Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

இப்ராஹீம்

external-link copy
1 : 14

الٓرٰ ۫— كِتٰبٌ اَنْزَلْنٰهُ اِلَیْكَ لِتُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمٰتِ اِلَی النُّوْرِ ۙ۬— بِاِذْنِ رَبِّهِمْ اِلٰی صِرَاطِ الْعَزِیْزِ الْحَمِیْدِ ۟ۙ

அலிஃப் லாம் றா. (நபியே!) இது ஒரு வேதம். மக்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியின்படி இருள்களிலிருந்து ஒளியின் பக்கம்; மிகைத்தவன், மகா புகழாளன் உடைய பாதையின் பக்கம் நீர் வெளியேற்றுவதற்காக இதை உமக்கு இறக்கி தந்தோம். info
التفاسير:

external-link copy
2 : 14

اللّٰهِ الَّذِیْ لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ— وَوَیْلٌ لِّلْكٰفِرِیْنَ مِنْ عَذَابٍ شَدِیْدِ ۟ۙ

அல்லாஹ், வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே சொந்தமானவையாகும். நிராகரிப்பாளர்களுக்கு கடினமான தண்டனையின் கேடு உண்டாகுக! info
التفاسير:

external-link copy
3 : 14

١لَّذِیْنَ یَسْتَحِبُّوْنَ الْحَیٰوةَ الدُّنْیَا عَلَی الْاٰخِرَةِ وَیَصُدُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ وَیَبْغُوْنَهَا عِوَجًا ؕ— اُولٰٓىِٕكَ فِیْ ضَلٰلٍۢ بَعِیْدٍ ۟

(நிராகரிப்பவர்கள்) மறுமையை விட உலக வாழ்வை விரும்புவார்கள்; அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களை) தடுப்பார்கள்; அதில் கோணலை(யும் குறையையும்) தேடுவார்கள். இவர்கள் தூரமான வழிகேட்டில் உள்ளனர். info
التفاسير:

external-link copy
4 : 14

وَمَاۤ اَرْسَلْنَا مِنْ رَّسُوْلٍ اِلَّا بِلِسَانِ قَوْمِهٖ لِیُبَیِّنَ لَهُمْ ؕ— فَیُضِلُّ اللّٰهُ مَنْ یَّشَآءُ وَیَهْدِیْ مَنْ یَّشَآءُ ؕ— وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟

(நபியே!) எந்த ஒரு தூதரையும் அவருடைய மக்களின் மொழியைக் கொண்டே தவிர நாம் அனுப்பவில்லை. (காரணம்) அவர் அவர்களுக்கு (மார்க்கத்தை) தெளிவுபடுத்துவதற்காக ஆகும். ஆகவே, அல்லாஹ் தான் நாடுபவர்களை வழி கெடுக்கிறான். தான் நாடுபவர்களை நேர்வழி செலுத்து கிறான். அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான். info
التفاسير:

external-link copy
5 : 14

وَلَقَدْ اَرْسَلْنَا مُوْسٰی بِاٰیٰتِنَاۤ اَنْ اَخْرِجْ قَوْمَكَ مِنَ الظُّلُمٰتِ اِلَی النُّوْرِ ۙ۬— وَذَكِّرْهُمْ بِاَیّٰىمِ اللّٰهِ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُوْرٍ ۟

“உம் சமுதாயத்தை இருள்களில் இருந்து ஒளியின் பக்கம் வெளியேற்று; அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவர்களுக்கு ஞாபகமூட்டு” என்று திட்டமாக மூஸாவை நம் அத்தாட்சிகளைக் கொண்டு (அவரது மக்களிடம்) நாம் அனுப்பினோம். மிக பொறுமையாளர், மிக நன்றியறிபவர் எல்லோருக்கும் நிச்சயமாக இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. info
التفاسير: