Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

அல்முஃமினூன்

external-link copy
1 : 23

قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَ ۟ۙ

நம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். info
التفاسير:

external-link copy
2 : 23

الَّذِیْنَ هُمْ فِیْ صَلَاتِهِمْ خٰشِعُوْنَ ۟ۙ

அவர்கள் தங்கள் தொழுகையில் உள்ளச்சமுடையவர்கள். info
التفاسير:

external-link copy
3 : 23

وَالَّذِیْنَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَ ۟ۙ

அவர்கள் வீணான விஷயங்களை விட்டு விலகியவர்கள். info
التفاسير:

external-link copy
4 : 23

وَالَّذِیْنَ هُمْ لِلزَّكٰوةِ فٰعِلُوْنَ ۟ۙ

அவர்கள் ஸகாத்தை நிறைவேற்றக்கூடியவர்கள். info
التفاسير:

external-link copy
5 : 23

وَالَّذِیْنَ هُمْ لِفُرُوْجِهِمْ حٰفِظُوْنَ ۟ۙ

அவர்கள் தங்கள் மர்மஸ்தானங்களை பாதுகாக்கக்கூடியவர்கள், info
التفاسير:

external-link copy
6 : 23

اِلَّا عَلٰۤی اَزْوَاجِهِمْ اَوْ مَا مَلَكَتْ اَیْمَانُهُمْ فَاِنَّهُمْ غَیْرُ مَلُوْمِیْنَ ۟ۚ

தங்கள் மனைவியர்களிடம் அல்லது தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடம் தவிர. நிச்சயமாக இவர்கள் பழிக்கப்படுபவர்கள் அல்லர். info
التفاسير:

external-link copy
7 : 23

فَمَنِ ابْتَغٰی وَرَآءَ ذٰلِكَ فَاُولٰٓىِٕكَ هُمُ الْعٰدُوْنَ ۟ۚ

அதற்குப் பின்னர் உள்ளதை (-மனைவி, அல்லது அடிமைப் பெண்னைத் தவிர உள்ள மற்ற பெண்களிடம்) யார் (சுகம் அனுபவிக்க) தேடுவார்களோ அவர்கள்தான் எல்லை மீறிகள். info
التفاسير:

external-link copy
8 : 23

وَالَّذِیْنَ هُمْ لِاَمٰنٰتِهِمْ وَعَهْدِهِمْ رٰعُوْنَ ۟ۙ

அவர்கள் தங்கள் அமானிதங்களையும் தங்கள் உடன்படிக்கையையும் பேணக்கூடியவர்கள். info
التفاسير:

external-link copy
9 : 23

وَالَّذِیْنَ هُمْ عَلٰی صَلَوٰتِهِمْ یُحَافِظُوْنَ ۟ۘ

அவர்கள் தங்கள் தொழுகைகளை பாதுகாப்பார்கள் (-நேரம் தவறாமல் தொழுவார்கள்). info
التفاسير:

external-link copy
10 : 23

اُولٰٓىِٕكَ هُمُ الْوٰرِثُوْنَ ۟ۙ

அவர்கள்தான் (சொர்க்கத்தை) சொந்தமாக்கிக் கொள்பவர்கள். info
التفاسير:

external-link copy
11 : 23

الَّذِیْنَ یَرِثُوْنَ الْفِرْدَوْسَ ؕ— هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟

’ஃபிர்தவ்ஸ்’ (என்னும்) சொர்க்கத்தை சொந்தமாக்கிக் கொள்வார்கள். அவர்கள் அதில் நிரந்தரமானவர்கள். info
التفاسير:

external-link copy
12 : 23

وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ سُلٰلَةٍ مِّنْ طِیْنٍ ۟ۚ

திட்டவட்டமாக மனிதனை களிமண்ணின் ஈரச்சத்திலிருந்து நாம் படைத்தோம். info
التفاسير:

external-link copy
13 : 23

ثُمَّ جَعَلْنٰهُ نُطْفَةً فِیْ قَرَارٍ مَّكِیْنٍ ۪۟

பிறகு அவனை உறுதியான ஒரு தங்குமிடத்தில் (-தாயின் கற்ப அறையில்) ஒரு இந்திரியத் துளியாக நாம் வைத்தோம். info
التفاسير:

external-link copy
14 : 23

ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظٰمًا فَكَسَوْنَا الْعِظٰمَ لَحْمًا ۗ— ثُمَّ اَنْشَاْنٰهُ خَلْقًا اٰخَرَ ؕ— فَتَبٰرَكَ اللّٰهُ اَحْسَنُ الْخٰلِقِیْنَ ۟ؕ

பிறகு இந்திரியத் துளியை ஒரு இரத்தக் கட்டியாக (-கருவாக) நாம் படைத்தோம். இரத்தக் கட்டியை ஒரு சதைத் துண்டாக நாம் படைத்தோம். சதைத் துண்டை எலும்புகளாக நாம் படைத்தோம். எலும்புகளுக்கு சதையை அணிவித்தோம். பிறகு அவனை (உயிர் ஊதி அதன்மூலம்) வேறு ஒரு (புதிய) படைப்பாக நாம் படைத்தோம். செய்பவர்களில் மிக அழகியவனாகிய அல்லாஹ் மிக்க அருள் வளம் நிறைந்து விட்டான். info
التفاسير:

external-link copy
15 : 23

ثُمَّ اِنَّكُمْ بَعْدَ ذٰلِكَ لَمَیِّتُوْنَ ۟ؕ

பிறகு நிச்சயமாக நீங்கள் இதற்குப் பின்னர் இறப்பெய்யக் கூடியவர்கள் தான். info
التفاسير:

external-link copy
16 : 23

ثُمَّ اِنَّكُمْ یَوْمَ الْقِیٰمَةِ تُبْعَثُوْنَ ۟

பிறகு நிச்சயமாக நீங்கள் மறுமை நாளில் எழுப்பப்படுவீர்கள். info
التفاسير:

external-link copy
17 : 23

وَلَقَدْ خَلَقْنَا فَوْقَكُمْ سَبْعَ طَرَآىِٕقَ ۖۗ— وَمَا كُنَّا عَنِ الْخَلْقِ غٰفِلِیْنَ ۟

திட்டவட்டமாக உங்களுக்கு மேல் ஏழு வானங்களை நாம் படைத்தோம். (-அந்த வானங்களுக்கு கீழே உள்ள நமது) படைப்பைப் பற்றி நாம் கவனமற்றவர்களாக இருக்கவில்லை. info
التفاسير: