Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Numri i faqes:close

external-link copy
37 : 5

یُرِیْدُوْنَ اَنْ یَّخْرُجُوْا مِنَ النَّارِ وَمَا هُمْ بِخٰرِجِیْنَ مِنْهَا ؗ— وَلَهُمْ عَذَابٌ مُّقِیْمٌ ۟

அவர்கள் நரகிலிருந்து வெளியேற நாடுவார்கள். அதிலிருந்து அவர்கள் வெளியேறுபவர்களாக இல்லை. அவர்களுக்கு நிலையான வேதனையுண்டு. info
التفاسير:

external-link copy
38 : 5

وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوْۤا اَیْدِیَهُمَا جَزَآءً بِمَا كَسَبَا نَكَالًا مِّنَ اللّٰهِ ؕ— وَاللّٰهُ عَزِیْزٌ حَكِیْمٌ ۟

திருடன், திருடி அவர்கள் செய்ததற்கு கூலியாக, அல்லாஹ்விடமிருந்து தண்டனையாக அவ்விருவரின் கரங்களை வெட்டுங்கள். அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான். info
التفاسير:

external-link copy
39 : 5

فَمَنْ تَابَ مِنْ بَعْدِ ظُلْمِهٖ وَاَصْلَحَ فَاِنَّ اللّٰهَ یَتُوْبُ عَلَیْهِ ؕ— اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟

எவர் தன் தீமைக்குப் பின்னர் திருந்தி (அல்லாஹ்வின் பக்கம்) திரும்பி (தன்னைத்) திருத்திக்கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் அவர் மீது பிழை பொறுப்பான். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன். info
التفاسير:

external-link copy
40 : 5

اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— یُعَذِّبُ مَنْ یَّشَآءُ وَیَغْفِرُ لِمَنْ یَّشَآءُ ؕ— وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟

நிச்சயமாக அல்லாஹ், வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்குரியதே என்பதை நீர் அறியவில்லையா? தான் நாடியவரை வேதனை செய்வான். தான் நாடியவரை மன்னிப்பான். அல்லாஹ் எல்லாப் பொருள் மீதும் பேராற்றலுடையவன். info
التفاسير:

external-link copy
41 : 5

یٰۤاَیُّهَا الرَّسُوْلُ لَا یَحْزُنْكَ الَّذِیْنَ یُسَارِعُوْنَ فِی الْكُفْرِ مِنَ الَّذِیْنَ قَالُوْۤا اٰمَنَّا بِاَفْوَاهِهِمْ وَلَمْ تُؤْمِنْ قُلُوْبُهُمْ ۛۚ— وَمِنَ الَّذِیْنَ هَادُوْا ۛۚ— سَمّٰعُوْنَ لِلْكَذِبِ سَمّٰعُوْنَ لِقَوْمٍ اٰخَرِیْنَ ۙ— لَمْ یَاْتُوْكَ ؕ— یُحَرِّفُوْنَ الْكَلِمَ مِنْ بَعْدِ مَوَاضِعِهٖ ۚ— یَقُوْلُوْنَ اِنْ اُوْتِیْتُمْ هٰذَا فَخُذُوْهُ وَاِنْ لَّمْ تُؤْتَوْهُ فَاحْذَرُوْا ؕ— وَمَنْ یُّرِدِ اللّٰهُ فِتْنَتَهٗ فَلَنْ تَمْلِكَ لَهٗ مِنَ اللّٰهِ شَیْـًٔا ؕ— اُولٰٓىِٕكَ الَّذِیْنَ لَمْ یُرِدِ اللّٰهُ اَنْ یُّطَهِّرَ قُلُوْبَهُمْ ؕ— لَهُمْ فِی الدُّنْیَا خِزْیٌ ۙ— وَّلَهُمْ فِی الْاٰخِرَةِ عَذَابٌ عَظِیْمٌ ۟

தூதரே! "நம்பிக்கை கொண்டோம்” என்று தங்கள் வாய்களால் கூறி, அவர்களுடைய உள்ளங்கள் நம்பிக்கை கொள்ளாதவர்களிலிருந்தும் யூதர்களிலிருந்தும் நிராகரிப்பில் தீவிரம் காட்டுபவர்கள் உமக்குக் கவலையூட்டவேண்டாம். (அவர்கள்) பொய்யை அதிகம் செவிமடுக்கிறார்கள். (இதுவரை) உம்மிடம் வராத மற்றொரு கூட்டத்திற்காகவும் அதிகம் செவிமடுக்கின்றனர். (இறை)வசனங்களை அவற்றின் இடங்களிலிருந்து மாற்றுகின்றனர். "நீங்கள் (இந்த நபியிடமிருந்து) இது கொடுக்கப்பட்டால் அதை எடுங்கள். நீங்கள் அதை கொடுக்கப்படவில்லையெனில் (விலகி) எச்சரிக்கையாக இருங்கள்” என்றும் கூறுகின்றனர். அல்லாஹ் எவரை சோதிக்க நாடினானோ அவருக்கு அல்லாஹ்விடம் எதையும் (செய்ய நீர்) உரிமை பெறமாட்டீர். அவர்களுடைய உள்ளங்களைப் பரிசுத்தமாக்க அல்லாஹ் நாடவில்லை. அவர்களுக்கு, இம்மையில் இழிவுண்டு. இன்னும் மறுமையில் அவர்களுக்கு பெரிய வேதனையுண்டு. info
التفاسير: