Check out the new design

Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - El Muhtesar fi tefsir el Kuran el Kerim - Përkthimi tamilisht * - Përmbajtja e përkthimeve


Përkthimi i kuptimeve Ajeti: (62) Surja: El Enfal
وَاِنْ یُّرِیْدُوْۤا اَنْ یَّخْدَعُوْكَ فَاِنَّ حَسْبَكَ اللّٰهُ ؕ— هُوَ الَّذِیْۤ اَیَّدَكَ بِنَصْرِهٖ وَبِالْمُؤْمِنِیْنَ ۟ۙ
8.62. -தூதரே!- போருக்காக தங்களை தயார்படுத்திக் கொள்ளும் எண்ணத்துடன், போரை விட்டு விட்டு சமாதானத்தின் பக்கம் சாய்ந்து அவர்கள் உம்மை ஏமாற்ற நாடினால், அவர்களின் ஏமாற்று சூழ்ச்சியை விட்டும் பாதுகாக்க அல்லாஹ்வே உமக்குப் போதுமானவன். அவன்தான் தன் உதவியால் உம்மை பலப்படுத்தினான். நம்பிக்கைகொண்ட அன்சாரிகள் மற்றும் முஹாஜிர்கள் உதவியாலும் உம்மை பலப்படுத்தினான்.
Tefsiret në gjuhën arabe:
Dobitë e ajeteve të kësaj faqeje:
• في الآيات وَعْدٌ من الله لعباده المؤمنين بالكفاية والنصرة على الأعداء.
1. நம்பிக்கைகொண்ட தன் அடியார்களை பொறுப்பெடுத்துக் கொள்வதாகவும் எதிரிகளுக்கு எதிராக அவர்களுக்கு வெற்றியளிப்பதாகவும் அல்லாஹ் வாக்களித்துள்ளான்.

• الثبات أمام العدو فرض على المسلمين لا اختيار لهم فيه، ما لم يحدث ما يُرَخِّص لهم بخلافه.
2. எதிரிகளுக்கு முன்னால் உறுதியுடன் நிற்பது முஸ்லிம்களின் மீது கட்டாயக் கடமையாகும். அதிலே அவர்கள் வேறு எந்த தெரிவும் கிடையாது, கடமையில்லை என சலுகை வழங்கும் ஏதேனும் நிகழ்வு நடந்தாலே தவிர.

• الله يحب لعباده معالي الأمور، ويكره منهم سَفْسَافَها، ولذلك حثهم على طلب ثواب الآخرة الباقي والدائم.
3. அல்லாஹ் தன் அடியார்களுக்கு உயர்ந்த விஷயங்களை விரும்புகிறான், தாழ்ந்த விஷயங்களை வெறுக்கிறான். எனவேதான் நிலையான மறுமையின் நன்மையைத் தேடுமாறு அவர்களுக்கு ஆர்வமூட்டியுள்ளான்.

• مفاداة الأسرى أو المنّ عليهم بإطلاق سراحهم لا يكون إلا بعد توافر الغلبة والسلطان على الأعداء، وإظهار هيبة الدولة في وجه الآخرين.
4. எதிரிகளின் மீது அதிகாரம் ஏற்பட்டு முஸ்லிம் நாட்டைப் பற்றிய பயம் ஏனையோரிடம் வெளிப்படும் வரை கைதிகளுக்குப் பிணைவழங்கவோ அல்லது அவர்களை இலவசமாக விடுவித்து கருணை காட்டவோ முடியாது.

 
Përkthimi i kuptimeve Ajeti: (62) Surja: El Enfal
Përmbajtja e sureve Numri i faqes
 
Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - El Muhtesar fi tefsir el Kuran el Kerim - Përkthimi tamilisht - Përmbajtja e përkthimeve

Botuar nga Qendra e Tefsirit për Studime Kuranore.

Mbyll