Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Numri i faqes:close

external-link copy
46 : 3

وَیُكَلِّمُ النَّاسَ فِی الْمَهْدِ وَكَهْلًا وَّمِنَ الصّٰلِحِیْنَ ۟

"அவர் தொட்டிலில் இருக்கும்போதும், வாலிபராக இருக்கும்போதும் மக்களிடம் பேசுவார். இன்னும் (அவர்) நல்லோரில் உள்ளவர்" (என்றும் வானவர்கள் கூறினார்கள்). info
التفاسير:

external-link copy
47 : 3

قَالَتْ رَبِّ اَنّٰی یَكُوْنُ لِیْ وَلَدٌ وَّلَمْ یَمْسَسْنِیْ بَشَرٌ ؕ— قَالَ كَذٰلِكِ اللّٰهُ یَخْلُقُ مَا یَشَآءُ ؕ— اِذَا قَضٰۤی اَمْرًا فَاِنَّمَا یَقُوْلُ لَهٗ كُنْ فَیَكُوْنُ ۟

"என் இறைவா! ஓர் ஆடவரும் என்னைத் தொடாமல் இருக்க, எனக்கு எவ்வாறு குழந்தை ஏற்படும்?" என்று (மர்யம்) கூறினார். "(காரியம்) இவ்வாறுதான், அல்லாஹ் தான் நாடியதை படைக்கிறான். அவன் ஒரு காரியத்தை முடிவு செய்தால் அதற்கு அவன் கூறுவதெல்லாம் ‘ஆகுகÕ என்றுதான். உடனே (அது) ஆகிவிடும்" என்று (அல்லாஹ்) கூறினான். info
التفاسير:

external-link copy
48 : 3

وَیُعَلِّمُهُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَالتَّوْرٰىةَ وَالْاِنْجِیْلَ ۟ۚ

இன்னும் அவருக்கு எழுதுவதையும் ஞானத்தையும், தவ்றாத்தையும் இன்ஜீலையும் கற்பிப்பான். info
التفاسير:

external-link copy
49 : 3

وَرَسُوْلًا اِلٰی بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۙ۬— اَنِّیْ قَدْ جِئْتُكُمْ بِاٰیَةٍ مِّنْ رَّبِّكُمْ ۙۚ— اَنِّیْۤ اَخْلُقُ لَكُمْ مِّنَ الطِّیْنِ كَهَیْـَٔةِ الطَّیْرِ فَاَنْفُخُ فِیْهِ فَیَكُوْنُ طَیْرًا بِاِذْنِ اللّٰهِ ۚ— وَاُبْرِئُ الْاَكْمَهَ وَالْاَبْرَصَ وَاُحْیِ الْمَوْتٰی بِاِذْنِ اللّٰهِ ۚ— وَاُنَبِّئُكُمْ بِمَا تَاْكُلُوْنَ وَمَا تَدَّخِرُوْنَ ۙ— فِیْ بُیُوْتِكُمْ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لَّكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟ۚ

இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு (அவரை) ஒரு தூதராகவும் (ஆக்குவான்). (ஈஸா தூதரான பிறகு,) நிச்சயமாக நான் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு ஓர் அத்தாட்சியைக் கொண்டு வந்திருக்கிறேன். உங்களுக்காக களிமண்ணிலிருந்து பறவையின் அமைப்பைப்போல் படைத்து, அதில் ஊதுவேன். அல்லாஹ்வின் அனுமதி கொண்டு அது பறவையாக ஆகிவிடும். பிறவிக் குருடரையும் வெண் குஷ்டரையும் குணப்படுத்துவேன். அல்லாஹ்வின் அனுமதி கொண்டு மரணித்தோரையும் உயிர்ப்பிப்பேன். நீங்கள் புசித்தவற்றையும், உங்கள் வீடுகளில் நீங்கள் சேமிப்பதையும் உங்களுக்கு அறிவிப்பேன். நிச்சயமாக நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் இதில் உங்களுக்கு ஓர் அத்தாட்சி திட்டமாக இருக்கிறது (என்று கூறினார்). info
التفاسير:

external-link copy
50 : 3

وَمُصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیَّ مِنَ التَّوْرٰىةِ وَلِاُحِلَّ لَكُمْ بَعْضَ الَّذِیْ حُرِّمَ عَلَیْكُمْ وَجِئْتُكُمْ بِاٰیَةٍ مِّنْ رَّبِّكُمْ ۫— فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟

எனக்கு முன் உள்ள தவ்றாத்தை (நான்) உண்மைப்படுத்துபவராகவும் உங்கள் மீது தடுக்கப்பட்டதில் சிலவற்றை உங்களுக்கு ஆகுமாக்குவதற்காகவும் (அனுப்பப்பட்டுள்ளேன்). இன்னும், உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய)ஓர் அத்தாட்சியை உங்களிடம் கொண்டு வந்திருக்கிறேன். ஆகவே, அல்லாஹ்வை அஞ்சுங்கள்; எனக்கு கீழ்ப்படியுங்கள். info
التفاسير:

external-link copy
51 : 3

اِنَّ اللّٰهَ رَبِّیْ وَرَبُّكُمْ فَاعْبُدُوْهُ ؕ— هٰذَا صِرَاطٌ مُّسْتَقِیْمٌ ۟

நிச்சயமாக அல்லாஹ்தான் என் இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான். ஆகவே, அவனை வணங்குங்கள். இது ஒரு நேர்வழியாகும்'' (என்றும் கூறினார்). info
التفاسير:

external-link copy
52 : 3

فَلَمَّاۤ اَحَسَّ عِیْسٰی مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ اَنْصَارِیْۤ اِلَی اللّٰهِ ؕ— قَالَ الْحَوَارِیُّوْنَ نَحْنُ اَنْصَارُ اللّٰهِ ۚ— اٰمَنَّا بِاللّٰهِ ۚ— وَاشْهَدْ بِاَنَّا مُسْلِمُوْنَ ۟

அவர்களில் (பலர் தம்மை) நிராகரிப்பதை ஈஸா உணர்ந்த போது "அல்லாஹ்விற்காக என் உதவியாளர்கள் யார்?" எனக் கூறினார். தோழர்கள் "நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்கள். அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டோம். நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என (நீர்) சாட்சி அளிப்பீராக" என்று கூறினார்கள். info
التفاسير: