Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

ஹூத்

external-link copy
1 : 11

الٓرٰ ۫— كِتٰبٌ اُحْكِمَتْ اٰیٰتُهٗ ثُمَّ فُصِّلَتْ مِنْ لَّدُنْ حَكِیْمٍ خَبِیْرٍ ۟ۙ

அலிஃப், லாம், றா. (இது) ஒரு வேத நூல். மகா ஞானவான், ஆழ்ந்தறிபவனிடமிருந்து இதன் வசனங்கள் உறுதியாக்கப்பட்டன. பிறகு, தெளிவாக்கப்பட்டன. info
التفاسير:

external-link copy
2 : 11

اَلَّا تَعْبُدُوْۤا اِلَّا اللّٰهَ ؕ— اِنَّنِیْ لَكُمْ مِّنْهُ نَذِیْرٌ وَّبَشِیْرٌ ۟ۙ

“நீங்கள் அல்லாஹ்வைத் தவிர (வேறு எவரையும்) வணங்காதீர்கள்” என்று (தெளிவுபடுத்தப்பட்டது). நிச்சயமாக நான் உங்களுக்கு அவனிடமிருந்து (அனுப்பப்பட்ட) ஓர் எச்சரிப்பாளன், ஓர் நற்செய்தியாளன் ஆவேன். info
التفاسير:

external-link copy
3 : 11

وَّاَنِ اسْتَغْفِرُوْا رَبَّكُمْ ثُمَّ تُوْبُوْۤا اِلَیْهِ یُمَتِّعْكُمْ مَّتَاعًا حَسَنًا اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی وَّیُؤْتِ كُلَّ ذِیْ فَضْلٍ فَضْلَهٗ ؕ— وَاِنْ تَوَلَّوْا فَاِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ عَذَابَ یَوْمٍ كَبِیْرٍ ۟

இன்னும் உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். பிறகு, (நன்மை செய்து) அவன் பக்கம் திரும்புங்கள். (அவ்வாறு செய்தால்) ஒரு குறிப்பிடப்பட்ட காலம் வரை உங்களுக்கு அழகிய சுகமான வாழ்வளிப்பான். அதிகமுடையவ(ர் அதை தர்மம் தரும் போது அவ)ருக்கு (மேலும்) அவருடைய அதிக(செல்வ)த்தை கொடுப்பான். நீங்கள் புறக்கணித்தால் ஒரு மாபெரும் நாளின் வேதனையை நிச்சயமாக நான் உங்கள் மீது பயப்படுகிறேன். info
التفاسير:

external-link copy
4 : 11

اِلَی اللّٰهِ مَرْجِعُكُمْ ۚ— وَهُوَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟

அல்லாஹ்வின் பக்கமே உங்கள் மீளுமிடம் இருக்கிறது. அவன் எல்லாப் பொருள் மீதும் பேராற்றலுடையவன். info
التفاسير:

external-link copy
5 : 11

اَلَاۤ اِنَّهُمْ یَثْنُوْنَ صُدُوْرَهُمْ لِیَسْتَخْفُوْا مِنْهُ ؕ— اَلَا حِیْنَ یَسْتَغْشُوْنَ ثِیَابَهُمْ ۙ— یَعْلَمُ مَا یُسِرُّوْنَ وَمَا یُعْلِنُوْنَ ۚ— اِنَّهٗ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟

(நபியே!) அறிவீராக! நிச்சயமாக இவர்கள் அவனிடமிருந்து மறைப்பதற்காக தங்கள் நெஞ்சங்களை திருப்புகின்றனர். (நபியே!) அறிவீராக! அவர்கள் தங்கள் ஆடைகளால் (தங்களை) மறைத்துக்கொள்ளும் சமயம் அவர்கள் மறைப்பதையும் அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும் அவன் அறிகின்றான். நிச்சயமாக அவன் நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிபவன் ஆவான். info
التفاسير: