குறிப்பாக வழிகேடர்களைக் குறித்து விசாரிக்கப்பட மாட்டாது.

• الترغيب في كتابة الوصية، مع صيانتها بإشهاد العدول عليها.
2. உயிலை எழுதுமாறும் அதற்கு நீதிமிக்க சாட்சிகளை ஏற்படுத்தி அதனைப் பாதுகாக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

• بيان الصورة الشرعية لسؤال الشهود عن الوصية.
3. உயிலைக் குறித்து சாட்சிகளிடம் விசாரிக்கும் முறை குறித்து மார்க்க வரையறை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

 
Përkthimi i kuptimeve Ajeti: (104) Surja: Suretu El Maide
Përmbajtja e sureve Numri i faqes
 
Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Përmbajtja e përkthimeve

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Mbyll