Check out the new design

Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - El Muhtesar fi tefsir el Kuran el Kerim - Përkthimi tamilisht * - Përmbajtja e përkthimeve


Përkthimi i kuptimeve Surja: El Mudethir   Ajeti:
فَقُتِلَ كَیْفَ قَدَّرَ ۟ۙ
74.19. அவன் சபிக்கப்பட்டு, வேதனைக்குள்ளாக்கப்பட்டான். எவ்வாறு அவன் திட்டமிட்டான்!
Tefsiret në gjuhën arabe:
ثُمَّ قُتِلَ كَیْفَ قَدَّرَ ۟ۙ
74.20. பின்னரும் அவன் சபிக்கப்பட்டு, வேதனைக்குள்ளாக்கப்பட்டான். எவ்வாறு அவன் திட்டமிட்டான்!
Tefsiret në gjuhën arabe:
ثُمَّ نَظَرَ ۟ۙ
74.21. பின்னர் மீண்டும் அவன் தான் கூறுவது குறித்து சிந்தித்தான்.
Tefsiret në gjuhën arabe:
ثُمَّ عَبَسَ وَبَسَرَ ۟ۙ
74.22. பின்னர் குர்ஆனைக் குறித்து குறைகூற எதுவும் பெறாததால் அவன் கடுகடுத்து முகம் சுளித்தான்.
Tefsiret në gjuhën arabe:
ثُمَّ اَدْبَرَ وَاسْتَكْبَرَ ۟ۙ
74.23. பின்னர் நம்பிக்கைகொள்ளாமல் புறக்கணித்தான். நபியை பின்பற்றாமல் கர்வம் கொண்டான்.
Tefsiret në gjuhën arabe:
فَقَالَ اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ یُّؤْثَرُ ۟ۙ
74.24. அவன் கூறினான்: “முஹம்மது கொண்டுவந்தது அல்லாஹ்வின் வாக்கல்ல. மாறாக மற்றவர்களிடமிருந்து பெற்றுக் கூறும் சூனியமாகும்.
Tefsiret në gjuhën arabe:
اِنْ هٰذَاۤ اِلَّا قَوْلُ الْبَشَرِ ۟ؕ
74.25. இது அல்லாஹ்வின் வார்த்தையல்ல. மாறாக மனிதனின் வார்த்தையாகும்.”
Tefsiret në gjuhën arabe:
سَاُصْلِیْهِ سَقَرَ ۟
74.26. விரைவில் இந்த நிராகரிப்பாளனை நான் ‘ஸகர்’ என்னும் நரகத்தில் புகுத்துவேன். அதன் வெப்பத்தை அவன் உணர்வான்.
Tefsiret në gjuhën arabe:
وَمَاۤ اَدْرٰىكَ مَا سَقَرُ ۟ؕ
74.27. -முஹம்மதே!- ‘ஸகர்’ என்றால் என்னவென்று உமக்குத் அறிவித்தது எது?
Tefsiret në gjuhën arabe:
لَا تُبْقِیْ وَلَا تَذَرُ ۟ۚ
74.28. அதில் வேதனை செய்யப்படுபவரில் எதையும் விட்டுவைக்காது. பின்னர் அவன் பழைய நிலைக்குத் திரும்புவான். பின்பும் அது அவனை விடாது. இவ்வாறு மீண்டும் மீண்டும் நிகழ்ந்துகொண்டேயிருக்கும்.
Tefsiret në gjuhën arabe:
لَوَّاحَةٌ لِّلْبَشَرِ ۟ۚ
74.29. அது தோல்களை முற்றிலும் எரித்து மாற்றிவிடும்.
Tefsiret në gjuhën arabe:
عَلَیْهَا تِسْعَةَ عَشَرَ ۟ؕ
74.30. அதன்மீது பத்தொன்பது வானவர்கள் இருப்பார்கள். அவர்கள் அதன் காவலாளிகளாவர்.
Tefsiret në gjuhën arabe:
وَمَا جَعَلْنَاۤ اَصْحٰبَ النَّارِ اِلَّا مَلٰٓىِٕكَةً ۪— وَّمَا جَعَلْنَا عِدَّتَهُمْ اِلَّا فِتْنَةً لِّلَّذِیْنَ كَفَرُوْا ۙ— لِیَسْتَیْقِنَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ وَیَزْدَادَ الَّذِیْنَ اٰمَنُوْۤا اِیْمَانًا وَّلَا یَرْتَابَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ وَالْمُؤْمِنُوْنَ ۙ— وَلِیَقُوْلَ الَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ وَّالْكٰفِرُوْنَ مَاذَاۤ اَرَادَ اللّٰهُ بِهٰذَا مَثَلًا ؕ— كَذٰلِكَ یُضِلُّ اللّٰهُ مَنْ یَّشَآءُ وَیَهْدِیْ مَنْ یَّشَآءُ ؕ— وَمَا یَعْلَمُ جُنُوْدَ رَبِّكَ اِلَّا هُوَ ؕ— وَمَا هِیَ اِلَّا ذِكْرٰی لِلْبَشَرِ ۟۠
74.31. நாம் வானவர்களையே நரகத்தின் காவலாளிகளாக ஆக்கியுள்ளோம். மனிதர்களுக்கு அவர்களை எதிர்க்கும் சக்தி கிடையாது. நாம் அல்லாஹ்வை நிராகரித்தவர்களுக்கு அவர்களின் இந்த எண்ணிக்கையை சோதனையாகவே ஆக்கியுள்ளோம். இது அவர்கள் கூறுவதை கூற வேண்டும். இதனால் அவர்களின் வேதனை பலமடங்கு அதிகமாக வேண்டும் என்பதற்காகவும், தவ்ராத் வழங்கப்பட்ட யூதர்களும் இன்ஜீல் வழங்கப்பட்ட கிறிஸ்தவர்களும் குர்ஆன் அவர்களின் வேதங்களை உண்மைப்படுத்தக்கூடியதாக இறங்கியது என்பதை உறுதியாக அறிந்துகொள்வதற்காகவும், வேதக்காரர்கள் தம்முடன் உடன்படும் போது நம்பிக்கையாளர்களின் நம்பிக்கை அதிகரிப்பதற்காவும், யூதர்களும் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் சந்தேகம் கொள்ளக்கூடாது என்பதற்காவும், நம்பிக்கையில் தடுமாற்றம் உள்ளவர்களும் நிராகரிப்பாளர்களும் “இந்த விசித்திரமான எண்ணிக்கையின் மூலம் அல்லாஹ் என்னதான் நாடுகின்றான்?” என்று கூறுவதற்காகவும்தான். இவ்வாறு இந்த எண்ணிக்கையை நிராகரித்தவனை அல்லாஹ் வழிகெடுத்து அதனை நம்பிக்கை கொண்டவர்களுக்கு நேர்வழியளித்தது போன்று அல்லாஹ் யாரை வழிகெடுக்க நாடுகிறானோ அவரை வழிகெடுக்கிறான், யாருக்கு வழிகாட்ட நாடுகிறானோ அவருக்கு வழிகாட்டுகிறான். உம் இறைவனின் பெரும் படைகளை அவன் மட்டுமே அறிவான். நரகம் மனிதர்களுக்கான நினைவூட்டலேயாகும். அதன் மூலம் அவர்கள் அல்லாஹ்வின் மகத்துவத்தை அறிந்துகொள்வார்கள்.
Tefsiret në gjuhën arabe:
كَلَّا وَالْقَمَرِ ۟ۙ
74.32. இணைவைப்பாளர்களில் சிலர் எண்ணுவதுபோல நரகத்தின் காவலாளிகளை அவரின் சகாக்கள் வீழ்த்திவிட முடியாது. அல்லாஹ் சந்திரனைக் கொண்டு சத்தியம் செய்கின்றான்.
Tefsiret në gjuhën arabe:
وَالَّیْلِ اِذْ اَدْبَرَ ۟ۙ
74.33. பின்னோக்கிச் செல்லும் இரவைக்கொண்டு சத்தியம் செய்கின்றான்.
Tefsiret në gjuhën arabe:
وَالصُّبْحِ اِذَاۤ اَسْفَرَ ۟ۙ
74.34. பிரகாசமான அதிகாலையைக் கொண்டு சத்தியம் செய்கின்றான்.
Tefsiret në gjuhën arabe:
اِنَّهَا لَاِحْدَی الْكُبَرِ ۟ۙ
74.35. நிச்சயமாக நரக நெருப்பு மிகப் பெரும் சோதனைகளில் ஒன்றாகும்.
Tefsiret në gjuhën arabe:
نَذِیْرًا لِّلْبَشَرِ ۟ۙ
74.36. அது மனிதர்களை அச்சுறுத்துவதாக உள்ளது.
Tefsiret në gjuhën arabe:
لِمَنْ شَآءَ مِنْكُمْ اَنْ یَّتَقَدَّمَ اَوْ یَتَاَخَّرَ ۟ؕ
74.37. -மனிதர்களே!- உங்களில் நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரிந்து முன்னோக்கிச் செல்ல விரும்புபவர்கள் முன்னோக்கிச் செல்லட்டும் அல்லது நிராகரித்து, பாவங்கள் புரிந்து பின்னோக்கிச் செல்லட்டும்.
Tefsiret në gjuhën arabe:
كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ رَهِیْنَةٌ ۟ۙ
74.38. ஒவ்வொருவரும் தாம் சம்பாதித்த செயல்களுக்குப் பிணையாக உள்ளார்கள். ஒன்று அவர்களின் செயல்கள் அவர்களை அழிவில் ஆழ்த்திவிடலாம் அல்லது அவை அவர்களை அழிவிலிருந்து காப்பாற்றி விடலாம்.
Tefsiret në gjuhën arabe:
اِلَّاۤ اَصْحٰبَ الْیَمِیْنِ ۟ؕۛ
74.39. ஆயினும் நம்பிக்கையாளர்களைத் தவிர. நிச்சயமாக அவர்கள் தங்களின் பாவங்களின் காரணமாக குற்றம்பிடிக்கப்பட மாட்டார்கள். மாறாக அவர்கள் செய்த நற்செயல்களின் காரணமாக அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்துவிடுவான்.
Tefsiret në gjuhën arabe:
فِیْ جَنّٰتٍ ۛ۫— یَتَسَآءَلُوْنَ ۟ۙ
74.40. அவர்கள் மறுமை நாளில் சுவனங்களில் இருப்பார்கள். ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
Tefsiret në gjuhën arabe:
عَنِ الْمُجْرِمِیْنَ ۟ۙ
74.41. பாவங்கள் புரிந்து தங்களைத் தாங்களே அழிவில் ஆழ்த்திக்கொண்ட நிராகரிப்பாளர்களைக் குறித்து.
Tefsiret në gjuhën arabe:
مَا سَلَكَكُمْ فِیْ سَقَرَ ۟
74.42. அவர்கள் அவர்களிடத்தில் கேட்பார்கள்: “எது உங்களை நரகில் பிரவேசிக்கச் செய்தது?”
Tefsiret në gjuhën arabe:
قَالُوْا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّیْنَ ۟ۙ
74.43. அதற்கு நிராகரிப்பாளர்கள் விடையளித்தவர்களாக கூறுவார்கள்: “நாங்கள் உலக வாழ்க்கையில் கடமையாக்கப்பட்ட தொழுகைகளை நிறைவேற்றுபவர்களாக இருக்கவில்லை.
Tefsiret në gjuhën arabe:
وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِیْنَ ۟ۙ
74.44. அல்லாஹ் எங்களுக்கு வழங்கியவைகளில் நாங்கள் ஏழைகளுக்கு உணவளிக்கக்கூடியவர்களாக இருக்கவில்லை.
Tefsiret në gjuhën arabe:
وَكُنَّا نَخُوْضُ مَعَ الْخَآىِٕضِیْنَ ۟ۙ
74.45. நாங்கள் அசத்தியவாதிகளுடன் அவர்கள் எங்கு சென்றாலும் நாங்களும் அவர்களுடன் சென்று சுற்றிக்கொண்டிருந்தோம். வழிகேடர்களுடன் பேசிக் கொண்டிருந்தோம்.
Tefsiret në gjuhën arabe:
وَكُنَّا نُكَذِّبُ بِیَوْمِ الدِّیْنِ ۟ۙ
74.46. கூலி கொடுக்கப்படும் நாளை நாங்கள் பொய்ப்பித்துக்கொண்டிருந்தோம்.
Tefsiret në gjuhën arabe:
حَتّٰۤی اَتٰىنَا الْیَقِیْنُ ۟ؕ
74.47. எங்களுக்கு மரணம் நேரும்வரை நாங்கள் நிராகரிப்பில் உழன்று கொண்டிருந்தோம். மரணம் எங்களுக்கும் திருந்துவதற்கும் இடையில் தடுப்பாக அமைந்துவிட்டது.
Tefsiret në gjuhën arabe:
Dobitë e ajeteve të kësaj faqeje:
• خطورة الكبر حيث صرف الوليد بن المغيرة عن الإيمان بعدما تبين له الحق.
1. பெருமையின் விபரீதம். அதுதான் சத்தியம் தெளிவான பின்னரும் வலீத் பின் முகீரா ஈமான் கொள்வதை விட்டும் தடுத்தது.

• مسؤولية الإنسان عن أعماله في الدنيا والآخرة.
2. இவ்வுலகிலும் மறுவுலகிலும் தன் செயல்களுக்கு மனிதனே பொறுப்புக்கூறவேண்டும்.

• عدم إطعام المحتاج سبب من أسباب دخول النار.
3. தேவையுடையோருக்கு உணவளிக்காமல் இருப்பது நரகத்தில் பிரவேசிக்கச் செய்யும் காரணிகளில் ஒன்றாகும்.

 
Përkthimi i kuptimeve Surja: El Mudethir
Përmbajtja e sureve Numri i faqes
 
Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - El Muhtesar fi tefsir el Kuran el Kerim - Përkthimi tamilisht - Përmbajtja e përkthimeve

Botuar nga Qendra e Tefsirit për Studime Kuranore.

Mbyll