Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Numri i faqes:close

external-link copy
19 : 6

قُلْ اَیُّ شَیْءٍ اَكْبَرُ شَهَادَةً ؕ— قُلِ اللّٰهُ ۫— شَهِیْدٌۢ بَیْنِیْ وَبَیْنَكُمْ ۫— وَاُوْحِیَ اِلَیَّ هٰذَا الْقُرْاٰنُ لِاُنْذِرَكُمْ بِهٖ وَمَنْ بَلَغَ ؕ— اَىِٕنَّكُمْ لَتَشْهَدُوْنَ اَنَّ مَعَ اللّٰهِ اٰلِهَةً اُخْرٰی ؕ— قُلْ لَّاۤ اَشْهَدُ ۚ— قُلْ اِنَّمَا هُوَ اِلٰهٌ وَّاحِدٌ وَّاِنَّنِیْ بَرِیْٓءٌ مِّمَّا تُشْرِكُوْنَ ۟ۘ

(நபியே!) கூறுவீராக: “எந்த ஒரு பொருள் சாட்சியால் மிகப் பெரியது?” (நபியே!) கூறுவீராக: “அல்லாஹ் (சாட்சியால் மிகப் பெரியவன்)! (அவன்) எனக்கும் உங்களுக்குமிடையில் சாட்சியாளன். இந்த குர்ஆன் எனக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டது, இதன் மூலம் உங்களையும், அது சென்றடைந்தவரையும் நான் எச்சரிப்பதற்காக. நிச்சயமாக நீங்கள், அல்லாஹ்வுடன் வணங்கப்படும் வேறு கடவுள்கள் இருப்பதாக சாட்சி கூறுகிறீர்களா?” (நபியே!) கூறுவீராக: “(நான்) சாட்சி கூறமாட்டேன்!” (நபியே நீர்) கூறுவீராக: “அவனெல்லாம் வணங்கப்படும் ஒரே ஒரு கடவுள்தான். நீங்கள் இணைவைப்பவற்றிலிருந்து நிச்சயமாக நான் விலகியவன்.” info
التفاسير:

external-link copy
20 : 6

اَلَّذِیْنَ اٰتَیْنٰهُمُ الْكِتٰبَ یَعْرِفُوْنَهٗ كَمَا یَعْرِفُوْنَ اَبْنَآءَهُمْ ۘ— اَلَّذِیْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ فَهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟۠

(முன்னர்) வேதத்தை நாம் எவர்களுக்கு கொடுத்தோமோ அவர்கள் தங்கள் குழந்தைகளை அறிவதைப் போல் அதை (-அல்லாஹ் ஒருவன்தான் இறைவன் என்பதையும் நபி உண்மையானவர் என்பதையும்) அறிவார்கள். தங்களுக்கு நஷ்டமிழைத்தவர்கள், அவர்கள் (அதை) நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். info
التفاسير:

external-link copy
21 : 6

وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰی عَلَی اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِاٰیٰتِهٖ ؕ— اِنَّهٗ لَا یُفْلِحُ الظّٰلِمُوْنَ ۟

அல்லாஹ்வின் மீது ஒரு பொய்யை இட்டுக்கட்டியவனை விட அல்லது அவனுடைய வசனங்களை பொய்ப்பித்தவனைவிட மகா அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
22 : 6

وَیَوْمَ نَحْشُرُهُمْ جَمِیْعًا ثُمَّ نَقُوْلُ لِلَّذِیْنَ اَشْرَكُوْۤا اَیْنَ شُرَكَآؤُكُمُ الَّذِیْنَ كُنْتُمْ تَزْعُمُوْنَ ۟

நாம் அவர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டும் நாளில். பிறகு, இணைவைத்தவர்களை நோக்கி, “(கடவுள்கள் என) நீங்கள் எண்ணிக்கொண்டிருந்த உங்கள் இணைகள் எங்கே?” என்று கூறுவோம். info
التفاسير:

external-link copy
23 : 6

ثُمَّ لَمْ تَكُنْ فِتْنَتُهُمْ اِلَّاۤ اَنْ قَالُوْا وَاللّٰهِ رَبِّنَا مَا كُنَّا مُشْرِكِیْنَ ۟

பிறகு, “எங்கள் இறைவா! அல்லாஹ் மீது சத்தியமாக நாங்கள் இணைவைப்பவர்களாக இருக்கவில்லை!” என்று அவர்கள் கூறுவதைத் தவிர அவர்களுடைய சோதனை(யில் பதில் வேறு) இருக்காது. info
التفاسير:

external-link copy
24 : 6

اُنْظُرْ كَیْفَ كَذَبُوْا عَلٰۤی اَنْفُسِهِمْ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا یَفْتَرُوْنَ ۟

அவர்கள் தங்கள் மீதே எவ்வாறு பொய் கூறினர்; அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தவை அவர்களை விட்டு எவ்வாறு மறைந்துவிட்டன என்பதை (நபியே) கவனிப்பீராக! info
التفاسير:

external-link copy
25 : 6

وَمِنْهُمْ مَّنْ یَّسْتَمِعُ اِلَیْكَ ۚ— وَجَعَلْنَا عَلٰی قُلُوْبِهِمْ اَكِنَّةً اَنْ یَّفْقَهُوْهُ وَفِیْۤ اٰذَانِهِمْ وَقْرًا ؕ— وَاِنْ یَّرَوْا كُلَّ اٰیَةٍ لَّا یُؤْمِنُوْا بِهَا ؕ— حَتّٰۤی اِذَا جَآءُوْكَ یُجَادِلُوْنَكَ یَقُوْلُ الَّذِیْنَ كَفَرُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّاۤ اَسَاطِیْرُ الْاَوَّلِیْنَ ۟

(நபியே!) உம் பக்கம் செவிசாய்ப்பவரும் அவர்களில் உண்டு. அவர்களுடைய உள்ளங்களில் அதை புரிந்துகொள்வதற்கு (தடையாக) திரைகளையும், அவர்களுடைய காதுகளில் செவிட்டையும் ஆக்கினோம். எல்லா அத்தாட்சிகளையும் அவர்கள் பார்த்தாலும் அவற்றை (அவர்கள்) நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். (நபியே!) முடிவாக, அவர்கள் உம்மிடம் தர்க்கித்தவர்களாக வந்தால் நிராகரித்த (அ)வர்கள், “இவை முன்னோர்களின் கட்டுக்கதைகளைத் தவிர (வேறு) இல்லை” என்றே கூறுவார்கள். info
التفاسير:

external-link copy
26 : 6

وَهُمْ یَنْهَوْنَ عَنْهُ وَیَنْـَٔوْنَ عَنْهُ ۚ— وَاِنْ یُّهْلِكُوْنَ اِلَّاۤ اَنْفُسَهُمْ وَمَا یَشْعُرُوْنَ ۟

அவர்கள் இதிலிருந்து தடுக்கின்றனர்; இதைவிட்டு தூரமாகின்றனர். (அவர்கள்) தங்களையே தவிர (பிறரை) அழித்துக் கொள்வதில்லை. (அவர்கள் இதை) உணர மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
27 : 6

وَلَوْ تَرٰۤی اِذْ وُقِفُوْا عَلَی النَّارِ فَقَالُوْا یٰلَیْتَنَا نُرَدُّ وَلَا نُكَذِّبَ بِاٰیٰتِ رَبِّنَا وَنَكُوْنَ مِنَ الْمُؤْمِنِیْنَ ۟

நரகத்தின் முன் அவர்கள் நிறுத்தப்படும் போது, (நபியே! நீர் அவர்களைப்) பார்த்தால்... “நாங்கள் திருப்(பி அனுப்)பப்பட வேண்டுமே! எங்கள் இறைவனின் வசனங்களை பொய்ப்பிக்க மாட்டோமே; நம்பிக்கையாளர்களில் ஆகிவிடுவோமே” என்று (அவர்கள்) கூறுவார்கள். info
التفاسير: